பொது மாநாடு
நினைவுகளை ஆவிக்குரிய விதமாக வரையறுத்தல்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


நினைவுகளை ஆவிக்குரிய விதமாக வரையறுத்தல்

நம்முடைய தனிப்பட்ட கஷ்டங்கள் அல்லது உலக நிலைமைகள் நமது கட்டுப்பாட்டிற்கும் அப்பால் நமது பாதையை இருட்டாக்கும்போது, நமது ஜீவபுஸ்தகத்திலுள்ள ஆவிக்குரியவிதமான வரையறுக்கும் நினைவுகள், நமக்கு முன்னாலிருக்கிற சாலையை பிரகாசிக்கப்பண்ண உதவுகிற பிரகாசிக்கிற கற்களாயிருக்கின்றன.

முதல் தரிசனத்துக்கு பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் தனது அனுபவத்தைப்பற்றிய ஒரு விரிவான விவரத்தை எழுதினார். அவர் எதிர்ப்பை, துன்புறுத்தலை, தொல்லைகளை, பயமுறுத்தல்களை, மிருகத்தனமான தாக்குதல்களை எதிர்கொண்டார்.1 இருந்தும் அவருடைய முதல் தரிசனத்தைக் குறித்து அவர் தொடர்ந்து தைரியமாக சாட்சியளித்தார்: “உண்மையில் நான் ஒரு ஒளியைக் கண்டேன், அந்த ஒளிக்கு மத்தியில் இரண்டு நபர்களை நான் கண்டேன், நிஜமாகவே அவர்கள் என்னிடம் பேசினார்கள், நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன் என சொல்லுவதற்கு நான் வெறுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டாலும்கூட அதுதான் உண்மை. … அதை நான் அறிவேன், அதை தேவன் அறிவாரென நான் அறிவேன், அதை என்னால் மறுக்கமுடியவில்லை.”2

அவரது கடினமான நேரத்தில், அவர்மீது தேவனுடைய அன்பு மற்றும் நீண்டகாலமாக முன்னறிவிக்கப்பட்ட மறுஸ்தாபிதத்தை வரவேற்ற நிகழ்ச்சிகளுக்கு ஜோசப்பின் நினைவு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. அவருடைய ஆவிக்குரிய பயணத்தை நினைவுபடுத்தி ஜோசப் சொன்னார்: “எனது வரலாற்றை நம்பாததற்காக நான் யாரையும் குறை சொல்லவில்லை. என்னிடமுள்ளவற்றை நான் அனுபவித்திருக்காவிட்டால், அதை நானே நம்பியிருக்க மாட்டேன்.”3

ஆனால் அனுபவங்கள் நிஜமாயிருந்தன, அவர் கார்தேஜூக்கு சென்றபோது அவருடைய சாட்சியத்தை அமைதியாக உறுதிப்படுத்தி, அவைகளை அவர் ஒருபோதும் மறக்கவில்லை அல்லது மறுக்கவில்லை, . அவர் சொன்னார், “வெட்டப்படுவதற்கு கொண்டுபோகப்படுகிற ஆட்டைப்போல நான் போய்க்கொண்டிருந்தேன், ஆனால், ஒரு கோடைகால காலையைப்போல நான் அமைதியாயிருந்தேன், தேவன் மேலும், சகல மனிதர் மேலும் குற்றம் காணாத வெற்றிடமான மனசாட்சி எனக்கிருக்கிறது.”4

உங்களுடைய ஆவிக்குரியவிதமான வரையறுக்கப்பட்ட அனுபவங்கள்

தீர்க்கதரிசி ஜோசப்பின் எடுத்துக்காட்டில் நமக்கு ஒரு பாடமிருக்கிறது. பரிசுத்த ஆவியிடமிருந்து நாம் பெறுகிற சமாதானமான வழிநடத்துதலுடன், அவ்வப்போது, தேவன் நம்மை அறிவார், நம்மை நேசிக்கிறார் என்றும், அவர் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் நம்மை ஆசீர்வதிக்கிறார் என்றும் தேவன் ஒவ்வொருவருக்கும் வல்லமையாகவும் மற்றும் மிகவும் தனிப்பட்ட முறையிலும் உறுதியளிக்கிறார். பின்னர், நம்முடைய சிரமமான தருணங்களில், இரட்சகர் இந்த அனுபவங்களை மீண்டும் நம் மனதில் கொண்டு வருகிறார்.

