பொது மாநாடு
நீதியான தீர்ப்பை உறுதி செய்தல்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


நீதியான தீர்ப்பை உறுதி செய்தல்

ஒரு நீதியான தீர்ப்பை உறுதிசெய்ய இரட்சகரின் பாவநிவாரண பலி அறியாமையின் கழிவுகளையும் பிறரால் ஏற்படுத்தப்பட்ட காயத்தின் வேதனைமிக்க முட்களையும் எடுத்துப்போடும்.

மார்மன் புஸ்தகம் கிறிஸ்துவின் கோட்பாட்டைப் போதிக்கிறது.

கடந்த அக்கோபரில் தலைவர் ரசல் எம். நெல்சன் “மார்மன் புஸ்தகத்திலிருந்து பெற்ற நமது அறிவு திடீரென எடுத்துக்கொள்ளப்பட்டால்,” நமது வாழ்க்கை எப்படி வித்தியாசமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு நமக்கு சவால்விட்டார். 1 அவரது கேள்விபற்றி நான் சிந்தித்தேன், நீங்களும் சிந்தித்திருப்பீர்கள் என நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு எண்ணம் திரும்ப திரும்ப வந்திருக்கிறது—மார்மன் புஸ்தகம் மற்றும் கிறிஸ்துவின் கோட்பாடு மற்றும் அவரது பாவநிவாரண பலி பற்றிய தெளிவு இல்லாமல் சமாதானத்துக்காக நான் எங்கு திரும்புவேன்?

கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரம் மற்றும் இறுதிபரியந்தம் நிலைத்திருத்தலின் இரட்சிக்கும் கொள்கைகளும் நியமங்களும் அடங்கிய—கிறிஸ்துவின் கோட்பாடு மறுஸ்தாபிதம் பற்றிய அனைத்து வேதங்களிலும் எண்ணற்ற நேரங்களில், ஆனால் மார்மன் புஸ்தகத்தின் குறிப்பிட்ட வல்லமையுடன் கற்பிக்கப்பட்டிருக்கிறது.2 அக்கோட்பாடு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் தொடங்குகிறது, அதன் மூலக்கூறுகளின் ஒவ்வொன்றும் அவரது பாவநிவாரண பலியின் மீது நம்பிக்கையை சார்ந்திருக்கிறது.

தலைவர் நெல்சன் போதித்தபடி, மார்மன் புஸ்தகம் எங்கும் காணப்படுகிற இயேசு கிறிஸ்துவின் முழுமையான மற்றும் மிக அதிகாரபூர்வ புரிதலை கொடுக்கிறது.3 இரட்சகரின் உன்னதமான வரம் பற்றி நாம் அதிகம் புரிந்துகொள்ளும்போது, “மார்மன் புஸ்தகத்தின் சத்தியங்கள் குணமாக்கவும், தேற்றவும், திரும்பக்கொண்டுவரவும், கொடுக்கவும், பெலப்படுத்தவும், ஆற்றுப்படுத்தவும், நமது ஆத்துமாக்களை உற்சாகப்படுத்தவும் வல்லமை பெற்றிருக்கிறது” என்ற 5 தலைவர் நெல்சனின் உறுதியளித்தலின் உண்மைத்தன்மையை நமது மனங்களிலும் இருதயங்களிலும் அதிகமாக அறிவோம். 4

இரட்சகரின் பாவநிவர்த்தி நீதியின் அனைத்து நிபந்தனைகளும் திருப்தியாக்குகிறது.

இரட்சகரின் பாவநிவர்த்தி பற்றிய நமது புரிதலுக்கு மார்மன் புஸ்தகத்தின் முக்கிய சமாதானமளிக்கும் கொடை, கிறிஸ்துவின் இரக்கமிக்க பலி நீதியின் தேவைகளனைத்தையும் நிறைவேற்றுகிறது என்ற அதன் போதனை. ஆல்மா விளக்கியபடி: “தேவன் சம்பூரணராயும், நியாயமுள்ள தேவனாயும், மேலும் இரக்கமுள்ள தேவனாயும் இருக்கும்படிக்கு, இரக்கத்தின் திட்டத்தை நிறைவேற்றவும், நியாயத்தின் கோரிக்கைகளை திருப்திப்படுத்தவும், உலகத்தின் பாவங்களுக்காக தேவன் தாமே பாவநிவர்த்தி செய்கிறார்.”6 மகிழ்ச்சியின் திட்டம்8 என வேதங்கள் அழைக்கிற—பிதாவின் இரக்கத்தின் திட்டம் 7 அல்லது இரட்சிப்பின் திட்டம்9—நீதியின் அனைத்து கோரிக்கைகளையும் திருப்திப்படுத்தாவிட்டால் எட்டப்படமுடியாது.

