பொது மாநாடு
ஓசன்னா, அல்லேலுாயா— ஜீவிக்கிற கிறிஸ்து: மறுஸ்தாபிதத்துக்கும் ஈஸ்டருக்கும் இருதயமானவர்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


ஓசன்னா, அல்லேலுாயா— ஜீவிக்கிற கிறிஸ்து: மறுஸ்தாபிதத்துக்கும் ஈஸ்டருக்கும் இருதயமானவர்

ஓசன்னா மற்றும் அல்லேலூயாவின் இந்த பருவத்தில் அல்லேலூயா பாடுங்கள், ஏனெனில் அவர் என்றென்றைக்கும், எப்போதும் அவர் ஆளுகை செய்வார்!

அன்பான சகோதர சகோதரிகளே, இந்த தொடருகிற மறுஸ்தாபிதம் மற்றும் ஈஸ்டரின் பருவத்தில் உலகமுழுவதிலும் ஓசன்னாவுடனும் அல்லேலூயாவுடனும் ஜீவிக்கிற இயேசு கிறிஸ்துவை நாம் கொண்டாடுகிறோம். பூரண அன்புடன் நமது இரட்சகர் நமக்கு உறுதியளிக்கிறார்: “என்னில் நீங்கள் சமாதானம் பெறுவீர்கள். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”1

சில ஆண்டுகளுக்கு முன்பு, சகோதரி காங்கும் நானும் ஒரு அன்பான குடும்பத்தை சந்தித்தபோது, அவர்களுடைய சின்ன மகள் ஐவி வெட்கத்துடன் ஒரு வயலின் பெட்டியைக் கொண்டுவந்தாள். வயலின் வில்லை அவள் வெளியில் எடுத்து அதை இறுக்கி அதன்மேல் ரோஸினை தடவினாள். பின்னர் வில்லை பெட்டிக்குள் வைத்து, மூடி, அமர்ந்தாள். ஒரு புதிய ஆரம்பிப்பவளாக, வயலினைப்பற்றி தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாள். இப்போது, சில ஆண்டுகளுக்குப் பின்னர், ஐவி வயலினை மிக இனிமையாக வாசிக்கிறாள்.

படம்
ஐவியும் அவளுடைய வயலினும்

இந்த அநித்திய காலத்தில் நாம் அனைவரும் கொஞ்சம் ஐவியையும் அவளுடைய வயலினையும் போன்றவர்களே. ஆரம்பத்தில் நாம் ஆரம்பிக்கிறோம். பயிற்சியுடனும் விடாமுயற்சியுடனும் நாம் வளருகிறோம், முன்னேறுகிறோம். காலப்போக்கில், அவருடன் அவருடைய திராட்சைத் தோட்டத்தில் நாம் பிரயாசப்படும்போதும்,2 அவருடைய உடன்படிக்கைப் பாதையைப் பின்பற்றும்போதும், ஒழுக்க சுயாதீனமும், அநித்திய அனுபவங்களும் நமது இரட்சகரைப்போலாக நமக்குதவுகிறது.

இந்த இருநூற்றாண்டையும் உள்ளடக்கி ஆண்டுநிறைவுகள் மறுஸ்தாபிதத்தின் சிறப்பம்சங்களை முன்னிலைப்படுத்துகின்றன.3 தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தைக் கொண்டாடுவதில் ஈஸ்டருக்கும் நாம் ஆயத்தமாகிறோம். இரண்டிலும், இயேசு கிறிஸ்து திரும்பவருதலை நாம் களிகூருகிறோம். அவர் ஜீவிக்கிறார், அப்போது மட்டமல்ல, இப்போதும், சிலருக்காக மட்டுமல்ல, அனைவருக்குமாக. நொறுங்குண்ட இருதயத்தை குணமாக்கவும், சிறைபட்டவர்களை விடுதலையாக்கவும், குருடருக்கு பார்வை கொடுக்கவும், காயம்பட்டவர்களை விடுதலையாக்கவும் அவர் வந்தார், வருகிறார்.4 அவர்கள் நாம் ஒவ்வொருவருமே. நமது கடந்த காலம், நிகழ் காலம் அல்லது நமது வருங்காலத்தைப் பற்றிய அக்கறைகளை பொருட்படுத்தாது அவருடைய மீட்பின் வாக்குத்தத்தங்கள் பொருந்துகிறது.