உங்களுடைய சொந்த வாழ்க்கையைப்பற்றி சிந்தியுங்கள். பல ஆண்டுகளாக, தேவன் நம் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார், நேசிக்கிறார், மேலும் அவர் நமக்கு தன்னை வெளிப்படுத்த ஆவலுடன் விரும்புகிறார் என்று எந்தவொரு கேள்விக்கும் அப்பால் எனக்கு உறுதிப்படுத்தி, உலகெங்கிலும் உள்ள பிற்காலப் பரிசுத்தவான்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ஆழ்ந்த ஆவிக்குரிய அனுபவங்களை நான் கேட்டிருக்கிறேன், இந்த அனுபவங்கள் நம் வாழ்க்கையில் முக்கியமான நேரங்களில் வரக்கூடும், அல்லது முதலில் முக்கியமற்ற நிகழ்வுகளாகத் தோன்றலாம், ஆனால் அவை எப்போதும் தேவனின் அன்பின் விதிவிலக்காக வலுவான ஆவிக்குரிய உறுதிப்படுத்தலுடன் கூடவருகின்றன.

தீர்க்கதரிசி ஜோசப் அறிவித்ததைப்போல, ஆவிக்குரிய ரீதியில் வரையறுக்கும் அனுபவங்களை நினைவில் வைத்துக் கொள்வது, நம்மை முழங்கால்படியிட வைக்கும்: “நான் பெற்றது பரலோகத்திலிருந்து வந்தது. நான் அதை அறிவேன், நான் அறிவேன் என தேவன் அறிவதை நான் அறிவேன்.” 5

நான்கு எடுத்துக்காட்டுகள்

மற்றவர்களிடமிருந்து ஒரு சில எடுத்துக்காட்டுகளை நான் பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் சொந்த ஆவிக்குரிய ரீதியில் வரையறுக்கும் நினைவுகளைப்பற்றி சிந்தியுங்கள்.

படம்
டாக்டர் ரசல் எம். நெல்சன்

பல ஆண்டுகளுக்கு முன்பு, பழுதடைந்த இரண்டாவது வால்வுக்கு, அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை தீர்வு இல்லாமலிருந்தும், இரண்டு பழுதடைந்த இருதய வால்வுகளுடன் ஒரு வயதான பிணைய கோத்திரத் தலைவர் அப்போதைய மருத்துவரான டாக்டர் ரசல். எம். நெல்சன் தலையிடுமாறு அவரிடம் மன்றாடினார். அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் நெல்சன் இறுதியாக ஒப்புக்கொண்டார். பின்வருபவை தலைவர் நெல்சனின் வார்த்தைகள்:

“முதல் வால்வின் அடைப்பை நீக்கிய பிறகு, இரண்டாவது வால்வை திறந்தோம். அது சேதப்படாமல் இருந்தது, ஆனால் செயல்பட வேண்டிய அளவுக்கு இனியும் செயல்பட முடியாத அளவுக்கு அது மோசமாக விரிவடைந்திருந்தது. இந்த வால்வை ஆராயும்போது, ஒரு செய்தி என் மனதில் வித்தியாசமாக உணர்த்தியது: வளையத்தின் சுற்றளவைக் குறைக்கவும். என்னுடைய உதவியாளருக்கு அந்த செய்தியை நான் அறிவித்தேன். ‘வளையத்தின் அதன் இயல்பான அளவை எங்களால் திறம்பட குறைக்க முடிந்தால் வால்வு திசு போதுமானதாக இருக்கும்.’

“ஆனால் எவ்வாறு? … இங்கே ஒரு மடிப்பும் அங்கே ஒரு செருகலையும் உண்டாக்க தையல் எவ்வாறு போடப்படலாம் என்பதைக் காட்டுகிற ஒரு படம் என் மனதில் தெளிவாக வந்தது. … தையல்கள் எங்கே வைக்கப்படவேண்டும் என்ற முழுமையான புள்ளியிடப்பட்ட கோடுகளுடன் அந்த மன உருவத்தை நான் இன்னமும் நினைவுகூருகிறேன். என் மனதில் வரைபடமாக்கப்பட்டதைப்போல சரிசெய்தல் நிறைவடைந்தது. நாங்கள் வால்வை சோதித்தோம், கசிவு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டதை கண்டோம். என்னுடைய உதவியாளர் சொன்னார், ‘இது ஒரு அற்புதம்.’”6 அந்த கோத்திரத்தலைவர் அநேக ஆண்டுகள் வாழ்ந்தார்.

டாக்டர் நெல்சன் வழிநடத்தப்பட்டிருந்தார். அவர் வழிநடத்தப்படிருந்தாரென அவர் அறிந்திருந்தார் என தேவன் தெரிந்திருந்தார் என அவர் அறிந்திருந்தார்.

