பொது மாநாடு
மறுஸ்தாபிதம் மற்றும் உயிர்த்தெழுதலின் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


மறுஸ்தாபிதம் மற்றும் உயிர்த்தெழுதலின் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

மறுஸ்தாபிதம் உலகுக்குச் சொந்தமானது, அதன் செய்தி விசேஷமாக இன்றைக்கு அவசரமானது.

இந்த மாநாடு முழுவதும் “எல்லாம் நிறைவேறித் தீரும்,”1 மற்றும் “சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கட்டப்பட்டு” கொண்டுவரப்படுவது குறித்தும்,2 பூமிக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையும், ஆசாரியத்துவமும், இயேசு கிறிஸ்துவின் சபையும் திரும்ப வருவதைப்பற்றியும், நீண்ட காலத்துக்கு முன்பே தீர்க்கதரிசனம் கூறப்பட்டதன் நிறைவேற்றமாகிய “மறுஸ்தாபிதம்” என்ற தலைப்பில் நாம் அறிகிற யாவையும்பற்றி நாம் பேசி, மகிழ்ச்சியோடு பாடியிருக்கிறோம்.

ஆனால் மறுஸ்தாபிதம் இன்று அதில் களிகூர்கிற நமக்கு மட்டுமல்ல. முதல் தரிசனத்தின் வெளிப்படுத்தல்கள் ஜோசப் ஸ்மித்துக்கு மட்டுமல்ல, ஆனால் ஞானத்தில் குறைவுள்ள எவருக்கும் ஒளியாகவும் சத்தியமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.3 மார்மன் புஸ்தகமே மனுக்குலத்தின் சொத்து. இப்போது அநித்தியத்தில் இல்லாதவர்கள் உள்ளிட்ட, ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலைப்பற்றிய ஆசாரியத்துவ நியமங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டன. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை மற்றும் அதன் ஆசீர்வாதங்கள் அவற்றை விரும்புகிற அனைவருக்குமானது. பரிசுத்த ஆவியின் வரம் ஒவ்வொருவருக்குமானது. மறுஸ்தாபிதம் உலகுக்குச் சொந்தமானது, அதன் செய்தி விசேஷமாக இன்றைக்கு அவசரமானது.

“எழும்புவோரில் முதலானவராய், மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணும்படி, மாம்சத்தின்படியே தன் ஜீவனை ஒப்புக்கொடுத்து, அதை ஆவியின் வல்லமையினாலே மீண்டும் பெற்றுக்கொண்ட, பரிசுத்த மேசியாவின் நற்கிரியைகள், இரக்கம், கிருபை ஆகியவைகளின் மூலமேயன்றி தேவனுடைய சமூகத்திலே எந்த ஒரு மாம்சமும் வாசமாயிருக்கலாகாது என்று பூமியின் குடிகள் அறியும்படிக்கு, இவைகளை அவர்களுக்கு அறிவிப்பதன் முக்கியத்துவம் எவ்வளவு மேன்மையானதாய் இருக்கிறது.” 4

தீர்க்கதரிசியின் சகோதரர் சாமுவேல் ஸ்மித், மார்மன் புஸ்தகத்தின் புதிதாக அச்சடிக்கப்பட்ட பிரதிகளை தன் கைப்பையில் நிரப்பிக்கொண்டு புதிய வேதத்தை பகிர்ந்துகொள்ள கால்நடையாக புறப்பட்ட நாளிலிருந்து, “பூமியின் குடிகளுக்கெல்லாம் இக்காரியங்களை அறியச்செய்யும்படிக்கு” பரிசுத்தவான்கள்” நிறுத்தாது பிரயாசப்பட்டிருக்கிறார்கள்.

1920ல், அப்போதைய பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் டேவிட் ஓ. மெக்கன்கி சபையின் ஊழியங்களுக்கு ஒரு வருட பிரயாணத்தை தொடங்கினார். மே 1921ல், சமோவாவின் பகாலியிலுள்ள சிறு கல்லறைத் தோட்டத்தில், தாமஸ் மற்றும் சாரா ஹில்ட்டனின் மகள் மற்றும் இரு மகன்களாகிய மூன்று சிறு பிள்ளைகளின் நன்கு பராமரிக்கப்பட்ட கல்லறைகளின் முன்பு அவர் நின்றார். 1800 ஆண்டுகளின் பின்பகுதியில், இளம் ஊழிய தம்பதியினராக தாமஸும் சாராவும் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது இச்சிறு பிள்ளைகள், மூத்த பிள்ளைக்கு முன்று வயதாயிருந்தபோது மரித்தனர்.