படம்
எருசலேமுக்குள் வெற்றி சிறந்த பிரவேசம்

நாளை குருத்தோலை ஞாயிறு. நமது கர்த்தரில் சந்தோஷத்தை வெளிப்படுத்த குருத்தோலைகள் பாரம்பரியமாக ஒரு பரிசுத்த அடையாளமாயிருக்கிறது, எருசலேமுக்குள் கிறிஸ்துவின் வெற்றி சிறந்த பிரவேசத்தில் “திரளான ஜனங்கள் ஒலிவ மரக்கிளைகளை எடுத்துக்கொண்டு அவரை சந்திக்க முன்சென்றனர்”5 (தலைவர் ரசல் எம்.நெல்சன் அலுவலகத்தில் அவருடைய மேஜைக்குப் பின்னால் தொங்கிக்கொண்டிருக்கும் இந்த அசல் ஹாரி ஆன்டர்சன்னின் ஓவியத்தைப்பற்றி அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாயிருக்கலாம்.) வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் தேவனையும் ஆட்டுக்குட்டியானவரையும் துதித்தவர்கள் “வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தனர்.”6 “நீதியின் அங்கிகளுடனும்” “மகிமையின் கிரீடங்களுடனும்,” குருத்தோலைகளும் கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டை ஜெபத்தில் சேர்க்கப்பட்டிருந்தன.7

நிச்சயமாக, குருத்தோலை ஞாயிற்றின் முக்கியத்துவம், குருத்தோலைகளுடன் இயேசுவை வாழ்த்துவதற்கும் அப்பால் செல்கிறது. குருத்தோலை ஞாயிறில், தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக விசுவாசமுள்ளவர்கள் அடையாளங்கண்ட வழிகளில் இயேசு எருசலேமுக்குள் பிரவேசித்தார். சகரியாவும்8 சங்கீதக்காரனும் தீர்க்கதரிசனமாக முன்னுரைத்ததைப்போல, நமது கர்த்தர் ஒரு கழுதையின் மேல் சவாரி செய்து எருசலேமுக்குள் பிரவேசித்தபோது, திரளான ஜனங்கள் அதை அறிந்தவர்களாக, “உன்னதத்தில் ஓசன்னா”9 என ஆர்ப்பரித்தார்கள். ஓசன்னா என்றால் “இப்போது இரட்சியும்”10 என அர்த்தம். பின்னர் இப்பொழுதைப்போல,“கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்”11 என நாம் களிகூருகிறோம்.

குருத்தோலை ஞாயிறுக்கு ஒரு வாரத்திற்குப் பின்வருவது ஈஸ்டர் ஞாயிறு. “அவர் கடன்படாத ஒரு கடனைச் செலுத்த இயேசு கிறிஸ்து வந்தார், ஏனெனில் நாம் பட்ட கடனை நம்மால் செலுத்தமுடியவில்லை”12 என தலைவர் ரசல் எம்.நெல்சன் போதிக்கிறார். உண்மையில், கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக, “பிரமாணங்களுக்கும் சுவிசேஷத்தின் நியமங்களுக்கும் கீழ்ப்படிவதால் தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் இரட்சிக்கப்படலாம்”13. ஈஸ்டரில் நாம் அல்லேலூயா பாடுகிறோம். அல்லேலூயா என்றால், “கர்த்தராகிய யேகோவா உம்மை துதிக்கிறோம்”14 என அர்த்தம். ஹான்டலின் மேசியா அல்லேலூயா கூட்டுப்பாடல், அவர் “ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவுமிருக்கிறார்”15 என்ற ஒரு அன்பான ஈஸ்டர் அறிவிப்பு.

குருத்தோலை ஞாயிறுக்கும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையிலுள்ள பரிசுத்த நிகழ்வுகள் ஓசன்னா மற்றும் அல்லேலூயாவின் கதை. ஓசன்னா என்பது இரட்சிக்கும்படி தேவனிடத்தில் வேண்டுதல் இரட்சிப்புக்கும் மேன்மையடைதலுக்குமான நம்பிக்கைக்கு கர்த்தரிடம் நமது துதியை அல்லேலூயா வெளிப்படுத்துகிறது. ஓசன்னாவிலும் அல்லேலூயாவிலும், ஈஸ்டருக்கும் பிற்கால மறுஸ்தாபிதத்திற்கும் ஜீவிக்கிற இயேசு கிறிஸ்து தலையாயிருக்கிறாரென நாம் அடையாளங் காண்கிறோம்.