படம்
பியுட்ரைஸ் மாக்ரெ

30 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் பீட்ரைஸ் மேகரை, கேதியும் நானும் முதலாவதாக சந்தித்தோம். ஒரு பதின்ம பருவத்தினளாக அவளுடைய ஞானஸ்நானத்திற்குப் பின்னர் சிறிது நேரத்திலேயே அவளுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பாதித்த ஒரு அனுபவத்தைப்பற்றி பீட்ரைஸ் சமீபத்தில் என்னிடம் கூறினாள். பின்வருபவை அவளுடைய வார்த்தைகள்:

“போர்டெக்ஸிலிருந்து ஒன்றரை மணி பயண நேரத்திலிருந்த லாகான்னா கடற்கரைக்கு எங்கள் கிளையிலுள்ள வாலிப வயதினர் தங்கள் தலைவர்களுடன் பயணித்தனர்.

“வீட்டிற்கு திரும்புவதற்கு முன், கடைசிமுறையாக நீச்சலடிக்கவும், தன்னுடைய கண்ணாடியுடன் அலைகளில் குதிக்கவும் தலைவர்களில் ஒருவர் தீர்மானித்தார். அவர் நீர்மட்டத்துக்கு வந்தபோது. அவருடைய கண்ணாடி மறைந்துபோயிருந்தது. … அவைகள் சமுத்திரத்தில் காணாமற்போயின.

அவருடைய கண்ணாடி காணாமற்போனது அவருடைய காரை ஓட்ட அவரைத் தடுக்கும். வீட்டிலிருந்து அதிக தூரத்தில் நாங்கள் சிக்கித் தவித்திருப்போம்.

“நாங்கள் ஜெபிக்கும்படியாக விசுவாசத்துடன் நிரப்பப்பட்ட ஒரு சகோதரி பரிந்துரைத்தாள்.

“ஜெபிப்பதால் முற்றிலும் எதுவும் நமக்குக் கிடைக்காது என நான் முணுமுணுத்து, மனதில்லாமல் குழுவில் சேர்ந்து, ஜெபிக்க, இடுப்பளவுக்கு ஆழமான கலங்கிய தண்ணீரில் நாங்கள் நின்றோம்.

“ஜெபம் முடிந்த உடனேயே அனைவர்மீதும் தண்ணீரைத் தெளிக்க என் கைகளை நான் நீட்டினேன். சமுத்திரத்தின் மேல்மட்டத்தை நான் அளாவியபோது, அவருடைய ஜோடி கண்ணாடி என் கையில் மாட்டியது. உண்மையிலேயே தேவன் நமது ஜெபங்களைக் கேட்கிறார் என்ற ஒரு சக்திவாய்ந்த உணர்வு என் ஆத்துமாவை ஊடுருவியது.”7

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இது நேற்று நடந்ததைப்போல அதை அவள் நினைவுகூர்ந்தாள். பீட்ரைஸ் ஆசீர்வதிக்கப்பட்டாள், அவள் ஆசீர்வதிக்கப்பட்டாள் என்று அவளுக்குத் தெரியும் என்று தேவனுக்குத் தெரியும் என்று அவளுக்குத் தெரியும்.

தலைவர் நெல்சன் மற்றும் சகோதரி மேக்ரே ஆகியோரின் அனுபவங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன, இருப்பினும், இருவருக்கும், தேவனின் அன்பின் மறக்க முடியாத ஆவிக்குரிய ரீதியான நினைவு அவர்களின் இருதயங்களில் பதிக்கப்பட்டிருந்தன.

இந்த வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் பெரும்பாலும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப்பற்றி அறிந்து கொள்வதில் அல்லது மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதில் வருகின்றன.

படம்
பிளாரிபஸ் லூசியா டமாஸியோ மற்றும் நீல் எல். ஆன்டர்சன்

இந்த படம் சா பவுலோ, பிரேசிலில் 2004ல் எடுக்கப்பட்டது. இபான்டிக்கா பிரேசில் பிணையத்தின் ப்லோரிபஸ் லூசியா டமாலியோ 114 வயதானவர். தன் மனமாற்றத்தைப்பற்றி பேசிய சகோதரி டமாசியோ, தனது கிராமத்தில் உள்ள ஊழியக்காரர்கள் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு குழந்தைக்கு ஆசாரிய ஆசீர்வாதத்தை வழங்கி அந்த குழந்தை அற்புதமாக குணமடைந்ததைப்பற்றி என்னிடம் கூறினார். அவர் உண்மையாகவே நிறைய அறிய விரும்பினாள். அவர்களுடைய செய்தியைப்பற்றி அவர் ஜெபித்தபோது, ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசி என்பதை பரிசுத்த ஆவியின் மறுக்க முடியாத சாட்சி அவருக்கு உறுதிப்படுத்தியது. 103வது வயதில் அவர் ஞானல்நானம் பெற்று 104வது வயதில் தரிப்பிக்கப்பட்டார். ஆலயத்தில் ஒரு வாரத்தைக் கழிக்க ஒவ்வொரு ஆண்டும் 14மணிநேர பேருந்து பயணத்தை அவர் மேற்கொண்டார். சகோதரி டமாசியோ ஒரு பரலோக உறுதிப்பாட்டைப் பெற்றார், சாட்சி உண்மை என்று அவருக்குத் தெரியும் என்று தேவன் அறிந்திருப்பதை அவர் அறிந்திருந்தார்.

