பொது மாநாடு
வாழ்க்கையின் புயல்களிலிருந்து அடைக்கலம் காணுதல்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


வாழ்க்கையின் புயல்களிலிருந்து அடைக்கலம் காணுதல்

இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவர்த்தி நமது வாழ்க்கையை சீறழிக்கிற புயல்கள் பொருட்டின்றி நம் அனைவருக்கும் தேவைப்படுகிற அடைக்கலங்கள்.

90களின் மத்தியில், என் கல்லூரி ஆண்டுகளில், சிலியில், சந்தியாகோ தீயணைப்புத்துறையின் நான்காம் கம்பெனியில் ஒரு அங்கமாக நானிருந்தேன். அங்கு சேவை செய்யும்போது, இரவு காவலின் பகுதியாக நான் தீயணைப்பு நிலையத்தில் வாழ்ந்தேன். வருடத்தின் முடிவில் புத்தாண்டுக்கு முந்தய இரவில் கிட்டத்தட்ட எப்போதும் சில அவசர நிலை இருக்குமென்பதால், நான் தீயணைப்பு நிலையத்தில் இருக்க வேண்டுமென நான் சொல்லப்பட்டேன். ஆச்சரியப்பட்டு நான் பதிலளித்தேன், “உண்மையாகவா?”

நான் உடன்பணியாளர்களுடன் நள்ளிரவில் காத்துக்கொண்டிருந்தபோது, சந்தியாகோ நகரில் வாணவேடிக்கைகள் தொடங்கியதை நான் நினைவுகூர்கிறேன். புத்தாண்டுக்காக நல்வாழ்த்துக்களுடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கத் தொடங்கினோம். ஒரு அவசர நிலை ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிட்டு, திடீரென தீயணைப்பு நிலைய மணிகள் அடிக்கத்தொடங்கின. நாங்கள் எங்கள் கருவிகளை எடுத்துக்கொண்டு, தீயணைப்பு வண்டியில் குதித்தேறினோம். அவசர நிலையுள்ள இடம் செல்லும் எங்கள் வழியில், புத்தாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் கூட்டத்தினரை நாங்கள் கடந்தபோது, அவர்கள் பெரிதும் அக்கறையின்றி கவனமில்லாமல் இருப்பதை நான் கவனித்தேன். அவர்கள் தளர்வாய் இதமான கோடை இரவை அனுபவித்துக்கொண்டிருந்தனர். எனினும் சிறிது அருகில், நாங்கள் உதவி செய்ய விரைந்துகொண்டிருக்கும் ஜனங்கள் கடுமையான பிரச்சினையில் இருந்தார்கள்.

நமது வாழ்க்கை சில நேரங்களில் ஒப்பீட்டில் இலகுவாக இருந்தாலும், நிலைத்திருக்க நமது திறமையின் எல்லைகளை நெருக்குகிற, எதிர்பாராத சவால்களையும் புயல்களையும் எதிர்கொள்ளும்போது, நம் ஒவ்வொருவருக்கும் அந்த நேரம் வரும். சரீர, மன, குடும்ப, மற்றும் வேலைவாய்ப்பு சவால்கள், இயற்கை பேரழிவுகள், மற்றும் வாழ்வு அல்லது சாவு சம்மந்தப்பட்ட பிற காரியங்கள் இந்த வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற புயல்களின் சில உதாரணங்கள்.

இந்த புயல்களை எதிர்கொள்ளும்போது, நாம் விரக்தி அல்லது பயத்தின் உணர்வுகளை அடிக்கடி அனுபவிக்கிறோம். தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார், விசுவாசம், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் பயத்துக்கு மாற்று மருந்து (“Let Your Faith Show,Liahona, May 2014, 29) ஜனங்களின் வாழ்க்கையை பாதிக்கிற புயல்களை நான் பார்த்தபோது, நம்மை நொறுக்குகிற எந்த விதமான புயலானாலும் பொருட்டின்றி—அதற்கு தீர்வு இருந்தாலும் அல்லது கண்பார்வைக்கு முடிவு தெரிந்தாலும்—ஒரே ஒரு அடைக்கலம் தெரிகிறது, அனைத்து வகை புயல்களுக்கும் அது ஒரே மாதிரியானது என நான் முடிவுக்கு வந்தேன். நமது பரலோக பிதாவால் கொடுக்கப்பட்ட ஒரே அடைக்கலம் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவரது பாவ நிவர்த்தியும்தான்.