ஆனால் சரியாக “நியாயத்தின் கோரிக்கைகள்” யாவை? ஆல்மாவின் சொந்த அனுபவத்தை கருத்தில் கொள்ளவும். ஒரு இளைஞனாக “சபையை அழிக்க” ஆல்மா சுற்றித் திரிந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.10 உண்மையாக, தன் குமாரனாகிய ஏலமனிடம், “அவன் பாதாள வேதனையுடன் வேதனைக்குள்ளாக்கப்பட்டதாகவும்,” “[தேவனின்] அநேக பிள்ளைகளைக் கொன்றதாகவும்,” “அநேகரை அழிவுக்குள்ளாக வழிநடத்திச் சென்றதாகவும்” ஆல்மா சொன்னான். 11

“உலகத்தின் பாவங்களை நிவர்த்தியாக்க … இயேசு கிறிஸ்துவின் வரவைக் குறித்த” என் தகப்பனின் போதனைகளால் “என் மனம் இந்த நினைவைப் பற்றிக்கொண்டபோது,” அவனுக்கு சமாதானம் கடைசியாக வந்தது என ஆல்மா ஏலமனுக்கு விளக்கினான்.12 மனஸ்தாபப்பட்ட ஆல்மா இரக்கத்துக்காக கெஞ்சி13, பின்பு கிறிஸ்து அவனது பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்துவிட்டார், நீதிக்குத்தேவையான அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்டது என உணர்ந்து மகிழ்ச்சியும் ஆசுவாசமும் உணர்ந்தான். மீண்டும் ஆல்மாவிடமிருந்து நீதி என்ன கேட்டிருக்கும்? ஆல்மா தானே பின்னால் போதித்தபடி, “அசுத்தமுள்ள எதுவும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.”14 இரக்கம் இடைபடாவிட்டால் பரலோக பிதாவுடன் வாழத் திரும்புவதிலிருந்து நீதி அவனைத் தடுத்திருக்கும் என்பது இப்படியாக ஆல்மாவின் நிவாரணத்தின் பகுதியாக இருந்திருக்கும்.15

நம்மால் குணப்படுத்த முடியாத காயங்களை இரட்சகர் குணமாக்குகிறார்.

ஆனால் ஆல்மாவின் மகிழ்ச்சி தனது தண்டனையை தவிர்த்து அவன் பிதாவிடத்துக்கு திரும்ப சாத்தியமாவதில் முற்றிலுமாக கவனம் செலுத்தியதா? சத்தியத்துக்கு புறம்பே தான் வழிநடத்தியவர்கள் பற்றியும் ஆல்மா வியாகுலப்பட்டான் என நாம் அறிகிறோம்.16 ஆனால் ஆல்மா மட்டுமே தான் புறம்பே வழிநடத்தியவர்களை குணமாக்கி சீரமைக்க முடியவில்லை. கிறிஸ்துவின் கோட்பாட்டை கற்கவும், அதன் மகிழ்ச்சியான கொள்கைகள்படி வாழ்வதால் ஆசீர்வதிக்கப்படவும் அவர்கள் நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படுவார்கள் என அவன்தானே உறுதிசெய்ய முடியவில்லை. அவனது பொய் போதனைகளால் குருடாக்கப்பட்டு, மரித்திருக்கக்கூடியவர்களை அவனால் திரும்பக் கொண்டுவர முடியவில்லை.

தலைவர் பாய்ட் கே. பாக்கர் ஒருமுறை போதித்ததுபோல: “ஆல்மாவைக் காப்பாற்றிய எண்ணம் …இதுவே உங்களால் சீரமைக்க முடியாததை சீரமைத்தலும், உங்களால் குணமாக்க முடியாத காயத்தை குணமாக்குதலும், நீங்கள் உடைத்ததை ஒட்டுவதும், உங்களால் முடியாது என்பதே கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் நோக்கமாகும்.”17 ஆல்மாவின் மனம் “பற்றிக்கொண்ட” மகிழ்ச்சியான சத்தியம் அவன் தானே சுத்திகரிக்கப்பட முடியும் என்பதல்ல, ஆனால் அவன் காயப்படுத்தியவர்கள் குணமாக்கப்பட முடியம், சொஸ்தமாக்கப்பட முடியும் என்பதும் கூட.