48 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் என்னுடைய முதல் ஊழியத்திலிருந்து இதோ ஒரு ஆவிக்குரிய நினைவு.

நடந்து செல்லும் போது, நானும் என் தோழனும் ஒரு வயதான பெண்ணிடம் மார்மன் புஸ்தகத்தை கொடுத்தோம். சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் அந்த பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்புக்கு நாங்கள் திரும்பிப்போனபோது அவர் கதவைத் திறந்தார். எந்த ஒரு வார்த்தையும் பேசப்படுவதற்கு முன்னரே, ஒரு தெளிவான ஆவிக்குரிய வல்லமையை நான் உணர்ந்தேன். சகோதரி ஆலிஸ் ஆடுபர்ட் எங்களை உள்ளே அழைத்து, மார்மன் புஸ்தகத்தை அவர் படித்ததாகவும், அது உண்மை என்று அறிந்ததாகவும் எங்களிடம் சொன்னபோது, ஆழ்ந்த உணர்வுகள் தொடர்ந்தன. அன்று நாங்கள் அவருடைய அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறியபோது, “பரலோக பிதாவே, நான் இப்போது உணர்ந்ததை ஒருபோதும் மறக்காதவாறு தயவுசெய்து எனக்கு உதவும்” என்று நான் ஜெபித்தேன். நான் ஒருபோதும் மறக்கவில்லை.

படம்
மூப்பர் ஆன்டர்சன் ஒரு ஊழியக்காரராக

ஒரு சாதாரண தருணமாக தோன்றியதில், நூற்றுக்கணக்கான பிற வாசல்களைப் போன்ற ஒரு வாசலில், பரலோகத்தின் வல்லமையை நான் உணர்ந்தேன். பரலோகத்தின் ஜன்னல் ஒன்று திறந்தது என நான் அறிந்ததை, தேவன் அறிந்தாரென நான் அறிவேன்.

தனியாக்கப்பட்டதும் மறுக்கமுடியாததும்

ஆவிக்குரிய ரீதியாக வரையறுக்கும் இந்த தருணங்கள் வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு வழிகளிலும் வந்து, அவை நம் ஒவ்வொருவருக்கும் தனியாக்கப்பட்டுள்ளன.

வேதங்களில் உங்களுக்கு பிடித்த எடுத்துக்காட்டுகளைப்பற்றி சிந்தியுங்கள். அப்போஸ்தலன் பேதுருவுக்கு செவிசாய்த்தவர்கள் “தங்கள் இருதயத்திலே குத்தப்பட்டார்கள்.”8 லாமானிய பெண் ஆபிஷ் “தன் தகப்பன் கண்ட ஒரு விசேஷமான தரிசனத்தை,” நம்பினாள்.”9 ஏனோஸின் மனதில் ஒரு குரல் வந்தது.10

என் நண்பர் கிளேட்டன் கிறிஸ்டென்சன் மார்மன் புஸ்தகத்தை மிகுந்த ஜெபத்துடன் வாசித்தபோது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இந்த வகையில் விவரித்தார்: “ஒரு அழகான, இதமான, அன்பான ஆவி… என்னைச் சூழ்ந்து என் ஆத்துமாவை ஊடுருவி, என்னால் உணரமுடியும் என கற்பனை செய்ய முடியாத ஒரு அன்பின் உணர்வு என்னை சூழ்ந்தது. [இந்த உணர்வுகள் இரவுக்குப் பின் இரவாக தொடர்ந்தன]. ”11

ஆவிக்குரிய உணர்வுகள் நெருப்பைப் போல நம் இருதயத்திற்குள் சென்று, நம் ஆத்துமாவை ஒளிரச் செய்யும் நேரங்கள் உள்ளன. சிலநேரங்களில் நாம் “திடீர் கருத்துக்களை” பெறுவதாகவும், எப்போதாவது புத்திசாலித்தனத்தின் தூய்மையான பொழிவைப் பெறுவதாகவும் ஜோசப் ஸ்மித் விளக்கினார்.12