பிதாவாகிய தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் இளம் தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித்துக்கு நேரடி தோற்றமான தெய்வீக தரிசனத்துடன் பிற்கால மறுஸ்தாபிதம், ஆரம்பமாகிறது. ஜோசப் ஸ்மித் சொன்னார், “நீங்கள் ஐந்து நிமிடங்கள் பரலோகத்தைப் பார்க்க முடியுமா, இந்த விஷயத்தில் இதுவரை எழுதப்பட்ட அனைத்தையும் படிப்பதையும் விட உங்களை அதிகமாக நீங்கள் அறிவீர்கள் ”16 வானங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், நாம் அறிகிறோம் மற்றும் “நித்திய பிதாவாகிய தேவனிலும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிலும் தெய்வீக தேவத்துவமான பரிசுத்த ஆவியானவரிலும் நம்பிக்கை வைக்கிறோம்”17

ஈஸ்டர் ஞாயிறான ஏப்ரல் 3, 1836ல் மறுஸ்தாபிதத்தின் ஆரம்ப ஆண்டுகளில், கிர்த்லாந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர், ஜீவிக்கிற இயேசு கிறிஸ்து தோன்றினார். அங்கு அவரைக் கண்டவர்கள் அவரை நெருப்புக்கும் தண்ணீருக்கும் நிரப்பு முரணாக சாட்சி அளித்தனர்: “அவருடைய கண்கள் அக்கினியின் சுடராக இருந்ததைப்போல, அவருடயை தலைமயிர் தூய்மையான பனியைப்போல வெண்மையாயிருந்ததாக, அவருடைய முகம், சூரியனின் பிரகாசத்திற்கும் மேலாக பிரகாசித்ததாகவும், அவருடைய குரல், அடித்துச்செல்லும் பெரும் தண்ணீரின் சத்தத்தை, யேகோவாவின் குரலைப் போலிருந்ததாகவும்”18 சொன்னார்கள்

“நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன், நானே ஜீவிக்கிறவர், நானே அடிக்கப்பட்டவர், நானே பிதாவிடத்தில் உங்களின் மத்தியஸ்தராயிருக்கிறேன்”19 என அந்த சந்தர்ப்பத்தில் நமது இரட்சகர் அறிவித்தார். மீண்டும் நிரப்பு முரண்பாடுகள், முதலும் கடைசியும், ஜீவிக்கிறதும் அடிக்கப்படுகிறதும். அவர் அல்பாவும் ஒமேகாகவும், ஆதியும் அந்தமுமாயிருந்து20, நமது விசுவாசத்தின் காரணரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்.21

இயேசு கிறிஸ்து தோன்றியதைத் தொடர்ந்து, மோசேவும், எலியாஸூம் எலியாவும் வந்தார்கள். தெய்வீக வழிநடத்துதலால், இந்த பழங்காலத்து மகத்தான தீர்க்கதரிசிகள் ஆசாரியத்துவ திரவுகோல்களையும் அதிகாரத்தையும் மறுஸ்தாபிதம் செய்தார்கள். அப்படியாக, தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் ஆசீர்வதிக்க அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்குள், “இந்த ஊழியக்காலத்தின் திறவுகோல்கள் உறுதி செய்யப்பட்டன.”22

கர்த்லாந்து ஆலயத்தில் எலியா வந்தது, “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே எலியா திரும்புவான்” என்ற பழைய ஏற்பாடு மல்கியாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது.23 அப்படிச் செய்வதில், எலியாவின் தோற்றம், பயபக்தியுடன் எதிர்பார்த்திருக்கிற பாரம்பரியமான யூத பஸ்கா பண்டிகையுடன் பரஸ்பர நிகழ்வு இல்லையானாலும், ஒத்துப்போகாதிருந்தும் எலியாதிரும்ப வந்தது பரஸ்பர நிகழ்வு.