இரட்சகரின் பலி நீதியான தீர்ப்பை உறுதிசெய்கிறது

இந்த உறுதியளிக்கும் கோட்பாட்டால் ஆல்மா இரட்சிக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன், இரட்சகரின் பாவநிவாரண பலி மூலம் கொடுக்கப்பட்டுள்ள குணமாக்குதலின் விசாலம் பற்றி பென்யமீன் இராஜா போதித்திருந்தான். “தேவனிடத்திலிருந்து வந்த தூதனால்,” “மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிற நற்செய்தி” அவனுக்கு கொடுக்கப்பட்டது என பென்யமீன் இராஜா அறிவித்தான்.18 “மனுபுத்திரர் மேல் ஒரு நீதியுள்ள விசாரணை வரும்படிக்கு” அதை உறுதி செய்ய நமது பாவங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் கிறிஸ்து பாடுபட்டு மரிப்பார் என்ற சத்தியம் மகிழ்ச்சியான நற்செய்தியில் இருந்தது.19

ஒரு “நீதியான தீர்ப்புக்கு” சரியாக எது தேவை? அடுத்த வசனத்தில் பென்யமீன் இராஜா விளக்கியதாவது, ஒரு நீதியான தீர்ப்பை உறுதி செய்ய இரட்சகரின் இரத்தம் “ஆதாமின் மீறுதலினாலே வீழ்ந்தவர்களுடைய பாவங்களையும், தங்களைக் குறித்த தேவனுடைய சித்தத்தை அறியாமல் மரித்தோருடைய பாவங்களையும், அறியாமையினால் பாவஞ்செய்தோருடைய பாவங்களையும்” நிவர்த்தி செய்தது.20 சிறுபிள்ளைகளின் பாவங்களுக்காக “கிறிஸ்துவின் இரத்தம் நிவர்த்தியாக்கும்படிக்கு” ஒரு நீதியான நியாயத்தீர்ப்பு தேவைப்பட்டது என அவன் போதித்தான்.21

இந்த வசனங்கள் ஒரு மகிமையான கோட்பாட்டை போதிக்கின்றன—ஒரு இலவச வரமாக, அறியாமையில் பாவம் செய்பவர்களுக்கு, யாக்கோபு சொல்கிறபடி “எங்கே நியாயப்பிரமாணம் கொடுக்கப்படவில்லையோ,” அவர்களை இரட்சகரின் பாவநிவாரண பலி குணமாக்குகிறது. 22 பாவத்துக்கான பொறுப்பு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒளியைப் பொருத்திருக்கிறது, நமது சுயாதீனத்தை பிரயோகப்படுத்தும் நமது திறமையில் அசைகிறது.23 மார்மன் புஸ்தகம் மற்றும் பிற மறுஸ்தாபித வேதத்தினால் மட்டுமே இந்த குணமாக்கும் தேறுதலளிக்கும் சத்தியத்தை நாம் அறிகிறோம்.24

உண்மையாகவே எங்கே நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுகிறதோ, எங்கே தேவ சித்தம் பற்றி நாம் அறியாமலில்லையோ, நாம் பொறுப்பேற்க வேண்டும். பென்யமீன் இராஜா வலியுறுத்தியபடி: “அறிந்தே தேவனுக்கு விரோதமாய் முரட்டாட்டம் பண்ணுகிறவனுக்கு ஐயோ! ஏனெனில் அப்படிப்பட்டவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கிற விசுவாசம் மற்றும் மனந்திரும்புதலினாலேயன்றி இரட்சிப்பு வராது.”25

இதுவும் கூட கிறிஸ்துவின் கோட்பாட்டின் நற்செய்திதான். அறியாமல் பாவம் செய்கிறவர்களை இரட்சகர் குணமாக்கி சீர்படுத்துவது மட்டுமின்றி, ஆனால் மனந்திரும்புதல் மற்றும் அவரில் விசுவாசம் என்னும் நிபந்தனையில், ஒளிக்கு எதிராக பாவம் செய்பவர்களுக்கு இரட்சகர் குணமாக்குதல் அளிக்கிறார்.26