இத்தகைய அனுபவம் ஒருபோதும் பெற்றது இல்லை என்று கூறிய ஒரு நேர்மையான மனிதருக்கு தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் பதிலளித்தபோது ஆலோசனையளித்தார், “ஒருவேளை உங்கள் ஜெபங்களுக்கு மீண்டும் மீண்டும் பதில் கிடைத்திருக்கலாம், ஆனால் உங்கள் எதிர்பார்ப்புகள் ஒரு பிரமாண்டமான அடையாளமாகவோ அல்லது சத்தமாகவோ நீங்கள் நிச்சயித்திருப்பதால் பதில் பெறவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.”13 “அக்கினியாலும் பரிசுத்த ஆவியினாலும் [ஆசீர்வதிக்கப்பட்டு] [ஆனால்] அதை அறியாத ஜனத்துடன்” மிகுந்த விசுவாசத்துடன் இரட்சகரே பேசினார்.14

நீங்கள் அவர் சொல்வதை எப்படி கேட்கிறீர்கள்?

தலைவர் ரசல் எம்.நெல்சன் சமீபத்தில் சொன்னவற்றை நாம் கேட்டோம்: “இந்த முக்கிய கேள்வியைப்பற்றி ஆழமாகவும் அடிக்கடி சிந்திக்கவும் நான் உங்களை அழைக்கிறேன்: நீங்கள் அவருக்கு எவ்வாறு செவிகொடுப்பீர்கள்? அவருக்கு சிறப்பாகவும், அடிக்கடியும் செவிகொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன்.”15 அந்த அழைப்பை இந்த காலைநேரத்தில் அவர் மீண்டும் கொடுத்தார்.

திருவிருந்தில் தகுதியுள்ளவர்களாக நாம் பங்கெடுக்கும்போது, நமது விசுவாசத்தை அறிக்கையிடும்போது, நாம் மற்றவர்களுக்கு சேவைசெய்யும்போது, சகவிசுவாசிகளுடன் ஆலயத்திற்குச் செல்லும்போது, நம்முடைய ஜெபங்களிலும், நம் வீடுகளிலும், வேதங்களிலும், நம்முடைய பாடல்களிலும், நாம் அவருக்குச் செவிகொடுக்கிறோம். பொது மாநாட்டை நாம் ஜெபத்துடன் கேட்கும்போதும், கட்டளைகளை சிறப்பாக கைக்கொள்ளும்போதும் ஆவிக்குரிய ரீதியாக வரையறுக்கும் தருணங்கள் வருகிறது. பிள்ளைகளே, இந்த அனுபவங்கள் உங்களுக்கும் உண்டு. இயேசு “பிள்ளைகளுக்கு போதித்து ஊழியம் செய்தார் … [பிள்ளைகள்] பெரிதும் அற்புதமுமான காரியங்களைப் பேசினார்கள்,” என்பதை நினைவுகூருங்கள்.16 கர்த்தர் சொன்னார்:

“[இந்த அறிவு] எனது ஆவியால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவை … எனது வல்லமையாலன்றி நீங்கள் [அதைப்] பெற முடியாது;

“ஆகவே, நீங்கள் எனது குரலைக் கேட்டதாகவும், எனது வார்த்தைகளை அறிந்ததாகவும் நீங்கள் சாட்சியளிக்கலாம்.”17

இரட்சகரின் ஒப்பிடமுடியாத பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களால் நாம் அவருக்குச் “செவிகொடுக்க” முடியும்.

இந்த வரையறுக்கப்பட்ட தருணங்களைப் பெறுவதற்கான நேரத்தை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாதபோது, நமது ஆயத்தத்தில் தலைவர் ஹென்றி பி. ஐரிங் இந்த ஆலோசனையை வழங்கினார்: “இன்றிரவும், நாளை இரவும், கேள்விகளைக் கேட்டு நீங்கள் ஜெபித்து சிந்திக்கலாம்: எனக்காக மட்டும் தேவன் ஒரு செய்தியை அனுப்பினாரா? என்னுடைய வாழ்க்கையில் அல்லது என்னுடைய [குடும்பத்தின்], வாழ்க்கையில் அவருடைய கரத்தை நான் பார்த்தேனா?”18 விசுவாசம், கீழ்ப்படிதல், அடக்கம் மற்றும் உண்மையான நோக்கம் பரலோகத்தின் ஜன்னல்களைத் திறக்கிறது.19

ஒரு சித்தரிப்பு

படம்
வாழ்க்கையின் வழியே பயணித்தல்
படம்
ஆவிக்குரிய நினைவுகள் ஒளியைக் கொடுக்கிறது
படம்
மற்றவர்களுக்கு உதவுதல் ஆவிக்குரிய ஒளியை மீண்டும் கண்டுபிடிக்கிறது