இந்த புயல்களை எதிர்கொள்வதிலிருந்து நாம் யாரும் விலக்களிக்கப்படவில்லை. மார்மன் புஸ்தகத்தின் தீர்க்கதரிசி ஏலமன் பின்வருமாறு போதித்தான்: “மேலும் இப்பொழுதும் என் குமாரரே நினைவுகூருங்கள், தேவகுமாரனாகிய கிறிஸ்து என்கிற நம் மீட்பராகிய கன்மலையின்மேல் நீங்கள் உங்கள் அஸ்திபாரத்தை கட்டவேண்டுமென்று நினைவில்கொள்ளுங்கள், பிசாசு தன் பலத்த காற்றுக்களையும், ஆம், சூறாவளியில் தன் அம்புகளையும், அனுப்பி ஆம், அவன் சகல கன்மழையாலும், அவனுடைய பலத்த புயலாலும் உங்களை அடிக்கும்போது, அது உங்களை பொல்லாத துரவிற்கும், நித்திய துன்பத்திற்கும் இழுத்துச் செல்ல வல்லமையற்றுப்போகும். ஏனெனில் நீங்கள் கட்டப்பட்டிருக்கிற கன்மலை மெய்யான அஸ்திபாரமாயிருக்கிறது. அந்த அஸ்திபாரத்தின்மேல் மனுஷன் கட்டினால் அவர்கள் விழுந்துபோவதில்லை” (ஏலமன் 5:12).

மூப்பர் ராபர்ட் டி. ஹேல்ஸ், புயல்களில் நிலைத்திருப்பதில் தன் சொந்த அனுபவங்களைப் பெற்றவர் சொன்னார், “பாடுகள் உலகளாவியன; பாடுக்கு நாம் எப்படி பிரதிகிரியை ஆற்றுகிறோம் என்பது தனிப்பட்டது. பாடு இரு வழிகளில் ஒன்றுக்கு நம்மை கொண்டுபோக முடியும். அது விசுவாசத்துடன் இணைந்த பெலப்படுத்துகிற மற்றும் சுத்திகரிக்கிற அனுபவமாக இருக்கலாம், அல்லது கர்த்தரின் பாவ நிவாரண பலியில் நமக்கு விசுவாசம் இல்லையெனில் நமது வாழ்க்கையில் அழிவு சக்தியாக இருக்கலாம்” (“Your Sorrow Shall Be Turned to Joy,” Ensign, Nov. 1983, 66).

இயேசு கிறிஸ்துவும் அவரது பாவநிவர்த்தியும் கொடுக்கிற அடைக்கலத்தை அனுபவிக்க, நாம் அவரில் விசுவாசம் கொள்ள வேண்டும்—குறைந்த, உலக பார்வையுடைய எல்லா வேதனைகளுக்கும் மேலெழும்ப நம்மை அனுமதிக்கிற விசுவாசம். நாம் செய்கிற அனைத்திலும் நாம் அவரண்டை வந்தால், அவர் நமது பாரங்களை இலகுவாக்குவார் என அவர் வாக்களித்திருக்கிறார்.

இயேசு சொன்னார், “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

“நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியாயுமிருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

“என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது” (மத்தேயு 11:28–30; மேலும் மோசியா 24:14–15 பார்க்கவும்).