அவர் யூட்டாவை விட்டுச் செல்லும் முன், இப்போது விதவையாயிருக்கிற சாராவுக்கு ஒருபோதும் அவர் அங்கு சென்று, சமோவாவில் அவரது பிள்ளைகளின் கல்லறைகளுக்குப் போக முடியவில்லை. மூப்பர் மெக்கே அவருக்கு எழுதினார், “சகோதரி ஹில்டன், உங்கள் மூன்று சிறு பிள்ளைகள், மிக அலங்காரமாக அமைதியில் … கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட உங்கள் உத்தமமான ஊழியப்பணியை தொடர்கிறார்கள்.” பின்பு தன் சொந்த தொகுப்பில் ஒரு கவிதையை சேர்த்தார்:

அன்பான கரங்களால் அவர்களது மரிக்கும் கண்கள் மூடப்பட்டன,

அன்பான கரங்களால் அவர்களது சிறு கால்கள் சேர்க்கப்பட்டன,

அந்நிய தேசத்தினரின் கரங்களால் அவர்களது கல்லறைகள் அலங்கரிக்கப்பட்டன.

தெரியாதவர்களால் கனம் பண்ணப்பட்டன, தெரியாதவர்களால் துக்கிக்கப்பட்டன.5

மறுஸ்தாபிதத்தின் செய்தியைப் பகிர்ந்துகொள்ள, கடந்த 200 ஆண்டுகளாக தியாகம் செய்யப்பட்ட நேரம், ஆஸ்தி மற்றும் உயிர்களைப்பற்றி பேசுகிற ஆயிரக்கணக்கான, நூறாயிரக்கணக்கானவர்களின் கதைகளில் ஒன்று. சகல ஜாதிகள், இனங்கள், பாஷைக்காரர் மற்றும் ஜனத்திடம் செல்லும் நமது விருப்பம், முழுநேர ஊழிய அழைப்பில் தற்போது சேவையாற்றிக் கொண்டிருக்கிற ஆயிரக்கணக்குக்கும் அதிகமான இளைஞர், பெண்கள் மற்றும் தம்பதியராலும், வந்து பார்6 என்ற பிலிப்புவை எதிரொலிக்கிற சபையாராலும் பார்க்கப்படுகிறபடி, அந்த முயற்சியை உலக முழுவதிலும் ஆதரிக்க செலவிடப்படுகிற மில்லியன் கணக்கான டாலர்களாலும் மங்காமலிருக்கிறது.

நமது அழைப்புகள் கட்டாயமில்லாமல் இருக்கும்போது, ஜனங்கள் அதை கட்டாயமானதாக பார்ப்பார்கள் என நாம் நம்புகிறோம். அது அப்படியிருக்க குறைந்தபட்சம் மூன்று காரியங்கள் தேவை என நான் நம்புகிறேன், முதலாவது, உங்கள் அன்பு, இரண்டாவது உங்கள் உதாரணம், மூன்றாவது மார்மன் புஸ்தகத்தின் உங்கள் உபயோகம்.

முதலாவதாக நமது அழைப்புக்கள் சுய லாபமுடையதாயிருக்க முடியாது, மாறாக அவை சுயநலமற்ற அன்பாகிய, “பயத்தை புறம்பே தள்ளுகிற” அன்பின் தெரிவிப்பாக இருக்க வேண்டும்.7 தயாளம் என அறியப்படுகிற இந்த அன்பு, கிறிஸ்துவின் தூய அன்பு, கேட்கிற நமக்கானது. “இந்த அன்பினால் [நாமும்] நிரப்பப்படவும் … இருதயத்தின் முழு ஊக்கத்தோடு ஜெபிக்கவும்” நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம், கட்டளை கூட இடப்பட்டிருக்கிறோம்.8