இந்த வழியில் நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய நினைவுகளை சிந்திக்கலாம். நிரந்தர ஜெபத்துடன், நமது உடன்படிக்கைகளை கைக்கொள்ள ஒரு தீர்மானத்துடன், பரிசுத்த ஆவியின் வரத்துடன் நம்முடைய வாழ்க்கையின் வழியே நாம் பயணிக்கிறோம். தனிப்பட்ட சிரமம், சந்தேகம் அல்லது ஊக்கம் நம் பாதையை இருளாக்கும் போது, அல்லது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உலக நிலைமைகள் வருங்காலத்தைப்பற்றி ஆச்சரியப்பட நடத்தும்போது, நம் ஜீவ புஸ்தகத்திலிருந்து ஆவிக்குரிய ரீதியில் வரையறுக்கும் நினைவுகள், தேவன் நம்மை அறிகிறார், நம்மை நேசிக்கிறார், வீட்டிற்கு திரும்ப வர உதவும்படி அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பியுள்ளார் என நமக்கு உறுதியளித்து அவை முன்னாலுள்ள பாதையை பிரகாசமாக்க உதவுகிற ஒளிரும் கற்களைப் போன்றவை. ஒருவர் அவருடைய வரையறுக்கும் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தொலைந்து போகும்போது அல்லது குழப்பமடையும்போது, ஒரு சமயம் அவர்கள் பொக்கிஷப்படுத்தியிருந்த அந்த அருமையான ஆவிக்குரிய தருணங்களை திரும்பக் கண்டுபிடிக்க அவர்களுக்குதவி, அவர்களோடு நமது விசுவாசத்தையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளும்போது அவர்களை இரட்சகருக்கு நேராக நாம் திருப்புகிறோம்.

சில அனுபவங்கள் மிக பரிசுத்தமானவையானதால் நமது ஆவிக்குரிய நினைவுகளில் அவைகளை நாம் பாதுகாக்கிறோம், நாம் அவைகளை பகிர்ந்துகொள்வதில்லை.20

“தூதர்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் பேசுகிறார்கள்; ஆகையால் அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.”21

“மனுபுத்திரருக்குள்ளே தூதர்களும் பணிவிடை செய்வதிலிருந்து ஓய்ந்து போகவில்லை.

“ஏனெனில் இதோ, பெலமான விசுவாசமும், எல்லா வகையான தெய்வத் தன்மையைக்கொண்ட உறுதியான மனதோடு இருப்பவர்களுக்கு தங்களையே காண்பித்து, அவருடைய கட்டளையின்படியே ஊழியம்பண்ணவும், அவர்கள் [கிறிஸ்துவுக்குக்] கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.”22

“பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.”23

உங்களுடைய பரிசுத்த ஞாபகங்களை அரவணையுங்கள். அவைகளை நம்புங்கள். அவைகளை எழுதி வையுங்கள். உங்கள் குடும்பத்துடன் அவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள். அவை உங்கள் பரலோக பிதாவிடமிருந்தும் அவருடைய நேச குமாரனிடமிருந்தும் உங்களுக்கு வருகிறதென நம்புங்கள்.24 உங்களுடைய சந்தேகங்களுக்கு பொறுமையையும், உங்களுடைய சிரமங்களுக்கு புரிந்துகொள்ளுதலையும் அவைகள் கொண்டுவருவதாக.25 உங்கள் வாழ்க்கையில், ஆவிக்குரிய வரையறுக்கும் நிகழ்வுகளை நீங்கள் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு, கவனத்துடன் பொக்கிஷப்படுத்தும்போது, மேலும் மேலும் உங்களுக்கு வருமென நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். பரலோக பிதா உங்களை அறிந்திருக்கிறார், உங்களை நேசிக்கிறார்.

இயேசுவே கிறிஸ்து, அவருடைய சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கிறது, நாம் விசுவாசமுள்ளவர்களாக நிலைத்திருக்கும்போது, என்றென்றும் நாம் அவருடையவர்களாயிருப்போம் என நான் சாட்சியளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. Saints: The Story of the Church of Jesus Christ in the Latter Days, vol. 1, The Standard of Truth, 1815–1846 (2018), 150–53; see also Joseph Smith, “History, 1838–1856, volume A-1 [23 December 1805–30 August 1834],” 205–9, josephsmithpapers.org; Saints, 1:365–66 பார்க்கவும்.

  2. ஜோசப் ஸமித்—வரலாறு 1:25.

  3. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 525.

  4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135:4.

