பொது மாநாடு
அவர் நமக்கு முன்னே செல்கிறார்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


அவர் நமக்கு முன்னே செல்கிறார்

அவரது சுவிசேஷம் மற்றும் மறுஸ்தாபிதத்தை கர்த்தர் வழிநடத்திக் கொணடிருக்கிறார். அவர் எதிர்காலத்தை பரிபூரணமாக அறிகிறார். பணிக்காக அவர் உங்களை அழைக்கிறார்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 189வது வருடாந்தர பொது மாநாட்டில் உங்களுடன் கூடிவந்திருப்பதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தக் கடைசி ஊழியக்காலத்தில், தன் சபையை கர்த்தர் மறுஸ்தாபிதம் செய்த விதத்தைப்பற்றி சிந்திக்க அவரது அழைப்பு நம்மையும் நமது அன்புக்குரியோரையும் ஆசீர்வதித்திருக்கிறது, தலைவர் ரசல் எம். நெல்சன், நமது அனுபவம் நினைவுகூரத்தக்கது மட்டுமின்றி மறக்கமுடியாததாகவும் இருக்க வேண்டுமென வாக்களித்தார்.

உங்களுடையதைப் போலவே என் அனுபவம் நினைவுகூரத்தக்கதாய் இருந்திருக்கிறது, என நான் நம்புகிறேன். அது நினைவுகூரத்தக்கதாக இருக்குமா என்பது நம் ஒவ்வொருவரையும் பொறுத்தது. இந்த மாநாட்டுக்காக ஆயத்தப்படும் நினைவுகூரத்தக்க அனுபவம், நீடிக்க வேண்டுமென நான் விரும்பிய விதமாக என்னை மாற்றியிருக்கிறது என்பது எனக்கு முக்கியமானது. நான் விளக்குகிறேன்.

என் ஆயத்தம் மறுஸ்தாபிதத்தின் ஒரு நிகழ்ச்சியைப்பற்றிய பதிவுக்கு என்னைக் கொண்டு சென்றது. நான் அந்த நிகழ்வைப்பற்றி அநேகந்தரம் வாசித்திருக்கிறேன், ஆனால் அது மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசியாகிய ஜோசப் ஸ்மித்துக்கு தொடர்புடைய ஒரு முக்கிய கூட்டத்தைப்பற்றிய அறிக்கையாக எப்போதும் எனக்கு இருந்திருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில், அவரது சபையில், அவரது சீஷர்களாகிய நம்மை கர்த்தர் எப்படி வழிநடத்துகிறார் என்ற விவரத்தை நான் பார்த்தேன். கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்தையும் அறிந்த, சிருஷ்டிகராகிய உலகத்தின் இரட்சகரால் வழிநடத்தப்படுவது அழிவுக்கேதுவான நமக்கு என்னவாக இருக்கிறது என நான் பார்த்தேன். அவர் படிப்படியாக நமக்கு போதிக்கிறார், நம்மை வழிநடத்துகிறார், ஒருபோதும் கட்டாயப்படுத்துவதில்லை.

நான் விவரிக்கிற கூட்டம் மறுஸ்தாபிதத்தின் முக்கிய கட்டம் ஆகும். ஓஹையோவிலுள்ள கர்த்லாந்து ஆலயம் அர்ப்பணிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு, அங்கு ஏப்ரல் 3, 1836ல் நடந்த அது ஒரு ஓய்வு நாள் கூட்டம். எளிய விதமாக உலக வரலாற்றில் இந்த மகத்தான தருணத்தைப்பற்றி ஜோசப் ஸ்மித் விவரித்தார். அவரது விவரத்தின் அதிகமானவை கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 110ல் பதிவு செய்யப்பட்டுள்ளது:

“இந்த நாளின், பிற்பகலில் பரிசுத்த மேஜையில் கடமையாற்றுவது அவர்களுடைய சிலாக்கியமாயிருந்த, பன்னிருவரிடமிருந்து கர்த்தருடைய திருவிருந்தைப் பெற்று அதை சபைக்குக் கொடுத்துக்கொண்டிருந்ததில் பிற தலைவர்களுக்கு நான் உதவிக்கொண்டிருந்தேன். என்னுடைய சகோதரருக்கு இந்த சேவையைச் செய்த பின்பு நான் பீடத்திற்குச் சென்றேன், திரைச்சீலைகள் இறக்கப்பட்டு, பக்தியான அமைதலான ஜெபத்தில் நான் ஆலிவர் கௌட்ரியுடன் சிரம் தாழ்த்தினேன். ஜெபத்திலிருந்து எழுந்த பின்பு எங்கள் இருவருக்கும் பின்வரும் தரிசனம் திறக்கப்பட்டது.”1

“திரை எங்கள் மனங்களிலிருந்து விலக்கப்பட்டு எங்கள் புரிதலின் கண்கள் திறக்கப்பட்டன.

“எங்களுக்கு முன்பாக பீடத்தின் தடுப்புச்சுவருக்கு மேலே கர்த்தர் நின்றுகொண்டிருப்பதை நாங்கள் கண்டோம், அவருடைய பாதத்தின் கீழே மஞ்சள் நிறத்தில் பசும்பொன் தகட்டால் பதிக்கப்பட்டிருந்தது.

“அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலையைப் போலிருந்தது, அவருடைய சிரசின் மயிர் உறைந்த மழையைப்போன்று தூய வெண்மையாயிருந்தது, அவருடைய முகரூபம் சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமாய் பிரகாசித்தது, அவரது சத்தம் கொந்தளிக்கிற ஜலப்பிரவாகத்தின் சத்தத்தைப்போலிருந்தது, மேலும் யேகோவாவின் சத்தம் சொன்னது:

“நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன், நானே ஜீவிக்கிறவர், நானே அடிக்கப்பட்டவர், நானே பிதாவிடத்தில் உங்களின் மத்தியஸ்தராயிருக்கிறேன்.

“இதோ, உங்களுடைய பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டன, எனக்கு முன்பாக நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆகவே உங்கள் தலையை உயர்த்தி களிகூருங்கள்.

“உங்கள் சகோதரரின் இருதயங்கள் களிகூர்வதாக, என்னுடைய நாமத்தில் தங்களுடைய பராக்கிரமத்தில் இந்த ஆலயத்தைக் கட்டிய என்னுடைய சகல ஜனங்களின் இருதயங்களும் களிகூர்வதாக.

“ஏனெனில் இதோ, இந்த ஆலயத்தை நான் ஏற்றுக்கொண்டேன், என்னுடைய நாமம் இங்கேயிருக்கும், இந்த ஆலயத்தில் இரக்கத்துடன் என்னுடைய ஜனங்களுக்கு நான் என்னை வெளிக்காட்டுவேன்.

“ஆம், என்னுடைய ஜனங்கள் என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு இந்த பரிசுத்த ஆலயத்தை தீட்டுப்படுத்தாதிருந்தால் என்னுடைய ஊழியக்காரர்களுக்கு நான் தோன்றி என்னுடைய சொந்தக்குரலாலே அவர்களுடன் பேசுவேன்.

“ஆம், பொழியப்படுகிற ஆசீர்வாதங்கள் மற்றும் இந்த ஆலயத்தில் என்னுடைய ஊழியக்காரர்கள் தரிப்பித்த தரிப்பித்தலின் விளைவாக ஆயிரக்கணக்கான மற்றும் பத்தாயிரக்கணக்கானவர்களின் இருதயங்கள் அதிகமாய் களிகூரும்.

“இந்த ஆலயத்தின் புகழ் வெளி தேசங்களுக்கும் பரவும், என்னுடைய ஜனங்களின் தலைகள்மீது பொழியப்படும் ஆசீர்வாதங்களின் ஆரம்பமாய் இது இருக்கும். அப்படியே ஆகக்கடவதாக, ஆமென்.

