பொது மாநாடு
நம்பிக்கையின் பரிபூரண பிரகாசம்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


நம்பிக்கையின் பரிபூரண பிரகாசம்

தேவன் இந்த உலகத்தில் கிரியை செய்கிறார் என்ற அடிப்படை சத்தியத்தை மறுஸ்தாபிதம் உறுதி செய்ததினிமித்தம், நாம் நம்பவேண்டும், அளவிட முடியாத பிரச்சினைகளை சந்திக்கும்போது கூட நாம் நம்ப வேண்டும்.

கடந்த அக்டோபரில் தலைவர் ரசல் எம். நெல்சன் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்வதில், தேவனின் கரத்தின் மகத்துவத்தைப் பார்க்க திரும்பிப் பார்த்து நமது சொந்த விதமாக ஒவ்வொருவரும் இந்த ஏப்ரல் மாநாட்டை முன்னோக்கிப் பார்க்க நம்மை அழைத்தார். சகோதரி ஹாலண்டும் நானும் அந்த தீர்க்கதரிசன அழைப்பை கடினமாக எடுத்துக் கொண்டோம். அந்த நாளின் மத நம்பிக்கைகளைப் பார்த்து, நாங்கள் 1800களின் முற்பகுதியில் வாழ்ந்ததாக கற்பனை செய்தோம். அந்த கற்பனையான பின்னணியில், நாங்கள் எங்களையே கேட்டோம், “எது இங்கு இல்லை? நாம் பெற்றிருந்த எதை விரும்புகிறோம்? நமது ஆவிக்குரிய ஏக்கத்துக்கு பதிலாக தேவன் எதைக் கொடுப்பார் என நம்புகிறோம்?.”

நூற்றாண்டுகளுக்கு பின்னால் தவறு மற்றும் தவறான புரிதலில் அவர் இருப்பது போல தோன்றிய மறைக்கப்பட்ட அந்த நாளின் அநேகரை விட உண்மையான பரிசுத்த கருத்தின் மறுஸ்தாபிதத்துக்காக இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே நாம் மிகவும் நம்பியிருந்திருப்போம் என நாங்கள் உணர்ந்தோம். அந்நாளின் பிரசித்தி பெற்ற மத நபராக இருந்த வில்லியம் எல்லரி சாநிங்கிடமிருந்து ஒரு சொற்றொடரை இரவல் வாங்கினால், “கிறிஸ்தவத்தின் முதல் மாபெரும் கோட்பாடு” என சாநிங் கருதிய “தேவனின் பெற்றோர் குணத்தை” நாம் தேடியிருப்போம். 1 தெய்வத்தை, கண்டிப்பான நியாயம் காக்கிற கடினமான நீதிபதியாக, அல்லது முன்பு உலக காரியங்களில் ஈடுபட்ட, வராத தோட்ட உரிமையாளராக, ஆனால் பிரபஞ்சத்தில் இப்போது வேறு எங்கோ சுறுசுறுப்பாக இருக்கிறவராக அல்லாமல், ஒரு பரலோகத்திலுள்ள அக்கறையுள்ள தகப்பனாக, அத்தகைய கோட்பாடு, அடையாளம் கண்டிருக்கும்.

ஆம், உலகின் மிக அன்பான புரிதலில், ஒரு உண்மையான பிதா, அவர் கடந்த காலத்தில் செய்ததுபோல இக்காலத்திலும் தேவன் வெளிப்படையாக பேசி வழிநடத்துவதைக் காண்பதில் எங்கள் நம்பிக்கைகள் 1820ல் இருந்திருக்க வேண்டும். அவர் நிச்சயமாக கொடிய, தான்தோன்றித்தனமான, சர்வாதிகாரியாக, சிலரை இரட்சிக்கவும் மனித குடும்பத்தின் மீதியானோரை அழிவுக்கு இரையாக்க தேர்ந்தெடுக்கிற முன்நியமிக்கப்பட்டவராக இருக்க மாட்டார். இல்லை, தெய்வீக அறிவிப்பால் அவருடைய ஒவ்வொரு செயலும் உலகத்தின் நன்மைக்காக இருக்கும், ஏனெனில் அவர் உலகத்தை நேசிக்கும் ஒருவராக அவர் இருப்பார்2, அதில் வாழும் ஒவ்வொருவரையும் கூட. அந்த அன்பே பூமிக்கு தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்ப அவரது ஒரே நோக்கமாயிருக்கும்.3