அநேக பக்தியுள்ள யூத குடும்பங்கள் அவர்களுடைய பஸ்கா பண்டிகையின் மேஜையில் எலியாவுக்காக ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அவனை அழைக்கவும் வரவேற்கவும் அநேகர் ஒரு கிண்ணத்தை விளிம்புவரை நிரப்பிருப்பார்கள். சிலர், பாரம்பரிய பஸ்கா விருந்தின்போது, ஒரு குழந்தையை வாசலுக்கு அனுப்புகிறார்கள், சில நேரங்களில், உள்ளே அழைக்கப்படுவதற்காக எலியா வெளியே காத்திருக்கிறாரா என்று பார்க்க ஓரளவு கதவை திறந்த நிலையில் வைத்திருக்கிறார்கள்.24

தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படுவதிலும், சகலகாரியங்களின் வாக்களிக்கப்பட்ட மறுஸ்தாபிதத்தின் பகுதியாகவும் , 25ஈஸ்டரிலும் மற்றும் பஸ்கா பண்டிகையின்போதும் எலியா வந்தான். பூமியிலும் பரலோகத்திலும் குடும்பங்களைக் கட்ட முத்திரிக்கும் அதிகாரத்தை அவன் கொண்டுவந்தான். தீர்க்கதரிசி ஜோசப்புக்கு மரோனி போதித்ததைப்போல, எலியா, “பிதாக்களுக்குச் செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களை பிள்ளைகளின் இருதயங்களில் அவன் நடுவான், பிள்ளைகளின் இருதயங்கள் தங்கள் பிதாக்களிடத்திற்கு திரும்பும்.” மரோனி தொடர்ந்தான், “இல்லையெனில், [கர்த்தருடைய] வருகையில் பூமி முழுவதும் நிச்சயமாய்ப் பாழாக்கப்படும்.”26 எலியாவின் ஆவி பரிசுத்த ஆவியின் ஒரு வெளிப்படுத்தலாயிருந்து, நமது வம்சாவளி, வரலாறுகள், ஆலய சேவையில், கடந்த, நிகழ் மற்றும் வருங்கால நமது தலைமுறைகளுக்கு நம்மை இழுக்கிறது.

பஸ்கா பண்டிகை எதை முக்கியப்படுத்துகிறதென்பதை நாம் சுருக்கமாக நினைவுகூறலாம். பாஸ்கா பண்டிகை என்பது, 400 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுதலையாக்குதலை நினைவுகூறுகிறதாகும். தவளைகள், பேன், ஈக்கள், கால்நடைகளின் மரணம், புண்கள், பிளைன்கள், ஆலங்கட்டி மற்றும் நெருப்பு, வெட்டுக்கிளிகள் மற்றும் அடர்த்தியான இருள் போன்ற வாதைகளுக்குப் பின்னர் இந்த விடுதலை எப்படி வந்ததென யாத்திராகமம் புஸ்தகம் சொல்கிறது. ஆனால், பழுதற்ற முதல் ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களின் வீடுகளின் நிலையின் மேற்சட்டத்தில் தெளிக்கப்பட்டிருந்ததால் இஸ்ரவேல் வீட்டாருக்கல்லாமல், தேசத்தில் சேஷ்டபுத்திரனின் மரணத்தை இறுதி வாதை பயமுறுத்தியது,27

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் அடையாளத்துடன் குறிக்கப்பட்டிருந்த வீடுகளை சங்காரத்தூதன் கடந்துசென்றான்.28 இயேசு கிறிஸ்துவின் இறுதியான மரணத்தை மேற்கொள்ளுதலை அந்த கடத்தல் அல்லது கடந்து செல்லுதல் பிரதிபலிக்கிறது. எல்லா இடங்களிலும், சூழ்நிலைகளிலுமுள்ள அவருடைய ஜனங்களை, திரையின் இருபக்கமுமுள்ள அவருடைய மந்தையின் பாதுகாப்புக்குள் ஒன்றுகூட்ட உண்மையில், தேவனின் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் நல்லமேய்ப்பனுக்கு வல்லமையைக் கொடுக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், ஈஸ்டரின் சாராம்சமான, “கிறிஸ்துவின் வல்லமையையும் உயிர்த்தெழுதலையும்”29 இரண்டு மறுஸ்தாபிதங்களின் அடிப்படையில், மார்மன் புஸ்தகம் விவரிக்கிறது.