“இந்த தரிசனம் முடிந்த பின்பு, வானங்கள் மீண்டும் எங்களுக்கு திறக்கப்பட்டது, எங்களுக்கு முன்பாக மோசே தோன்றி, பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்தலின், மற்றும் வடக்கு தேசத்திலிருந்து பத்து கோத்திரங்களை வழிநடத்துதலின் திறவுகோல்களை எங்களிடம் ஒப்படைத்தான்.

“இதன் பிறகு எலியாஸ் தோன்றி, எங்களுக்குப்பின் எங்களுடைய சந்ததியின் சகல தலைமுறைகளும் ஆசீர்வதிக்கப்படும் என எங்களிடம் சொல்லி ஆபிரகாமின் சுவிசேஷத்தின் ஊழியக்காலத்தை ஒப்படைத்தான்.

“இந்த தரிசனம் முடிவடைந்த பின், மற்றொரு மகத்தான மகிமையான தரிசனம் எங்கள் மேல் பொங்கி வந்தது, ஏனெனில் மரணத்தை ருசி பார்க்காமல் வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எலியா தீர்க்கதரிசி எங்களுக்கு முன்பாக நின்று சொன்னான்:

“இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே அவன் [எலியா] அனுப்பப்படுவான் என்று சாட்சியளித்து—

“பூமி முழுவதையும் சங்காரத்தால் அடிக்கப்படாதபடிக்கு, பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளின் இருதயங்களை தங்களின் பிதாக்களிடத்திற்கும் திருப்ப, மல்கியாவின் வாயால் பேசப்பட்ட நேரம் முழுமையாக வந்தது.

“ஆகவே, இந்த ஊழியக்காலத்தின் திறவுகோல்கள் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டன, இதன் மூலமாக கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் சமீபத்திருக்கிறதென, வாசற்படிகளிலே இருக்கிறதென நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”2

இப்போது, அந்த விவரத்தை நான் அநேகந்தரம் வாசித்திருக்கிறேன். அந்த விவரம் உண்மை என பரிசுத்த ஆவியானவர் எனக்கு உறுதியளித்திருக்கிறார். ஆனால் இந்த மாநாட்டுக்காக ஆயத்தப்பட நான் படித்து, ஜெபித்தபோது, அவரது பணியில் தன் சீஷர்களை வழிநடத்த கர்த்தரின் வல்லமையை விளக்கமாக மிகத்தெளிவாக பார்த்தேன்.

கர்த்லாந்து ஆலயத்தில் இஸ்ரவேலின் கூடுகையின் திறவுகோல்களை ஜோசப்பிடம் மோசே ஒப்புவித்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, “மார்மன் புஸ்தகத்தின் தலைப்பு பக்கத்திலிருந்து ‘அவர்கள் என்றென்றைக்குமாய் தள்ளப்படவில்லை எனவும், கர்த்தரின் உடன்படிக்கைகளை அவர்கள் அறியும்படிக்கும் … இஸ்ரவேலின் மீதியானவர்களுக்கு காட்டுவதே அதன் நோக்கம் என ஜோசப் அறிந்தார்.’ 1831ல், இஸ்ரவேலின் கூடுகை கர்த்லாந்தில் தொடங்கும் என கர்த்தர் ஜோசப்பிடம் சொன்னார், ‘அங்கிருந்து [கர்த்லாந்து] எனக்குச் சித்தமான யாவரும் ஜாதிகளுக்கு மத்தியில் போவார்கள் … ஏனெனில் இஸ்ரவேல் காக்கப்படும், நான் அவர்களை வழிநடத்துவேன்.’”3

இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க ஊழியப்பணி தேவையாயிருந்தாலும், நமது தொடக்க கால ஊழியக்காரர்களாக இருந்த பன்னிருவருக்கு போதிக்க கர்த்தர் தன் தலைவர்களுக்கு உணர்த்தினார், “உங்கள் தரிப்பித்தலை நீங்கள் பெறும்வரை நீங்கள் பிற தேசங்களுக்கு செல்வதில்லை.”4