இயேசுவைப்பற்றி பேசும்போது, 19ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் நாம் வசித்திருந்தால், இரட்சகரின் வாழ்க்கையைப்பற்றிய உண்மைத்தன்மை மற்றும் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவ உலகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் பெறத் தொடங்கியிருக்கும் என்பதைப்பற்றிய சந்தேகங்களை அதிக திகைப்புடன் நாம் உணர்ந்திருப்போம். ஆகவே, இயேசுவே கிறிஸ்து, தேவனின் உண்மையான குமாரன், மாபெரும் ஒரே மீட்பர் மற்றும் உலகத்தின் இரட்சகர் என்ற வேதாகம சாட்சியை உறுதி செய்கிற உலக முழுமைக்கும் ஆதாரம் வருவதை நாம் எதிர்பார்த்திருப்போம். அவரது அற்புதமான பிறப்பு, அதிசயமான ஊழியம், பாவநிவாரண பலி மற்றும் மகிமையான உயிர்த்தெழுதலைப்பற்றிய நமது அறிவை அதிகரிக்கிற இயேசு கிறிஸ்துவின் மற்றொரு சுவிசேஷத்தை அடக்கக்கூடிய ஒன்றாகிய, பிற வேத ஆதாரங்களைக் கொண்டு வருகிற நமது ஆழ்ந்த நம்பிக்கைகளாக இருந்திருக்கும். “உண்மையாகவே அந்த ஆவணம் பரலோகத்திலிருந்து [அனுப்பப்பட்ட] நீதி, பூமியிலிருந்து [அனுப்பப்பட்ட] … சத்தியமாக” இருக்கும்4

அந்த நாளின் கிறிஸ்தவ உலகைக் கவனித்து, நமக்கு ஞானஸ்நானம் கொடுக்க உண்மையான ஆசாரியத்துவ அதிகாரத்துடன், பரிசுத்த ஆவியின் வரத்தை அருளக்கூடிய மற்றும் மேன்மைப்படுதலுக்கு தேவையான எல்லா நியமங்களையும் நிர்வகிக்க தேவனால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரை காணவும், நாம் எதிர்பார்த்திருந்திருப்போம். 1820ல், கர்த்தரின் மகத்துவமுள்ள வீட்டின் திரும்பவருதலைப்பற்றிய ஏசாயா, மீகா மற்றும் பிற பூர்வகால தீர்க்கதரிசிகளின் விரிவான நிறைவேறிய வாக்குத்தத்தங்களைப் பார்க்க எதிர்பார்த்திருந்திருப்போம். 5 நித்திய சத்தியங்களைப் போதிக்கவும், தனிப்பட்ட காயங்களைக் குணமாக்கவும், என்றென்றைக்கும் குடும்பங்களை ஒன்றாகக் கட்டவும், ஆவி, நியமங்கள், வல்லமை மற்றும் அதிகாரத்துடன் பரிசுத்த ஆலயங்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்படுகிற மகிமையைப் பார்க்க நாம் ஆச்சரியப்பட்டிருப்போம். எனக்கும் என் அன்பு பாட்ரீசியாவுக்கும் அப்படிப்பட்ட பின்னணியில் எங்கள் திருமணம் இக்காலத்துக்கும் நித்தியத்துக்கும் முத்திரிக்கப்பட்டது, “மரணம் உங்களைப் பிரிக்கும்வரை” என்ற துரத்துகிற சாபத்தை ஒருபோதும் கேட்காதிருக்க அல்லது நம் மீது திணிக்கப்படாமல் சொல்ல அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரைக் கண்டுபிடிக்க எங்கெங்கும் எல்லா இடங்களிலும் நாங்கள் தேடியிருப்போம். “[நமது] பிதாவின் வீட்டில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு” என நான் அறிகிறேன்6, ஆனால் தனிப்பட்ட விதமாக பேசினால், அவற்றில் ஒன்றை சுதந்தரிக்க நான் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அந்த சுதந்தரத்தில் பங்குபெற பாட்டும் எங்கள் பிள்ளைகளும் இல்லையானால், அது ஒரு அழுகிக்கொண்டிருக்கும் சிறுகுடிலை விட எதுவாகவும் இருக்காது. இயேசு கிறிஸ்துவின் பெயரைக்கூட கேட்காமல் பழங்காலத்தில் வாழ்ந்து மரித்த எங்கள் முன்னோர்களில் சிலருக்காக, வேதாகம கொள்கைகளின்படி மிக நீதியான மற்றும் இரக்கமாக மறுஸ்தாபிதம் செய்யப்பட, தங்கள் மரித்த குடும்பத்தினருக்காக இரட்சிக்கும் நியமங்களை உயிரோடிருப்பவர்கள் கொடுக்கும் வழக்கத்தை நாங்கள் எதிர்பார்த்திருப்போம். 7 அவர்கள் எப்போது அல்லது எங்கு வசித்தார்கள் என்பது பொருட்டின்றி, தம் பூலோக பிள்ளைகள் ஒவ்வொருவர் மீதும் அன்பான தேவனின் அக்கறையை அதிக பிரகாசமாய் வேறெந்த செயலும் செயலில்காட்டும் என என்னால் கற்பனை செய்ய முடியாது.