இந்த இரு சத்தியங்களையும் ஆல்மா “பற்றிப்பிடித்திருக்க” வேண்டும். கிறிஸ்து அவனை இரட்சித்தார், ஆனால் சத்தியத்திலிருந்து அவன் புறம்பே நடத்தியவர்களை என்றென்றைக்கும் காயத்துடனே விட்டுவிட்டார் என அவன் நினைத்திருந்தால், “அற்புதமான … சந்தோஷம்” 27 என அவன் விவரிக்கிறதை உண்மையாகவே ஆல்மா உணர்ந்திருந்தானா? கண்டிப்பாக இல்லை. ஏனெனில் ஆல்மா முழுமையான சந்தோஷத்தை உணர, அவன் காயப்படுத்தியவர்களும் முழுமையாக்கப்பட அந்த சந்தர்ப்பத்தைப் பெற வேண்டும்.

அவர்கள் அல்லது நாம் காயப்படுத்தியவர்கள் எவ்வாறு சரியாக சொஸ்தமாக்கப்படுவார்கள்? இரடசகரின் பாவநிவாரண பலி எப்படி பரிசுத்த விதமாக குணமாக்கி மற்றும் மறுசீரமமைக்கிறது என நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லையானாலும், பிறரால் ஏற்படுத்தப்பட்ட அறியாமை மற்றும் வேதனைமிக்க முட்களின் படிமானங்களை இரட்சகர் துடைத்தெறிகிற நீதியான நியாயத்தீர்ப்பை உறுதிசெய்வதை நாம் அறிகிறோம். 28 இதனால் அவரைப் பின்பற்றவும், மகிழ்ச்சியின் மாபெரும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவும் தெரிந்துகொள்ள வெளிப்படையான பார்வையுடன் தேவனின் எல்லா பிள்ளைகளும் சந்தர்ப்பம் கொடுக்கப்படுவார்கள் என அவர் உறுதியளிக்கிறார். 29

நாம் உடைத்திருக்கிற அனைத்தையும் இரட்சகர் ஒட்டுவார்.

இந்த சத்தியங்கள்தான் ஆல்மாவுக்கு சமாதானம் கொடுத்திருக்கும். இந்த சத்தியங்கள்தான் நமக்கும்கூட சமாதானம் கொடுக்க வேண்டும். சுபாவ ஆண்களும் பெண்களுமாக நாமனைவரும் ஒருவருக்கொருவர் மீது பிறர் மோதுகிறோம் அல்லது சில சமயங்களில் நொறுக்குகிறோம், சேதம் விளைவிக்கிறோம். எந்த பெற்றோரும் சாட்சியளிக்க முடிவது போல, நமது தவறுகளுடன் சம்மந்தப்பட்ட வேதனை நமது சொந்த தண்டனை பற்றிய பயம் மட்டுமல்ல, ஆனால் நமது பிள்ளைகளின் சந்தோஷத்தை நாம் கட்டுப்படுத்தியிருப்போம் அல்லது சத்தியத்தை பார்க்கவும் புரியவும் ஒரு விதத்தில் தடுத்திருப்போம் என்ற பயம் . இரட்சகரின் பாவநிவாரணபலியின் மகிமைமிக்க வாக்குத்தத்தம், பெற்றோராக நமது தவறுகளைப் பொருத்தவரையில் அவர் நமது பிள்ளைகளைக் குற்றமற்றவர்களாக்கி, அவர்களைக் குணமாக்க வாக்களிக்கிறார். 30 நாமனைவரையும் போல, ஒளிக்கு விரோதமாக அவர்கள் பாவம் செய்திருந்தபோதும், அவரது இரக்கத்தின் கரம் நீட்டப்பட்டிருக்கிறது31 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து வாழ்ந்தால் அவர் அவர்களை மீட்பார்.32