முதலாவதாக, “கால்களும், மூட்டுகளும், தலைமயிரில் ஒன்றாகிலும் தொலைந்து போகாது” என்ற நமது “ஒழுங்கான சம்பூரண வடிவத்தின்” சரீர மறுஸ்தாபிதத்தை உயிர்த்தெழுதல் உள்ளடக்கியிருக்கிறது.30 கால்களை இழந்தவர்களுக்கு, பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களுக்கு அல்லது நடக்கும், அல்லது இடைவிடா நோய், மன நோய் அல்லது பிற மங்கிய திறன் ஆகியவற்றால் அந்த எண்ணம் இடைவிடா நோய், மன நோய் அல்லது பிற குறைந்த திறன் ஆகியவற்றால் நினைவை இழந்தவர்கள் போன்றவர்களுக்கு இந்த வாக்குறுதி நம்பிக்கையைக் கொடுக்கிறது. அவர் நம்மைக் கண்டுபிடிக்கிறார். அவர் நம்மை ஆரோக்கியமாக்குகிறார்.

ஈஸ்டர் மற்றும் நமது கர்த்தருடைய பாவநிவர்த்தியின் இரண்டாவது வாக்குறுதி என்பது ஆவிக்குரியவிதமாக “சகலமும் தங்களுடைய முறையான ஒழுங்கிற்குச் சேர்க்கப்படும்.”31 இந்த ஆவிக்குரிய மறுஸ்தாபிதம் ,நமது செயல்களையும் விருப்பங்களையும் பிரதிபலிக்கிறது. தண்ணீரின்மேல் அப்பத்தைப்போல,32 “நன்மையானதையும்,” “நீதியானதையும்”, “நீதியையும்” “இரக்கத்தையும்” இது மீட்டெடுக்கிறது33 “நீதியாக நடந்துகொள்ளுங்கள்,நீதியாக தீர்ப்பளியுங்கள்,தொடர்ந்து நன்மையானவற்றைச் செய்யுங்கள்”35 என அவன் நமக்கு வலியுறுத்தியதில் மறுஸ்தாபிதம் என்ற வார்த்தையை ஆல்மா தீர்க்கதரிசி 22 முறைகள்34 பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை.

“தேவன் தாமே இவ்வுலகத்தின் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்கிறதால்”36, இருந்ததைமட்டுமல்ல, இருக்கக் கூடியதையும் கர்த்தருடைய பாவநிவர்த்தி ஆரோக்கியமாக்கமுடியும். நமது வேதனைகளை, துயரங்களை, நோய்களை, எல்லாவகையான நமது சோதனைகளை37 அவர் அறிந்திருக்கிறதால் ,நமது குறைபாடுகளின்படி இரக்கத்தில் நமக்கு அவர் ஒத்தாசை புரியமுடியும்.38 தேவன் “சம்பூரணராகவும், நியாயமுள்ள தேவனாகவும், இரக்கமுள்ள தேவனாகவும் இருப்பதால்” இரக்கத்தின் திட்டம், “நியாயத்தின் நிபந்தனைகளை நிவர்த்தியாக்கும்.”39 நாம் மனந்திரும்பி நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். “அவருடைய அன்பின் கரங்களில்”40 நித்தியமாக அவர் நம்மை அணைத்துக் கொள்கிறார்.

மறுஸ்தாபிதத்தையும் உயிர்த்தெழுதலையும் இன்று நாம் கொண்டாடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையில் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் மறுஸ்தாபிதத்தில் உங்களுடன் நானும் களிகூருகிறேன். இந்த வசந்த காலத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதைப் போல, கர்த்தருடைய ஜீவனுள்ள தீர்க்கதரிசி மூலமாகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என அவருடைய பெயரில் அழைக்கப்பட்ட அவருடைய சபையின் மூலமாகவும், தனிப்பட்ட வெளிப்பாடு மற்றும் பரிசுத்த ஆவியின் வானுலக வரத்தினால் உணர்த்தப்படுதலும், வெளிச்சமும், வெளிப்படுத்தலும் தொடர்ந்து வருகிறது.