ஒரு உதாரணமாக, சமோவா அபியா ஊழியத்தில் தலைமை தாங்குகிற, தலைவர் பிரான்சிஸ் ஹோ சிங் எனும் தன் கணவருடன் தற்போது சேவைசெய்து கொண்டிருக்கும் சகோதரி லானட் ஹோ சிங் சொன்ன ஒரு அனுபவத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். சகோதரி ஹோ சிங் சொல்கிறார்:

“பல வருடங்களுக்கு முன்பு எங்கள் இளம் குடும்பம் லாயி, ஹவாயில் உள்ள ஒரு சிறு வீட்டுக்கு குடி பெயர்ந்தது. எங்கள் வீட்டின் கார் நிறுத்துமிடம் ஓரறை வீடாக மாற்றப்பட்டிருந்தது, அங்கு ஜோனத்தான் எனும் மனுஷன் வாழ்ந்தார். ஜோனத்தான் மற்றொரு இடத்தில் எங்கள் அண்டை வீட்டுக்காரராக இருந்திருக்கிறார். கர்த்தர் எங்களை ஒன்றாக வைத்திருப்பது ஒரு தற்செயலானது அல்ல என உணர்ந்து, சபையில் எங்கள் நடவடிக்கைகள் மற்றும் அங்கத்தினரத்துவத்தைப்பற்றி அதிக வெளிப்படையாக இருக்க நாங்கள் தீர்மானித்தோம். ஜோனத்தான் எங்கள் நட்பை விரும்பினார் மற்றும் எங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதை நேசித்தார். சுவிசேஷத்தைப்பற்றி கற்பதை அவர் விரும்பினார், ஆனால் சபைக்கு ஒப்புக்கொடுப்பதில் அவர் ஆர்வமின்றி இருந்தார்.

“காலப்போக்கில் ஜோனத்தான் எங்கள் பிள்ளைகளிடம் ஜோனத்தான் மாமா என்ற பட்டப்பெயரைப் பெற்றார். எங்கள் குடும்பம் தொடர்ந்து வளர்ந்தபோது, எங்கள் நிகழ்ச்சிகளில் ஜோனத்தானின் ஆர்வமும் வளர்ந்தது. விடுமுறை விருந்துகளுக்கும், பிறந்த நாட்கள், பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் சபை நிகழ்ச்சிகளுக்கு எங்கள் அழைப்புகள், குடும்ப இல்ல மாலைகளுக்கும் பிள்ளைகளின் ஞானஸ்நானங்களுக்குமாய் நீண்டது.

“ஒருநாள் ஜோனத்தானிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவருக்கு உதவி தேவைப்பட்டது. அவர் சர்க்கரை வியாதியினால் கஷ்டப்பட்டார், காலை வெட்டவேண்டிய கடுமையான பாத தொற்று ஏற்பட்டது. எங்கள் குடும்பமும் அருகிலிருந்த தொகுதி அங்கத்தினர்களும் அந்த சோதனையான நேரத்தில் அவருக்கு உதவினோம். மருத்துவமனையில் முறை எடுத்துக்கொண்டோம், ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் கொடுக்கப்பட்டன. ஜோனத்தான் மறுவாழ்வு மையத்திலிருந்தபோது, ஒத்தாசைச் சங்க சகோதரிகளின் உதவியோடு, நாங்கள் அவரது வீட்டை சுத்தம் செய்தோம். ஆசாரியத்துவ சகோதரர்கள் அவரது வாசலுக்கு சாய்தளம், குளியலறையில் கைப்பிடிகள் கட்டினர். ஜோனத்தான் வீடு திரும்பியபோது அவர் உணர்ச்சியால் மேற்கொள்ளப்பட்டார்.

“ஜோனத்தான் மீண்டும் ஊழியப்பாடம் கற்க தொடங்கினார். புத்தாண்டு தினத்துக்கு முந்திய வாரம் என்னை அழைத்து கேட்டார், ‘புத்தாண்டுக்கு முந்திய மாலையில் என்ன செய்வீர்கள்?’ நமது வருடாந்தர விருந்தைப்பற்றி அவருக்கு நினைவூட்டினேன். மாறாக அவர் பதிலளித்தார், ‘என் ஞானஸ்நானத்துக்கு நீங்கள் வரவேண்டுமென விரும்புகிறேன்! இந்தப் புத்தாண்டிலிருந்தே நான் தொடங்க விரும்புகிறேன்.’ 20 ஆண்டுகளாக, ‘வந்து பாருங்கள்,’ ‘வந்து உதவுங்கள்’ மற்றும் ‘வந்து தங்குங்கள்’ என அழைத்தபிறகு, இந்த அருமையான ஆத்துமா ஞானஸ்நானத்துக்கு தயாரானது.” 9