நாம் சரிசெய்ய முடியாததை இணைக்க இரட்சகரிடம் வல்லமை இருந்தாலும், நமது மனந்திரும்புதலின் பங்காக ஒப்புரவாகும்படிக்கு, நம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய அவர் நமக்கு கட்டளையிடுகிறார்.33 நமது பாவங்களும் தப்புக்களும் தேவனுடனான நமது உறவை மட்டுமின்றி பிறருடனான நமது உறவையும் மாற்றுகிறது. குணமாக்கவும் சீர்படுத்தவும் நமது முயற்சிகள் சில சமயங்களில் ஒரு மன்னிப்பு கேட்டல் போல எளிதாயிருக்கலாம், ஆனால் சில நேரங்களில் ஒப்புரவாதலுக்கு வருடக்கணக்கான தாழ்மையான முயற்சிகள் தேவைப்படலாம்.34 இருப்பினும் நமது அநேக பாவங்கள் மற்றும் தவறுகளுக்காக நாம் காயப்படுத்தியவர்களை நாம் முற்றிலுமாக குணப்படுத்த முடிவதில்லை. மார்மன் புஸ்தகம் மற்றும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் மகத்துவமான சமாதானமளிக்கும் வாக்குத்தத்தம் நாம் உடைத்த அனைத்தையும் இரட்சகர் இணைப்பார் என்பதாகும். 35 நாம் அவரிடத்தில் விசுவாசத்துடன் திரும்பி, நாம் ஏற்படுத்திய காயத்துக்காக மனந்திரும்பினால் அவர் நம்மையும் இணைப்பார்.36 பரிபூரண அன்புடன் அவர் நம்மை நேசிப்பதாலும்,37 நீதியையும் இரக்கத்தையும் கனம்பண்ணுகிற நீதியான நியாயத்தீர்ப்பை உறுதியளித்து அவர் ஒப்புக்கொடுத்ததால் அவர் இந்த இரண்டு வரங்களையும் கொடுக்கிறார். இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Closing Remarks,” Liahona, Nov. 2019, 122.

  2. 2 நேபி 31; 3 நேபி 11:28, 32, 35, 39–40; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:62–63, 67–70; 68:25; மோசே 6:52–54; 8:24; விசுவாசப்பிரமாணங்கள் 1:4பார்க்கவும்.

  3. Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?” Liahona, Nov. 2017, 62.

  4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2-3 பார்க்கவும்.

  5. Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?” 62.

  6. ஆல்மா 42:15.

  7. ஆல்மா 42:15 பார்க்கவும்.

  8. ஆல்மா 42:8 பார்க்கவும்.

  9. ஆல்மா 24:14, மோசே 6:62 பார்க்கவும்

  10. மோசியா 27:8-10 பார்க்கவும்.

  11. ஆல்மா 36:13, 14.

  12. ஆல்மா 36:17, 18.

  13. ஆல்மா 36:18 பார்க்கவும்.

  14. ஆல்மா 40:26; மேலும் 1 நேபி 15:34; ஆல்மா 7:21; 11:37; ஏலமன் 8:25 பார்க்கவும்.

  15. 3 நேபி 27:19; மற்றும் மோசே 6:57 பார்க்கவும்.

  16. ஆல்மா 36:14-17 பார்க்கவும்.

  17. Boyd K. Packer, “The Brilliant Morning of Forgiveness,” Ensign, Nov. 1995, 19–20.

  18. மோசியா 3:23

  19. மரோனி 3:10; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  20. 1 மோசியா 3:11; மற்றும் 2 நேபி 9:26, பார்க்கவும்.

  21. மோசியா 3:16; மேலும் மோசியா 15:25; மரோனி 8:11–12, 22 பார்க்கவும்.

  22. 2 நேபி 9:25

  23. 2 நேபி 2:26-27 ஏலமன் 14:29 பார்க்கவும்.