இந்த ஈஸ்டர் பருவத்தில், நித்திய பிதாவாகிய தேவனையும் அவருடைய நேச குமாரனாகிய ஜீவிக்கிற இயேசு கிறிஸ்துவையும் குறித்து உங்களுடன் நான் சாட்சியளிக்கிறேன். அநித்திய மனுஷர்கள் கொடுமையான முறையில் சிலுவையிலறைந்தார்கள், பின்னர் உயிர்த்தெழுப்பப்பட்டார். ஆனால் ஜீவனோடிருக்கும் இயேசு கிறிஸ்து மட்டுமே அவருடைய முழுமையான உயிர்த்தெழுந்த வடிவத்தில் அவருடைய கைகளிலும், கால்களிலும், இடுப்பிலும் இன்னமும் சிலுவையில் அறையப்பட்ட அடையாளங்களை தாங்கியிருக்கிறார். அவர் மட்டுமே சொல்ல முடியும், “இதோ, என் உள்ளங்கையிலே உன்னை வரைந்திருக்கிறேன்”41 அவர் மட்டுமே சொல்ல முடியும் : “உயர்த்தப்பட்டவர் நானே. சிலுவையிலறையப்பட்ட இயேசு நானே. நானே தேவகுமாரன்.”42

சிறுபெண் ஐவியையும் அவளுடைய வயலினையும்போல, சிலவழிகளில் நாம் இன்னமும் ஆரம்பத்திலிருக்கிறோம். உண்மையில்,“தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.”43 நாம் அவரை நாடும்போதும், ஒருவருக்கொருவரை அணுகும்போதும் தேவனின் அன்பு நம்மில் வளருவதற்காக, இந்தக் காலங்களில், தேவனின் நன்மையை அதிகமாகவும் நமது தெய்வீக திறனையும் நாம் கற்றுக்கொள்ளமுடியும். புதிய வழிகளிலும் இடங்களிலும், வரிசை வரிசையாகவும், இரக்கத்தின்மேல் இரக்கமாகவும், தனிப்பட்டவர்களாகவும், ஒன்றுசேர்ந்தும் நம்மால் செய்யமுடியும், மாறமுடியும்.

அன்பான சகோதர சகோதரிகளே, நாம் சந்தித்து ஒன்றுசேர்ந்து கற்றுக்கொள்ளும்போது, எல்லா இடங்களிலும், சுவிசேஷ சாகசம் மற்றும் நன்றியுணர்வின் ஒரு உணர்வுடன் உங்கள் விசுவாசமும் நன்மையும் என்னை நிரப்புகிறது. உங்களுடைய சாட்சியும் சுவிசேஷ பயணமும் என்னுடைய சாட்சியையும், சுவிசேஷ பயணத்தையும் வளப்படுத்துகிறது. உங்கள் கவலைகள் மற்றும் சந்தோஷங்கள், தேவனின் குடும்பம் மற்றும் பரிசுத்தவானகளின் சமூகம் மீதான உங்கள் அன்பு, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சத்தியம் மற்றும் ஒளியைப்பற்றிய உங்களுடைய அனுபவ புரிந்துகொள்ளுதல் ஆகியவை ஜீவனுள்ள இயேசு கிறிஸ்துவை அதன் தலையாய் வைத்து, என்னுடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் முழுமையை அதிகரிக்கின்றன, “மேகத்தினூடே, சூரிய வெளிச்சத்தினூடே, கர்த்தாவே நீர் என்னோடிரும்”44 என்பதை நாம் ஒன்றாக நம்புகிறோம். சுமைகள் மற்றும் அக்கறைகளினால், நம்முடைய அநேக ஆசீர்வாதங்களை நம்மால் எண்ணமுடியுமென ஒருசேர நமக்குத் தெரியும்.45 அன்றாட விவரங்கள் மற்றும் சிறிய மற்றும் எளிமையான விஷயங்களில், நம் வாழ்வில் கொண்டு வரப்பட்ட பெரிய காரியங்களை நாம் காணமுடியும்.46

“சகல ஜாதிகளுக்கு மத்தியிலிருந்து நீதிமான்கள் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள், நித்திய சந்தோஷத்தின் பாடல்களைப் பாடிக்கொண்டு சீயோனுக்கு வருவார்கள்.”47 ஓசன்னா மற்றும் அல்லேலூயாவின் இந்த பருவத்தில் அல்லேலூயா பாடுங்கள், ஏனெனில் அவர் என்றென்றைக்கும் எப்போதும் அவர் ஆளுகை செய்வார்! “தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஓசன்னா! பாடுவோம்!“49 இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.