சொல்லப்பட்டிருப்பதாவது, “விசுவாசமுடைய ஒருவருக்கு விளக்கம் தேவையில்லை. விசுவாசம் இல்லாதவருக்கு விளக்கம் சாத்தியமில்லை.“ (இந்த வாசகம் தாமஸ் அக்கினாஸால் சொல்லப்பட்டது, ஆனால் அவர் போதித்த எளிமையான சொற்றொடராக அது இருக்கலாம்.) எனினும் இங்கு பூமியில் நடப்பவை குறித்து நமக்கு அளவான புரிதலே இருக்கிறது, அடிக்கடி நம்மிடம் ஏன் என்ற கேள்விக்கு பதிலே இல்லை. ஏன் இது நடக்கிறது? ஏன் இது எனக்கு நடக்கிறது? நான் எதைக் கற்க வேண்டும்? பதில்கள் நம்மிடமிருந்து தப்பும்போது, லிபர்ட்டி சிறையில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு இரட்சகரால் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் அப்போதுதான் முற்றிலுமாக பொருத்தமாயிருக்கும்:

“என் குமாரனே உன் ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாவதாக; உன் துன்பமும் உன் உபத்திரவங்களும் ஒரு சிறு தருணத்துக்கே;

“பின்னர் நீ அதை நன்கு சகித்திருந்தால், உன்னதத்தின் தேவன் உன்னை உயர்த்துவார்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7–8).

இயேசு கிறிஸ்துவில் உண்மையாகவே அநேகர் நம்பினாலும், முக்கிய கேள்வி நாம் அவரை நம்புகிறோமா மற்றும் அவர் நமக்கு போதிக்கிற, நாம் செய்யுமாறு சொல்கிற காரியங்களை நம்புகிறோமா என்பதே. ஒருவேளை சிலர் நினைக்கலாம், “எனக்கு நடப்பது பற்றி இயேசு கிறிஸ்து எதை அறிவார்? மகிழ்ச்சியாயிருக்க எனக்கு என்ன தேவை என அவர் எப்படி அறிவார்?” உண்மையாகவே, ஏசாயா குறிப்பிட்டு , நமது மீட்பரும் பரிந்து பேசுபவருமான அவரைப்பற்றி சொன்னான்:

“அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும் பாடு அனுபவித்தவருமாயிருந்தார். …

“அவர் மெய்யாகவே நம் சஞ்சலங்களை ஏற்றுக்கொண்டு, நமது துக்கங்களைச் சுமந்தார். …

“அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார். நமது பாவத்தின் சிட்சை அவர் மீதிருந்தது. அவருடைய காயத் தழும்புகளினாலே நாம் குணமாகிறோம்”(ஏசாயா 53:3–5).

அப்போஸ்தலனாாகிய பேதுரு இரட்சகர் பற்றி நமக்கு போதித்து சொன்னான், “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையிலே சுமந்தார்: அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேதுரு 2:24).

பேதுருவின் சொந்த இரத்த சாட்சியின் மரணத்துக்கான நேரம் நெருங்கினாலும், அவனது வார்த்தைகள் பயத்தாலோ எதிர்மறையாகவோ நிறைந்திருக்கவில்லை. மாறாக “பலவித சோதனைகளினாலே துக்கப்பட்டாலும்,” பரிசுத்தவான்கள் “களிகூருமாறு” அவன் போதித்தான். “[நமது] விசுவாசம் சோதிக்கப்படும்போது” , “இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அவர்களுக்கு புகழ்ச்சியும், கனமும், மகிமையும் உண்டாகவும்” , [நமது]“ஆத்தும ரட்சிப்பை அடையவும்” நடத்துமென்பதை நினைவுகூர அவர்களுக்கு பேதுரு ஆலோசனையளித்தான் (1 பேதுரு 1:6–7, 9).

பேதுரு தொடர்ந்தான்:

“பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,

“கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது, நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளியானதால் சந்தோஷப்படுங்கள்” (1 பேதுரு 4:12–13).

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்ததாவது “ஒவ்வொரு சூழ்நிலையிலும் பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். … நமது வாழ்க்கையில், இரட்சிப்பின் தேவனுடைய திட்டத்தில், இயேசு கிறிஸ்துவிலும், அவருடைய சுவிசேஷத்திலும் கவனமிருக்கும்போது … நமது வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருந்தாலும், அல்லது நடக்காவிட்டாலும் நாம் சந்தோஷத்தை உணரமுடியும். அவராலும் அவரிடமிருந்துமே சந்தோஷம் வருகிறது. எல்லா சந்தோஷத்திற்கும் அவரே ஆதாரம்” (“Joy and Spiritual Survival,Liahona, Nov. 2016, 82).