2018ல், சமோவாவில் ஊழியத்தலைவராகவும், தோழமையாகவும் நாங்கள் அழைக்கப்பட்டபோது ஜோனத்தானின் ஆரோக்கியம் குறைந்தது. நாங்கள் திரும்பி வரக் காத்திருந்து பெலத்துடனிருக்குமாறு அவரிடம் நாங்கள் கெஞ்சினோம். அவர் கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருந்தார், ஆனால் கர்த்தர் அவர் வீட்டுக்கு வர ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஏப்ரல் 2019ல் அவர் சமாதானமாக கடந்து போனார். என் மகள்கள் தங்கள் ஜோனத்தான் மாமாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவரது ஞானஸ்நானத்தின்போது பாடிய அதே பாடலைப் பாடினர்.

இக்கேள்வியோடு மறுஸ்தாபிதத்தின் செய்தியை வெற்றிகரமாக பகிர்ந்துகொள்ள இரண்டாவது தேவையை நான் அறிமுகம் செய்கிறேன்: ஒருவருக்கு உங்கள் அழைப்பை கவர்ச்சிகரமானதாக எது ஆக்கும்? உங்கள் வாழ்க்கையின் உதாரணம் நீங்களில்லையா? மறுஸ்தாபிதத்தின் செய்தியை கேட்டு ஏற்றுக்கொண்ட அநேகர், இயேசு கிறிஸ்துவின் சபையின் ஒரு அங்கத்தினர் அல்லது அங்கத்தினர்களில் அவர்கள் பார்த்தவற்றால் முதலில் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் பிறரை நடத்திய விதம், அவர்கள் சொன்ன அல்லது சொல்லாத காரியங்கள், கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் காட்டிய உறுதி, அல்லது அவர்களது முகரூபம் மட்டுமேவாக இருந்திருக்கிறது. 9

அது எப்படியானாலும், நமது அழைப்புக்கள் அழைப்புக்களாக இருக்க, நம்மால் இயன்றபடி மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப் புரிந்து, அதன் கொள்கைகளின்படி நாம் வாழ வேண்டும் என்ற உண்மையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. இன்று அதிகாரபூர்வம் என அடிக்கடி குறிப்பிடப்படுகிற ஒன்று அதுவாகும். கிறிஸ்துவின் அன்பு நம்மில் தரித்திருந்தால், அவர்கள் மீது நம் அன்பு உண்மையானதென பிறர் அறிவர். பரிசுத்த ஆவியின் ஒளி நம்முள்ளே எரிந்தால், அது கிறிஸ்துவின் ஒளியை அவர்களுக்குள் மீண்டும் தூண்டும்.10 இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையின் மகிழ்ச்சியை வந்து அனுபவிக்க உங்கள் அழைப்புக்கு நீங்கள் யார் என்பது அதிகாரபூர்வம் கொடுக்கிறது.

மார்மன் புஸ்தகமாகிய, இந்த கடைசி ஊழியக்காலத்திற்காக கர்த்தர் வடிவமைத்த மனமாற்றக் கருவியை தாராளமாக பயன்படுத்துவது மூன்றாவது தேவை. இயேசு கிறிஸ்துவின் தெய்வீக தன்மை மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றிய ஜோசப் ஸ்மித்தின் அழைப்பு மற்றும் திருப்திகரமான ஆதாரம் பரீட்சிக்கத்தக்க ஆதாரமாகும். நமது பரலோக பிதாவின் மீட்பின் திட்டத்தை அது வெளிப்படுத்துவது ஒப்பில்லாதது. நீங்கள் மார்மன் புஸ்தகத்தை பகிர்ந்துகொள்ளும்போது, நீங்கள் மறுஸ்தாபிதத்தை பகிர்ந்துகொள்கிறீர்கள்.