  5. ஜோசப் ஸ்மித்—வரலாற்றிலுள்ள வார்த்தைகளால் நான் எப்போதும் கவரப்பட்டேன்: “நான் ஒரு தரிசனம் கண்டேன்; அதை நான் அறிவேன், தேவன் அதை அறிவார் என நான் அறிவேன்” (Joseph Smith—History 1:25). அவருடைய வாழ்க்கையில், பரிசுத்த தோப்பில் இந்த நிகழ்வுகள் உண்மையாகவே நடந்தன என்றும் அதன் காரணமாக அவரது வாழ்க்கை ஒருபோதும் இதே மாதிரியாக இருக்க முடியாது என்றும் அவர் தேவனுக்கு முன்பாக நின்றிருக்கவேண்டும். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, மூப்பர் நீல் எ.மேக்ஸ்வெல்லால் இந்த சொற்றொடரின் ஒரு மாறுபாட்டை முதன்முறையாக நான் கேட்டேன். அவர் இந்த எடுத்துக்காட்டைக் கொடுத்தார்: “நீண்ட காலத்திற்கு முன்பு 1945 மே மாதத்தில் ஒகினாவா தீவில் என்னுடைய பதினெட்டு வயதில் இதுபோன்ற ஒரு தருணம் இருந்தது. ஜப்பானிய பீரங்கிகளினால் நாங்களிருந்த இடம் குண்டுகளால் தாக்கப்பட்டபோது, என்னுடைய பங்கில் நிச்சயமாக அங்கே எந்த வீரத்தனமும் இல்லை, ஆனால் மாறாக எனக்கும் மற்றவர்களுக்கும் அது ஒரு ஆசீர்வாதமாயிருந்தது. நாங்களிருந்த இடத்தை பலமுறைகளாக பீரங்கிகளால் தாக்கிய பின்பு எதிரியின் பீரங்கி தாக்குதல்கள் நின்றுபோயின. பின்னர் அவர்கள் தாக்கத்துக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டும், ஆனால் குறைந்தபட்சம் ஒரு பயப்பட்டிருந்தவனின், சுயநல ஜெபத்திற்கு தெய்வீக பதிலாயிருந்தது. குண்டுவீசும் தாக்குதல் நின்றுபோயின. … “நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்; அதை நான் அறிவேன், தேவன் அதை அறிவார் என நான் அறிவேன்” (“Becoming a Disciple,” Ensign, June 1996, 19).

    அவர் அறிந்திருந்தார் என்று மட்டுமல்ல, தேவன் அறிந்திருந்தார் என்று மட்டுமல்ல, ஆனால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் என அவர் அறிந்திருக்கிறார், என தேவன் அறிந்திருக்கிறார் என மூப்பர் மேக்ஸ்வெல் சேர்த்துக்கொண்டார். குறியீடாக என்னைப் பொறுத்தவரை, இது பொறுப்புணர்வை ஒரு படி மேலே உயர்த்துகிறது. நமது சார்பாக பரலோகங்கள் தலையிட்டதென்ற ஒரு ஆழமான ஆவிக்குரிய உறுதிப்பாட்டுடன், சிலநேரங்களில் நமது பரலோக பிதா நமக்குக் கொடுக்கிற ஒரு ஆசீர்வாதத்துடன் இணைக்கிறார். அதை மறுப்பதற்கில்லை. இது நம்முடன் தங்குகிறது, நாம் நேர்மையுள்ளவர்களாயும் விசுவாசமுள்ளவர்களாயுமிருந்தால், வரப்போகிற ஆண்டுகளில் நமது வாழ்க்கையை அது வடிவமைக்கும். “நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன், நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என நான் அறிந்திருக்கிறேன் என்று தேவன் அறிவாரென்று நான் அறிந்திருக்கிறேன்.

  6. Russell M. Nelson, “Sweet Power of Prayer,” Liahona, May 2003, 8.

  7. அக்டோபர், 29, 2019ல், ஜனுவரி 24, 2020ல் தொடர்ந்த மின்அஞ்சலில் மூப்பர் ஆன்டர்சன்னுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட, பியுட்ரைஸ் மாக்ரெயிடமிருந்து தனிப்பட்ட கதை.

  8. அப்போஸ்தலர் நடபடிகள் 2:37.

  9. ஆல்மா 19:16.

  10. ஏனோஸ் 1:5 பார்க்கவும்.

  11. Clayton M. Christensen, “The Most Useful Piece of Knowledge,” Liahona, Jan. 2009, 23.

  12. Teachings: Joseph Smith, 231132 பார்க்கவும்.

  13. Dallin H. Oaks, Life’s Lessons Learned: Personal Reflections (2011), 116.

  14. 3 நேபி 9:20

  15. Russell M. Nelson, “‘How Do You #HearHim?’ A Special Invitation,” Feb. 26, 2020, blog.ChurchofJesusChrist.org.

  16. 3 நேபி 26:14.