நல்லது, நமது 1820 நம்பிக்கை பட்டியல் தொடரும், ஆனால் அந்த நம்பிக்கைகள் வீணாகப் போயிருக்காது என்ற மறுஸ்தாபிதத்தின் செய்தியே ஒருவேளை மிக முக்கியமானதாக இருந்திருக்கும். பரிசுத்த தோப்பில் தொடங்கி, இன்னாள் வரை தொடர்கிற, இந்த வாஞ்சைகள் உண்மையில் வஸ்திரந்தரிக்கத் தொடங்கி, அப்போஸ்தலனாகிய பவுலும் பிறரும் போதித்தபடி, ஆத்துமாவின் உண்மையான, உறுதியான மற்றும் ஸ்திரமான நங்கூரங்களாகின. 8 ஒரு சமயத்தில் எதிர்பார்த்தது இப்போது சரித்திரமாகியிருக்கிறது.

அப்படியாக, உலகத்துக்கு தேவனின் நன்மையின் 200 வருடங்களை நமது திரும்பிப்பார்த்தல். ஆனால் நமது முன்னோக்கிய பார்வை என்னவானது? இன்னும் நிறைவேறாத நம்பிக்கைகள் நமக்கு இன்னும் உள்ளன. நாம் பேசுகிறபோது கூட, நாம் கோவிட் 19னுடன் “எல்லாவகையிலும் யுத்தம் செய்துகொண்டிருக்கும்போது” , ஒரு கிருமி9, மணல் துகளைவிட 1000 மடங்கு சிறியது10, முழு ஜனத்தொகையையும் உலக பொருளாதாரத்தையும் மண்டியிட வைத்திருப்பதின் திடமான நினைவூட்டல். இந்த தற்கால கொள்ளைநோயால் தங்கள் அன்புக்குரியோரை இழந்திருப்பவர்களுக்காகவும், தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறவர்கள் மற்றும் ஆபத்திலிருப்பவர்களுக்காகவும் நாம் ஜெபிக்கிறோம். இப்படிப்பட்ட மகத்தான நல பராமரிப்பு கொடுத்துவரும் அனைவருக்காகவும் நாம் கண்டிப்பாக ஜெபிக்கிறோம். இதை நாம் மேற்கொண்ட பின், இதற்கு இணையாக பசி என்ற கிருமியிலிருந்து உலகத்தை விடுவிக்கவும், தரித்திரம் என்ற கிருமியிலிருந்து அக்கம்பக்கத்தையும் நாட்டையும் விடுவிக்கவும் நாம் சமமாக ஒப்புக்கொடுப்போமாக, நாம் செய்வோம். மாணவர்கள் கற்பிக்கப்படுகிற பள்ளிக்கூடத்தில், தாங்கள் சுடப்படுவோம் என பயப்படாமலிருக்கவும், எந்த விதமான இன, குல, மத வெறுப்பிலிருந்து கெடுக்கப்படாதிருக்க ஒவ்வொரு தேவ பிள்ளையின் தனிப்பட்ட கண்ணியத்தின் வரத்துக்காகவும், நம்புவோமாக. சுருக்கமாக, அந்த இரு மாபெரும் கட்டளைகளுக்கு பெரும் அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறோம்: அவரது ஆலோசனைகளைக் காத்துக்கொண்டு, தேவனை நேசிக்கவும், தயவும், மனதுருக்கமும், பொறுமையும், மன்னிப்பும் காட்டி நமது அயலாரை நேசிக்கவும் .11 அவர்கள் இப்போது அறிந்திருப்பதைவிட, சிறந்த உலகத்தை நம் பிள்ளைகளுக்கு கொடுக்க, இந்த இரண்டு மாபெரும் தெய்வீக வழிகாட்டுதல்கள் இன்னும் எப்போதைக்கும் இருக்கும் என்பதே நாம் பெற்றிருக்கிற ஒரே உண்மையான நம்பிக்கை.12