ஜேசன் ஆல்சனுக்கு பதின்ம வயதாயிருக்கும்போது, கிறிஸ்தவனாக ஆகுவதற்கு எதிராக குடும்பத்தினராலும் பிறராலும் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டான். அவனுக்கு இரு நண்பர்கள் இருந்தனர், எனினும் அவர்கள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்கள், அவர்கள் அடிக்கடி மதத்தைப்பற்றி கலந்துரையாடினர். அவனது நண்பர்கள் ஷியா மற்றும் டேவ், இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துக்கு எதிராக ஜேசனுக்கு கொடுத்த வாக்குவாதத்துக்கு மரியாதையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியாக, “இப்புஸ்தகம் உன் கேள்விகளுக்கு பதிலளிக்கும்” என்று சொல்லி மார்மன் புஸ்தக பிரதியை அவனுக்கு அவர்கள் கொடுத்தனர். “தயவுசெய்து இதை வாசி.” அவன் தயக்கத்துடன் புஸ்தகத்தை ஏற்றுக்கொண்டு, தன் பையில் வைத்தான், அங்கு அது பல மாதங்களுக்கு இருந்தது. அவனது குடும்பம் அதைப் பார்க்கக்கூடிய வீட்டில் அதை வைக்க அவன் விரும்பவில்லை, அதைத் திரும்பக் கொடுத்து ஷியாவையும் டேவையும் ஏமாற்றமடையச் செய்யவும் அவன் விரும்பவில்லை. கடைசியாக புஸ்தகத்தை எரிக்கும் முடிவுக்கு வந்தான்.

ஒரு இரவில், ஒரு கையில் தீப்பெட்டியும், மறு கையில் மார்மன் புஸ்தகமும் வைத்துக்கொண்டு, புஸ்தகத்தை எரிக்கவிருந்தபோது, “என் புஸ்தகத்தை எரிக்காதே” என்று சொன்ன குரலை மனதில் கேட்டான். அதிர்ச்சியடைந்து அவன் நிறுத்தினான். பின்பு அக்குரலை தான் கற்பனை செய்ததாக எண்ணி, திரும்பவும் தீக்குச்சியை பற்றவைக்க முயன்றான். மீண்டும் குரல் அவன் மனதில் வந்தது: “உன் அறைக்குச் சென்று என் புஸ்தகத்தை வாசி.” ஜேசன் தீக்குச்சியை போட்டுவிட்டு, தன் படுக்கையறைக்குத் திரும்பச் சென்று, மார்மன் புஸ்தகத்தை திறந்து வாசிக்கத் தொடங்கினான். பெரும்பாலும் அதிகாலையில், நாள்தோறும் அவன் வாசிக்கத் தொடர்ந்தான். ஜேசன் ஒரு முடிவுக்கு வந்து, ஜெபித்தான், அவன் பதிவு செய்தான், “என் தலை உச்சியிலிருந்து என் கால்களின் பாதங்கள் வரை நான் நிரப்பப்பட்டேன். … நான் ஒளியால் நிரப்பப்பட்டதாக உணர்ந்தேன். … என் வாழ்க்கையில் நான் எப்போதும் பெற்ற மிக சந்தோஷமான அனுபவம் அது.” அவன் ஞானஸ்நானம் பெற வேண்டினான், பின்பு அவனே ஊழியக்காரனானான்.

ஒருவேளை உண்மையான அன்பு மற்றும் நேர்மை இருந்தாலும் அநேகம், அதிகமானவை இல்லாவிட்டாலும் மறுஸ்தாபிதத்தைப்பற்றிய செய்தியை பகிர்ந்துகொள்ள நமது அழைப்புகள் மறுக்கப்படும் என்பது சொல்லாமல் விடப்படுகிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளுங்கள்; அப்படிப்பட்ட ஒரு அழைப்புக்கு ஒவ்வொருவரும் தகுதியானவர்கள், ”அனைவரும் தேவனுக்கு சமமானவர்களே”; 11 விளைவு எதுவானாலும் நாம் செய்கிற ஒவ்வொரு முயற்சிக்காகவும் அவர் மகிழ்கிறார்; மறுக்கப்பட்ட அழைப்பு நமது உறவு முடியக் காரணமல்ல; இன்றைய ஆர்வக்குறைவு ஒரு வருங்கால நாளில் ஆர்வமாக மாறும். அது பொருட்டின்றி, நமது அன்பு மாறாததாக இருக்கிறது.