குறைந்த பட்சம் இரண்டு காரணங்களுக்காக, கர்த்தரின் படிப்படியான திட்டத்தில் கர்த்லாந்து ஆலயம் முக்கியமானதாக தோன்றுகிறது முதலாவதாக, இஸ்ரவேலின் கூடுகையின் திறவுகோல்களை மறுஸ்தாபிதம் செய்ய ஆலயம் கட்டப்படும் வரை மோசே காத்திருந்தான். இரண்டாவது, தலைவர் ஜோசப் பீல்டிங் ஸ்மித் “அதிகாரத்தின் திறவுகோல்களை அதில் அவர் வெளிப்படுத்தும்படியாக அங்கு அப்போஸ்தலர்கள் தரிப்பிக்கப்பட்டு கடைசி முறையாக அவரது திராட்சைத் தோட்டத்தை கிளை நறுக்க [கர்த்லாந்து ஆலயம்] ஆலயத்தை கட்டுமாறும், கர்த்தர் கட்டளையிட்டார்,” என போதித்தார்.5 கர்த்லாந்து ஆலயத்தில் நாம் அறிந்தபடி ஆலய தரிப்பித்தல் இன்று நிர்வகிக்கப்படவில்லையானாலும், தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக, ஊழிய சேவை மூலம் பெரும் கூடுகைக்கு வழிநடத்திய “உன்னதத்திலிருந்து வல்லமையின்” வாக்களிக்கப்பட்ட தரிப்பித்தலுடன் ஊழியத்துக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு ஆயுதந்தரித்த ஆவிக்குரிய வெளியரங்கங்கள் ஊற்றப்படுதலுடன், அங்கு ஆலய ஆயத்த நியமங்கள் அறிமுகப்படுத்தப்பட தொடங்கின.6

ஜோசப்பிடம் இஸ்ரவேலின் கூடுகையின் திறவுகோல்கள் ஒப்புவிக்கப்பட்ட பிறகு, பன்னிருவரின் அங்கத்தினர்களை ஊழியத்துக்கு அனுப்ப தீர்க்கதரிசியை கர்த்தர் உணர்த்தினார். நான் படித்தபோது, அவர்களை நம்பி ஆதரிக்க ஜனங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிற வெளிநாடுகளுக்கு ஊழியத்துக்கு செல்ல பன்னிருவருக்கு கர்த்தர் விவரமாக வழியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்பது எனக்கு தெளிவானது. காலப்போக்கில், அவர்கள் மூலமாக ஆயிரக்கணக்கானோர் கர்த்தரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்குள் கொண்டுவரப்படுவார்கள்.

நமது பதிவேடுகளின்படி, பிரிட்டிஷ் தீவுகளுக்கு பன்னிருவரின் இரு ஊழியங்களின்போது, 7500 முதல் 8000 பேர் வரை ஞானஸ்நானம் பெற்றதாக மதிப்பிடப்படுகிறது. இது ஐரோப்பாவில் ஊழியப்பணிக்கு அஸ்திபாரமிட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் அதில் அதிகமானோர் பிரிட்டிஷ் தீவுகளிலிருந்தும் ஸ்காண்டினேவியாவிலிருந்தும் அமெரிக்கா செல்ல 90,000 பேர் ஒன்று கூடினர்.7 ஜோசப்பையும், பிரயாசப்பட சென்ற விசுவாசமிக்க ஊழியக்காரர்களையும் அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றியிருக்கக்கூடிய அறுவடையைப் பெற கர்த்தர் உணர்த்தியிருந்தார். ஆனால் கர்த்தர் அவரது பரிபூரண முன்னோக்கத்துடனும் ஆயத்தத்துடனும் இதை சாத்தியமாக்கினார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் 110ம் பாகத்திலிருந்து, தோற்றத்தில் எளிய கிட்டத்தட்ட கவிதை நய மொழியை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

“இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே அவன் [எலியா] அனுப்பப்படுவான் என்று சாட்சியளித்த,

“பூமி முழுவதையும் சங்காரத்தால் அடிக்கப்படாதபடிக்கு, பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளின் இருதயங்களை தங்களின் பிதாக்களிடத்திற்கும் திருப்ப, மல்கியாவின் வாயால் பேசப்பட்ட நேரம் முழுமையாக வந்தது.