இந்த உலகளாவிய வாஞ்சைகளோடு சேர்த்து, இந்த பார்வையாளர்களில் அனேகர் இன்று தனிப்பட்ட ஆழ்ந்த நம்பிக்கை பெற்றிருக்கின்றனர்: முன்னேற திருமணத்துக்கு நமபிக்கை, அல்லது சில சமயங்களில் திருமணத்துக்கு மட்டும் நம்பிக்கை, ஒரு அடிமைத்தனம் மேற்கொள்ளப்பட நம்பிக்கை, ஒரு வழிதவறிய பிள்ளை திரும்ப வர நம்பிக்கை, ஆயிரம் விதமான சரீர மற்றும் உணர்வுபூர்வ வேதனை மறைய நம்பிக்கை. இந்த உலகத்தில் தேவன் கிரியை செய்கிறார் என்ற அடிப்படை சத்தியத்தை மறுஸ்தாபிதம் உறுதிசெய்ததால், நாம் நம்பிக்கை கொள்ள முடியும், அளவிட முடியா பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போதும் நாம் நம்ப வேண்டும். ஆபிரகாம் நம்பிக்கைக்கு எதிராக நம்ப முடிந்தபோது, வேதம் இதைத்தான் சொன்னது 13—அதாவது நம்பாமல் இருக்க ஒவ்வொரு காரணமும் இருந்தபோதும், முற்றிலும் சாத்தியமற்றது என தோன்றியபோதும் அவனும் அவனது சாராளும் ஒரு பிள்ளையைக் கர்ப்பந்தரிக்க முடியும் என நம்ப முடிந்தது. அதனால் நான் கேட்கிறேன், “நியூயார்க்கின் புறநகரில் மரக்கூட்டத்தில் சாதாரண பையன் முழங்கால் படியிட தெய்வீக ஒளி மின்னலுடன் நமது 1820ன் நம்மில் அநேகரின் நம்பிக்கைகள் ஆரம்பிக்குமானால், எல்லா நம்பிக்கைகளின் தேவனால் வியத்தகுவிதமாகவும், அற்புதமாகவும் இன்னும் பதில்தர முடியும் என நீதியான வாஞ்சைகளையும் கிறிஸ்துபோன்ற ஏக்கங்களையும் நாம் ஏன் நம்பக்கூடாது?” நாம் நீதியாக வாஞ்சிக்கக்கூடியது ஒருநாள், ஒரு வழியில், எப்படியாவது நமதாகும் என நாம் அனைவரும் நம்ப வேண்டும்.

சகோதர சகோதரிகளே, 19வது நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத குறைபாடுகள் சில என்னவென நமக்குத் தெரியும். மேலும், இன்னும் பசியையும், நம்பிக்கையையும் நிறைவேறாததாக விடும் இன்றைய மத குறைபாடுகள் சிலவற்றை நாம் அறிவோம். அந்த பல்வேறு அதிருப்திகள் பாரம்பரிய மத நிறுவனங்களிலிருந்து அதிகரிக்கிற எண்ணிக்கையிலுள்ளோரை புறம்பே வழிநடத்துவதை நாம் அறிகிறோம். ஒரு உள்ளுணர்வுமிக்க எழுத்தாளர் எழுதியதுபோல, இந்த சரிவைப்பற்றி பேசுவதற்கு “அநேக [இன்றைைய] மத தலைவர்கள் துல்லியமில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. ஒரே சமயத்தில் உலகத்துக்கு அதிகம் தேவைப்படும்போது, எழுகிற தலைமுறை அதிகத்துக்கு தகுதியாயிருக்கும்போது, இயேசுவின் சமயத்தில் அவர் அதிகம் கொடுத்தபோது, “சிகிச்சை தெய்வத்தின் ஒரு மெல்லிய கொடுமை, தாழ்ந்த அடையாள செயல்பாடு, கவனமாக கிடத்தப்பட்ட வெறுப்பு, அல்லது சிலசமயங்களில் உணர்த்துதலில்லா முட்டாள்தனம்” என பதிலாக சொல்கின்றனர்14 கிறிஸ்துவின் சீஷர்களாக, “எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று, எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று”15 என துக்கித்த பூர்வகால இஸ்ரவேலருக்கு மேலாக நாம் நமது நாளில் எழும்பலாம். உண்மையாகவே நாம் கடைசியாக நம்பிக்கையை இழந்தால், நாம் நமது கடைசி ஆதரவளிக்கும் ஆஸ்தியை இழக்கிறோம். Divina Commedia:ல் “இங்கே நுழைபவர்களே எல்லா நம்பிக்கையையும் கைவிடுங்கள்” என அவன் சொன்னது மூலம்16 அனைத்து பயணிகளுக்கும் எச்சரிக்கையாக நரகத்தின் வாசலிலிருந்தே டான்டே எழுதினான். உண்மையாகவே, நம்பிக்கை போனபிறகு, எல்லா பக்கத்திலிருந்தும் கர்ஜிக்கிற நரக நெருப்புதான் மீந்திருக்கிறது.