  24. விசுவாசப்பிரமாணங்கள் 1:2; மேலும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:54 பார்க்கவும். “மனித இனத்தின் ஒரு பகுதி மற்றதை இரக்கமில்லாமல் தீர்த்து கடிந்துகொள்ளும்போது, பிரபஞ்சத்தின் மகத்தான பெற்றோர் மனித குடும்பம் முழுவதையும் தகப்பனுக்குரிய கவனத்துடனும், தகப்பனுக்குரிய அக்கறையுடனும் பார்க்கிறார், அவர் அவர்களை தன் பிள்ளைகளாகப் பார்க்கிறார். அவர் ஞானமிக்க நியாயப்பிரமாணம் கொடுப்பவர், எல்லா மனுஷரையும் நியாயந்தீர்ப்பார், மனுஷனின் குறுகிய சுருங்கிய எண்ணத்தின் படியல்ல. அவர் அவர்களை நியாயந்தீர்ப்பார், அவர்களிடம் இல்லாதவற்றின்படியல்ல, அவர்களிடம் இருப்பனவற்றின்படி, நியாயப்பிரமாணம் இல்லாமல் வாழ்ந்தவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் தீர்க்கப்படுவார்கள், நியாயப்பிரமாணம் உள்ளவர்கள் அந்த நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவார்கள். மாபெரும் எகோவாவின் ஞானத்தையும் புத்தியையும் நாம் சந்தேகப்படத் தேவையில்லை, எல்லா தேசங்களுக்கும் அவர்களது பல வனாந்தரங்களின்படி, அவர்கள் அறிவுபெறும் விதத்தின்படி, அவர்கள் ஆளுகை செய்யப்படுகிற நியாயப்பிரமாணத்தின்படி, சரியான தகவல் பெற அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வசதிகளின்படி, அவர் நியாயத்தீர்ப்பு அல்லது இரக்கம் செய்வார், … பூமி அனைத்தின் நியாயாதிபதி சரியாகச் செய்தார் என முடிவாக நாமனைவரும் அறிக்கையிட வேண்டும்.” (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 404).

  25. மோசியா 3:12; மற்றும் 2 நேபி 9:27, பார்க்கவும்.

  26. மோசியா 3:12; ஏலமன் 14:30; மரோனி 8:10; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:78 பார்க்கவும். தனிநபர்கள் சில கட்டளைகள் மற்றும் உடன்படிக்கைகள் பற்றி அறியாமலிருக்கலாம், அல்லது சில சூழ்நிலைகளில் தங்கள் சுயாதீனத்தைப் பிரயோகிக்க முடியாமலிருக்கலாம், ஆனால் அவர்கள் பெற்றிருக்கிற கிறிஸ்துவின் ஒளியினிமித்தம் பிற சூழ்நிலைகளில் பொறுப்பேற்கவேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.(2 நேபி 9:25; மரோனி 7:16–19 பார்க்கவும்). நீதியான தீர்ப்பு உறுதியளித்திருக்கிற நமது நியாயாதிபதியாகிய இரட்சகர் இந்த சூழ்நிலைகளைப் பிரித்தறிவார் (மார்மன் 3:20; மோசே 6:53–57 பார்க்கவும்). முந்தயதற்கு நிபந்தனையின்றியும், பிந்தயதற்கு மனந்திரும்புதலின் நிபந்தனையுடனும் இரண்டுக்குமாக அவர் கிரயம் செலுத்தியிருக்கிறார்.

  27. ஆல்மா 36:21.

  28. மோசியா 3:11 பார்க்கவும்; மேலும் D. Todd Christofferson, “Redemption,” Liahona, May 2013, 110; Alma 7:11–12 பார்க்கவும் (“அவர் ஜனங்களின் துன்பங்களையும் நோய்களையும் தம்மேல் ஏற்றுக்கொள்வார். … அவர்களது பலவீனங்களை தம்மேல் ஏற்றுக்கொள்வார்” ஏசாயா 53:3–5 (“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நமது துக்கங்களைச் சுமந்தார்”); 61:1–3 (“இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு காயம் கட்ட என்னை அபிசஷேகம் பண்ணினார், … சீயோனிலே துயரப்பட்டவர்களை சீர்படுத்தவும் அவர்களுக்கு சாம்பலுக்குப்பதிலாக சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும் கொடுக்கிறார்”). அவரது மேசியாத்துவத்தை அவர் அறிவித்த போது, ஏசாயாவின் இந்த வசனங்களிலிருந்து இரட்சகர் மேற்கோள் காட்டியது அறியக்கூடியது “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவசனம் இன்றையத்தினம் நிறைவேறிற்று”(லூக்கா 4:16–21 பார்க்கவும்).

  29. ஆவி உலகத்தில் அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படவும், அவர்களுக்காக ஒரு அன்பான பரலோக பிதா வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நோக்கி செல்லவும் அறியாதவர்களுக்கும், மனந்திரும்பாதவர்களுக்கும், கலகக்காரர்களுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது(Dallin H. Oaks, “Trust in the Lord,” Liahona, Nov. 2019, 27). யோவான் 3:16–21; 4:6–17; 2 நேபி 26:-16; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:19; 137:7, -9–13; 138:31-35 ஐயும் பார்க்கவும்.