மிகுந்த கஷ்டம் மற்றும் தியாகத்திலிருந்து மறுஸ்தாபிதம் வந்திருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறக்காமலிருப்போமாக. அது மற்றொரு நாளுக்கான தலைப்பு. மிகக் கடந்த நிலைகளில் ஒன்றில் பூமியிலும் பரலோகத்திலும் கட்டும் வல்லமையால் மீண்டும் இன்று நாம் மறுஸ்தாபிதத்தின் கனிகளில் களிகூர்கிறோம்.12 தலைவர் கார்டன் பி. ஹிங்க்லியால் பல ஆண்டுகளுக்கு முன் தெரிவிக்கப்பட்டது போல, “என்றென்றைக்குமாய் குடும்பங்களை ஒன்றாகக் கட்ட பரிசுத்த ஆசாரியத்துவத்தின் முத்திரிக்கும் வல்லமையைவிட மறுஸ்தாபிதத்தின் துயரம் கஷ்டம் மற்றும் வேதனை எல்லாவற்றிலுமிருந்து வேறொன்றும் வராவிட்டால், இதற்கான செலவு அனைத்துக்கும் அது தகுதியானதே.”13

மறுஸ்தாபிதத்தின் வாக்குத்தத்தம் இயேசு கிறிஸ்து மூலம் மீட்பு. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவரிடத்தில் வரும் அனைவரையும் மீட்க, துக்கம், அநீதி, வருத்தம், பாவம், மற்றும் மரணத்திலிருந்து கூட அவர்களை மீட்க, உண்மையாகவே அவர் வல்லமை பெற்றிருக்கிறார் என்பதன் நிரூபணம். இன்று குருத்தோலை ஞாயிறு, இன்றிலிருந்து ஒரு வாரத்தில் ஈஸ்டர். நமது பாவங்களுக்காக கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணத்தை நாம் நினைவுகொள்கிறோம், நாம் எப்போதும் நினைவுகொள்கிறோம், கர்த்தரின் நாளாகிய மரித்தோரிலிருந்து அவர் உயிர்த்தெழுந்த அந்த மிக அற்புதமான ஞாயிற்றுக்கிழமைகளை நாம் கொண்டாடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினிமித்தம் மறுஸ்தாபிதம் அர்த்தம் பெறுகிறது, நமது அநித்திய வாழ்வு அர்த்தம் பெறுகிறது, முடிவாக நமது வாழ்க்கையே அர்த்தம் பெறுகிறது.

ஜோசப் ஸ்மித் மறுஸ்தாபிதத்தின் மாபெரும் தீர்க்கதரிசி, உயிர்த்தெழுந்த ஜீவிக்கும் கிறிஸ்துவைப்பற்றி நமது காலத்துக்கான சிறந்த சாட்சி கொடுக்கிறார்: “அவர் ஜீவிக்கிறார்! ஏனெனில் தேவனின் வலது பாரிசத்தில் நாங்கள் அவரைப் பார்த்தோம்.”14 ஜோசப் மற்றும் அவருக்கு முந்திய அனைத்து அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும், அவருக்கு பின்வந்த அனைத்து அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளுக்கும், நாசரேத்தின் இயேசு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா, தேவனின் ஒரே பேறான குமாரன், அனைத்து மனுக்குலத்தின் உயிர்த்தெழுந்த மீட்பர் என என் தாழ்மையான சாட்சியை சேர்க்கிறேன்.

“மறுஸ்தாபிதத்தின் செய்தியை ஜெபத்துடன் படித்து விசுவாசத்தில் செயல்படுபவர்கள், நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு, உலகத்தை ஆயத்தப்படுத்த, அதன் தெய்வீகத்தன்மை மற்றும் அதன் நோக்கத்தில் தங்களுடைய சொந்த சாட்சியைப் பெற, ஆசீர்வதிக்கப்படுவார்கள்”15என்ற அதன் பிரகடனத்தை நாங்கள் உறுதி செய்கிறோம். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவரது வாக்குத்தத்தத்தை உறுதியாக்குகிறது. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.