ஆகவே, நமது முதுகுகள் சுவற்றிலிருக்கும்போது, பாடல் சொல்வது போல, “பிற உதவிகள் கைவிடும்போதும், ஆறுதல் விலகும்போதும்,” 17நமது மிக தவிர்க்கமுடியாத நற்குணங்களிடையே, தேவ விசுவாசத்திலும், பிறருக்கு நமது தயாளத்திலும் குலைக்கக்கூடாமல் இணைக்கப்பட்ட நம்பிக்கையின் அருமையான வரமாக இது இருக்கும்.

இந்த இருநூற்றாண்டில், நமக்கு கொடுக்கப்பட்ட அனைத்தையும் பார்க்க நாம் திரும்பும்போது, நிறைவேறிய அனேக நம்பிக்கைகளை உணர்ந்து களிகூரும்போது, சில மாதங்களுக்கு முன் ஜோகன்ஸ்பர்கில் எங்களிடம் சொன்ன, அழகிய இளம் வீடு திரும்பிய ஊழியக்கார சகோதரியின் உணர்வை நான் பிரதிபலிக்கிறேன், “இந்த தூரம் வருவதற்கு, [நாங்கள்] இவ்வளவு தூரம் வரவில்லை.18

வேதத்தில் எப்போதும் பதிவுசெய்யப்பட்ட மிக உணர்த்தும் மதிப்பீட்டை சுருக்கிச் சொல்ல, தீர்க்கதரிசி நேபியோடும், அந்த இளம் சகோதரியோடும் நான் சொல்கிறேன்:

“என் பிரியமான சகோதரரே, சகோதரிகளே, மறுஸ்தாபிதத்தின் முதல் கனிகளைப் பெற்றுக் கொண்ட பின்பு, எல்லாம் முற்றுப்பெற்றதா என்று உங்களைக் கேட்கிறேன்? இதோ அப்படியல்ல என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். …

“ … கிறிஸ்துவில் திட நம்பிக்கையாய் பூரண நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும் எல்லா மனிதரிடத்திலும் நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். … [நீங்கள் அப்படிச் செய்தால்] … நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள் என பிதா உரைக்கிறார்.”19

இந்தக் கடைசி மற்றும் எல்லாவற்றிலும் மாபெரும் ஊழியக்காலமாகிய, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபித ஊழியக்காலத்தில் நமக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துக்காகவும் என்னுடைய சகோதர சகோதரிகளே, நான் நன்றி சொல்கிறேன். சுவிசேஷத்திலிருந்து வழிந்தோடுகிற வரங்களும் ஆசீர்வாதங்களும் எனக்கு அனைத்துமாகும், எல்லாமும் ஆகவே அவற்றுக்காக பரலோகத்திலிருக்கிற என் பிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எனக்கு, “நான் உறங்குவதற்கு முன் காத்துக்கொள்ள வாக்குகள் உண்டு, நான் உறங்குமுன் செல்ல மைல்கள் உண்டு.” 20 200 ஆண்டுகளாக இப்போது நாம் இருக்கிற தூய எதிர்பார்ப்பின் பாதையை ஒளிரச் செய்கிற, “நம்பிக்கையின் பிரகாசத்தில்” 21நடந்து, நமது இருதயங்களில் அன்புடன் முன்னேறுவோமாக. கடந்த காலம் போல எதிர்காலமும் அற்புதம் நிறைந்த தாராளமாய் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கப்போகிறது என நான் சாட்சியளிக்கிறேன். நாம் ஏற்கனவே பெற்றுவிட்டவைகளைவிட பெரும் ஆசீர்வாதங்களின் நம்பிக்கைக்கு நமக்கு எல்லா காரணமும் உண்டு. ஏனென்றால் இது சர்வ வல்ல தேவனின் பணி, இது தொடர் வெளிப்படுத்தலின் சபை, இது அளவற்ற கிருபையுள்ள சுவிசேஷம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவை யாவை மற்றும் அதிகமானவைபற்றியும் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.