“ஆகவே, இந்த ஊழியக்காலத்தின் திறவுகோல்கள் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டன, இதன் மூலமாக கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் சமீபத்திருக்கிறதென, வாசற்படிகளிலே இருக்கிறதென நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”8

கடைசி நாட்களில் தம் நோக்கங்களை நிறைவேற்ற நமக்கு உதவ அவர் நம்மை எப்படி நடத்துவதென எதிர்காலத்தை கர்த்தர் தூரமாக பார்த்தார் என நான் சாட்சியளிக்கிறேன்.

அநேக ஆண்டுகளுக்கு முன், நான் தலைமைதாங்கும் ஆயத்துவத்தில் சேவை செய்துகொண்டிருந்தபோது, FamilySearch என நாங்கள் பெயரிட்ட வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு உருவாக்கியதை மேற்பார்வையிடுமாறு நான் பொறுப்பளிக்கப்பட்டேன். நான் அதை இயக்கினேன் என சொல்வதை விட இதன் உருவாக்கத்தை நான் மேற்பார்வையிட்டேன் என சொல்வதில் நான் கவனமாயிருக்கிறேன். கர்த்தர் விரும்பியதை கட்ட அநேக புத்திசாலியான ஜனங்கள் தங்கள் தொழில்களை விட்டு விட்டு வந்தார்கள்.

நியமங்கள் திரும்ப செய்யப்படுவதை குறைப்பதில் பிரதான தலைமை ஒரு இலக்கை ஏற்படுத்தியிருந்தனர். அவர்களது பெரிய அக்கறை ஒருவரின் நியமங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதா என அறிய முடியாததாக இருந்தது. பல ஆண்டுகளாக, அல்லது பல ஆண்டுகள் என தோன்றியபோது, பிரதான தலைமை என்னைக் கேட்டார்கள், “அதை நீங்கள் எப்போது முடிப்பீர்கள்?”

மிகத் திறமை வாய்ந்த ஜனங்களின் ஜெபத்தாலும்,கருத்தாலும், தனிப்பட்ட தியாகத்தாலும் வேலை முடிக்கப்பட்டது. இது படிப்படியாக வந்தது. முதல் வேலை கம்ப்யூட்டர் சௌகர்யமில்லாதவர்களுக்கு FamilySearch பரிட்சயமானதாக்குவதாகும். அதிக மாற்றங்கள் வந்தன, அவை தொடர்ந்து வருமென நான் அறிவேன், ஏனெனில் ஒரு உணர்த்தப்பட்ட பிரச்சினையை நாம் தீர்க்க போகும்போதெல்லாம், குறைந்த பட்சம் சமமான முக்கியத்துவமுள்ள ஆனால் இன்னும் பார்க்கப்படாத முன்னேற்றத்தின் கூடுதல் வெளிப்படுத்தல்களுக்கு நாம் கதவைத் திறக்கிறோம். இன்று கூட, அவரது மறுஸ்தாபிதத்தின் பாகமாக கர்த்தர் விரும்புதாக FamilySearch ஆகிக்கொண்டிருக்கிறது, அது நியமங்கள் திரும்ப வருவதை தவிர்க்க மட்டுமேயல்ல.