  30. மோசே 6:54 பார்க்கவும். தற்கொலை சம்மந்தப்பட்ட கோட்பாடாக தலைவர் எம். ரசல் பல்லார்ட் இதைப் போதித்தார்: “விவரங்கள் அனைத்தையும் கர்த்தர் மட்டுமே அறிவார், பூமியில் நமது செயல்களை நியாயந்தீர்ப்பவர் அவரே. அவர் நம்மை நியாயந்தீர்க்கும்போது, அவர் அனைத்தையும் கருத்தில் கொள்வார் என நான் உணர்கிறேன், நமது பரம்பரை மற்றும் வேதியல் நிலைமை, நமது மனநிலை, நமது புத்திசாலித்தனம், நாம் பெற்றுள்ள போதனைகள், நமது பிதாக்களின் பாரம்பரியங்கள், நமது ஆரோக்கியம் மற்றும் பிற. தங்களைப்பற்றிய தேவ சித்தத்தை அறியாமல் மரித்த மனிதர்களின் அல்லது அறியாமல் பாவம் தெய்தவர்களின் பாவங்களுக்காக கிறிஸ்துவின் இரத்தம் பாவநிவர்த்தி செய்யும் என வேதங்களில் நாம் கற்கிறோம். (மோசியா 3:11)” (“Suicide: Some Things We Know, and Some We Do Not,” Ensign, Oct. 1987, 8; Tambuli, Mar. 1988, 18).

  31. யாக்கோபு 6:5; மோசியா 29:20; 3 நேபி 9:14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:1 பார்க்கவும்.

  32. ஏலமன் 8:15 பார்க்கவும்.

  33. லேவியராகமம் 6:4–5; எசேக்கியேல் 33:15–16; ஏலமன் 5:17; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42–43 பார்க்கவும்.

  34. ஆல்மாவும் ஈடுபட்டிருந்த முயற்சி இதுபோன்றதுதான் (Alma 36:24 பார்க்கவும்).

  35. தலைவர் பாய்ட் கே. பாக்கர் இந்த கொள்கையை வல்லமையாக கற்பித்தார்:

    “நீங்கள் உடைத்தவற்றை நீங்கள் ஒட்டவைக்க முடியாத தருணங்கள் இருக்கின்றன. ஒருவேளை குற்றம் நீண்ட நாட்களுக்கு முந்தியதாக இருக்கலாம், அல்லது காயப்பட்டவர்கள் உங்கள் மாற்றத்தை மறுத்திருக்கலாம். நீங்கள் எவ்வளவு அவசியமாக விரும்பினாலும் பொருட்டின்றி, உங்களால் சரிசெய்ய முடியாத கடுமையான சேதமாக இருக்கலாம்.

    “ஒப்புரவாகுதல் இல்லாமல் உங்கள் மனந்திரும்புதலை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் செய்ததை, இல்லாமல் செய்யாவிட்டால், நீங்கள் பிடிக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் நம்பிக்கையின்றியும் உதவியின்றியும் உணர்வீர்கள் மற்றும் ஆல்மா செய்தது போல நீங்கள் ஏன் விட்டுவிடக் கூடாது என விரும்புவதைப் புரிதல் எளிது. …

    “எல்லாம் எப்படி சரிசெய்யப்பட முடியும் என நமக்குத் தெரியாது. எல்லாம் இந்த வாழ்க்கையில் அடையப்படாமலிருக்கலாம். திரைக்கு அப்பாலும் கர்த்தரின் வேலைக்காரர்களால் தொடரப்படும் மீட்பின் பணி பற்றி தரிசனங்களாலும் சந்திப்புகளாலும் நாம் அறிகிறோம்.

    “அறியாதவர்களுக்கும் குற்றமுள்ளவர்களுக்கும் இச்செய்தி ஆறுதலாக இருக்கும். தங்கள் பாதை தவறிய பிள்ளைகளின் தவறுகளுக்காக தாங்க முடியாதபடி கஷ்டப்படும் பெற்றோர் நம்பிக்கையிழப்பதை நான் நினைக்கிறேன்.” (“The Brilliant Morning of Forgiveness,” Liahona, 19–20).

  36. 3 நேபி 12:19; மேலும் மத்தேயு 6:12; 3 நேபி 13:11 பார்க்கவும்.

  37. யோவான் 15:12–13; 1 யோவான் 4:18; Dieter F. Uchtdorf, “Perfect Love Casteth Out Fear,” Liahona, May 2017, XX பார்க்கவும்.