  17. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:35–36. உணர்வுகள் எப்போதும் ஆவிக்குரிய அறிவோடு இணைந்திருக்கும். ஆம், நீங்கள் அக்கிரமத்தைச் செய்ய துரிதமானீர்கள், ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தரை நினைவுகூர தாமதமானீர்கள். நீங்கள் தூதனைப் பார்த்தீர்கள், அவன் உங்களிடம் பேசினான், ஆம், அவனுடைய குரலை நீங்கள் அவ்வப்போது கேட்டீர்கள், அவன் உங்களோடு அமர்ந்த மெல்லிய குரலில் பேசினான், ஆனால் நீங்கள் அவருடைய வார்த்தைகளை உணராதபடிக்கு உணர்வில்லாதவர்களானீர்கள்” (1நேபி 17:45).

  18. Henry B. Eyring, “O Remember, Remember,” Liahona, Nov. 2007, 69.

  19. 2 நேபி 31:13: மரோனி 10:4 பார்க்கவும். 1991ல் போர்டியஸ், பிரான்ஸிலுள்ள எங்கள் ஊழியத்தை தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் சந்தித்தார். உண்மையான நோக்கம் என்னவென்றால், ஜெபிப்பவர் தேவனிடம் இதுபோன்ற ஒன்றைச் சொல்கிறார் என நமது ஊழியர்களுக்கு அவர் விளக்கினார்: “நான் ஆர்வத்தோடு கேட்கவில்லை, ஆனால் என் ஜெபத்திற்கான பதிலில் செயல்பட முழு நேர்மையுடனும் கேட்கிறேன். இந்த பதிலை நீர் எனக்குக் கொடுத்தால், என் வாழ்க்கையை மாற்ற நான் செயல்படுவேன். நான் பதிலளிப்பேன்.”

  20. “அநேகர் தேவனுடைய இரகசியங்களை அறியும்படிக்கு அருளப்பட்டிருக்கிறார்கள்; எனினும் மனுபுத்திரர் தமக்கு கருத்துடனே செவிகொடுப்பதற்கேற்ப, அவர்களுக்கு தாம் அருளுகிற தம்முடைய வார்த்தையின் ஒரு பங்கை மாத்திரமே கற்பிக்கக்கூடாதென்று அவர்களுக்குக் கண்டிப்பான கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்” (ஆல்மா 12:9).

    மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல் சொன்னார்: “[ஆவிக்குரிய அனுபவங்களை] எப்போது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை அறிய உத்வேகம் தேவை. புத்திசாலித்தனத்தையும் ஞானத்தையும் இணைத்த தலைவர் மரியோன் ஜி. ராம்னி சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன். ‘நாங்கள் அவைகளைப்பற்றி அதிகம் பேசாவிட்டால் எங்களுக்கு அதிக ஆவிக்குரிய அனுபவங்கள் கிடைக்கும்’” (“Called to Serve” [Brigham Young University devotional, Mar. 27, 1994], 9, speeches.byu.edu).

  21. 2 நேபி 32:3.

  22. மரோனி 7:29–30.

  23. யோவான் 14:26.

  24. சுவிசேஷத்தின் சத்தியங்கள் எல்லோருக்கும் கிடைக்கிறது. மாநாட்டுக்கு முந்திய ஒரு வாரத்தில், என்னுடைய சொற்பொழிவு நிறைவடைந்தபோது, 2002லிருந்து 2008வரை பொது அதிகார எழுபதின்மராக ஊழியம் செய்த ஜெரால்ட் என் லண்டால் எழுதப்பட்ட Divine Signatures: The Confirming Hand of God (2010), என்றழைக்கப்பட்ட புஸ்தகத்திற்கு ஆவிக்குரிய விதமாக நான் ஈர்க்கப்பட்டேன். இந்த மாநாட்டு உரையில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு ஒரு அழகான இரண்டாவது சாட்சியாகவும், ஆவிக்குரிய வரையறுக்கும் நினைவுகளைப்பற்றி அதிகமாக படிக்க விரும்புகிற எவராலும் ரசிக்கக்கூடியதாயும், எனது மகிழ்ச்சியில் சகோதரர் லண்டின் வார்த்தைகளிருந்தன.

  25. One of President Thomas S. Monson’s favorite quotes is from the Scottish poet James M. Barrie: “God gave us memories, that we might have June roses in the December of our lives” (in Thomas S. Monson, “Think to Thank,” Liahona, Jan. 1999, 22). ஆவிக்குரிய நினைவுகளிலும் இதுவே உண்மை. அந்த “ஜூன்” ஆவிக்குரிய நினைவுகள் நமக்குத் தேவைப்படும்போது அவை நம் வாழ்வின் சாதாரண கடினமான காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.