அறிமுகமானவராக உணர்வு மற்றும் தங்கள் முன்னோர்கள் மீது அன்பு மற்றும் அவர்களது ஆலய நியமங்களை நிறைவுசெய்ய உதவ முன்னேற்றங்களைச் செய்ய கர்த்தர் நம்மை அனுமதிக்கிறார். இப்போது நடக்கும் என கர்த்தர் கண்டிப்பாக அறிகிறபடியே, தங்கள் பெற்றோருக்கும் தொகுதி அங்கத்தினர்களுக்கும், இளைஞர்கள் கம்ப்யூட்டர் ஆசான்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இச்சேவையில் அனைவரும் அதிக மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

எலியாவின் ஆவி, இளையவர்கள் மற்றும் பெரியவர்கள், பிள்ளைகள் மற்றும் பெற்றோர், பேரப்பிள்ளைகள் மற்றும் தாத்தா பாட்டிகளின் இருதயங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆலயங்கள் ஞானஸ்நான சந்தர்ப்பங்களுக்கும் பிற பரிசுத்த நியமங்களுக்கும் மகிழ்ச்சியாக சீக்கிரத்தில் நேரம் ஒதுக்கிக்கொண்டிருக்கும். நம் முன்னோருக்கு சேவை செய்யும் வாஞ்சை மற்றும் பெற்றோர் பிள்ளைகளின் இணைப்பு வளர்ந்துகொண்டிருக்கிறது.

இவை அனைத்தும் வருவதை கர்த்தர் பார்த்தார். தம் சபையின் பிற மாற்றங்களை செய்ததுபோல, இதை அவர் படிப்படியாக திட்டமிட்டார். கடினமானவற்றை நன்கு செய்ய தெரிந்துகொண்ட விசுவாசமிக்க ஜனத்தை கர்த்தர் உருவாக்கி ஆயத்தப்படுத்தியிருக்கிறார். “வரிமேல் வரியாகவும், கொள்கைமேல் கொள்கையாகவும், இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்” என நாம் கற்க உதவ அவர் எப்போதும் அன்பாக பொறுமையுடன் இருந்திருக்கிறார். 9 அவரது நோக்கத்தின் நேரங்களின் ஒழுங்கில் அவர் உறுதியாக இருந்திருக்கிறார், ஆயினும் அடிக்கடி தியாகம் அல்லது நாம் முன்னறியாத ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறது என்பதை அவர் உறுதி செய்கிறார்.

இந்த மாநாட்டுக்காக ஆயத்தம் செய்ய ஒரு தியாகம் செய்ய என்னை அழைக்க தலைவர் நெல்சனுக்கு உணர்த்தியவராகிய, கர்த்தருக்கு என் நன்றியைத் தெரிவித்து நான் முடிக்கிறேன். எனது ஆயத்தத்தின் ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு ஜெபமும் ஒரு ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தது.

இச்செய்தியைக் கேட்கிற அல்லது இந்த வார்த்தைகளை வாசிக்கிற அனைவரையும் தமது சுவிசேஷம் மற்றும் தமது சபையின் மறுஸ்தாபிதத்துக்கு கர்த்தர் வழிநடத்துகிறார் என விசுவாசம் கொள்ள அழைக்கிறேன். அவர் நமக்கு முன்னே செல்கிறார். அவர் எதிர்காலத்தை பரிபூரணமாக அறிகிறார். பணிக்காக அவர் உங்களை அழைக்கிறார். இதில் அவர் சேர்கிறார். உங்கள் சேவைக்காக அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். நீங்கள் தியாகம் செய்யும்போது, அவரது வருகைக்காக ஆயத்தமாயிருக்க பிறருக்கு நீங்கள் உதவும்போது, நீங்கள் ஆனந்தத்தை உணர்வீர்கள்.

பிதாவாகிய தேவன் ஜீவிக்கிறார் என நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன். இயேசுவே கிறிஸ்து இது அவரது சபை. அவர் அறிந்திருக்கிறார், உங்களை நேசிக்கிறார். அவர் உங்களை வழிநடத்துகிறார். அவர் உங்களுக்காக வழியை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.