உண்மையாகவே, புயலின்போது வாழ்ந்து அவற்றைப் பயன்படுத்துவதை விட, புயலின் மத்தியில் நாமில்லாதபோது இவற்றைச் சொல்வது எளிதாகும். ஆனால் உங்கள் சகோதரனாக, நமது வாழ்க்கையை நொறுக்குகிற புயல்கள் பொருட்டின்றி, நாமனைவருக்கும் தேவைப்படுகிற இயேசு கிறிஸ்துவும் அவரது பாவநிவர்த்தியும் அடைக்கலம் என அறிவது எவ்வளவு மதிப்புடையது என உங்களுடன் பகிர உண்மையாகவே நான் விரும்புகிறேன் என நீங்கள் உணர முடியும் என நான் நம்புகிறேன்.

நாமனைவரும் தேவனின் பிள்ளைகள், அவர் நம்மை நேசிக்கிறார், நாம் தனியாக இல்லை என நான் அறிவேன். அவர் உங்கள் பாரங்களை இலகுவாக்க முடியும், நீங்கள் தேடுகிற அடைக்கலமாக இருக்க முடியும் என வந்து பார்க்க நான் உங்களை அழைக்கிறேன். அவர்கள் ஏங்குகிற அடைக்கலத்தை காண வந்து பிறருக்கு உதவுங்கள். வாழ்க்கையின் புயல்களை எதிர்க்க உங்களுக்கு உதவக்கூடிய இந்த அடைக்கலத்தில் எங்களோடு வந்து தங்குங்கள். நீங்கள் வந்தால், நீங்கள் பார்ப்பீர்கள், நீங்கள் உதவுவீர்கள், நீங்கள் தங்குவீர்கள் என்பதற்கு என் இருதயத்தில் சந்தேகமில்லை.

தீர்க்கதரிசியான ஆல்மா தன் குமாரன் ஏலமனுக்கு பின்வருவதை சாட்சியளித்தான்: “தேவனில் தன் நம்பிக்கையை வைக்கிற எவரும் அவர்களுடைய சோதனைகளிலும் அவர்களுடைய பிரச்சினைகளிலும், அவர்களுடைய உபத்திரவங்களிலும், ஆதரிக்கப்பட்டு கடைசி நாளின்போது உயர்த்தப்படுவார்கள்” (ஆல்மா 36:3).

இரட்சகர்தாமே சொன்னார்:

“உங்கள் இருதயங்கள் ஆறுதலடைவதாக … ஏனெனில் அனைத்து மாமிசமும் என் கைகளிலிருக்கிறது, அமைதியாயிருந்து நானே தேவன் என அறிவீர்களாக. …

“ஆகவே மரணத்துக்குக்கூட பயப்படாதேயுங்கள், ஏனெனில் இந்த உலகில் உங்கள் சந்தோஷம் நிறைவானதில்லை, ஆனால் என்னில் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:16, 36).

அனேக சந்தர்ப்பங்களில் என் இருதயத்தைத் தொட்ட பாடல் “என் அத்துமாவே அமைதியாயிரு”, நமது ஆத்துமாக்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியைக் கொண்டுள்ளது. அப்பாடல் பின்வருவது போலிருக்கிறது:

அமைதியாயிரு என் ஆத்துமாவே, நேரம் விரைந்து வருகிறது.

அப்போது நாம் என்றென்றைக்கும் கர்த்தரோடு இருப்போம்.

ஏமாற்றமும் துக்கமும் பயமும் போகும்போது,

துக்கம் மறந்தது, தூய அன்பின் சந்தோஷம் மீட்டெடுக்கப்பட்டது.

அமைதியாயிரு, என் ஆத்துமாவே, மாற்றமும் கண்ணீர்களும் கடந்தபோது,

கடைசியில் நாம் சந்திக்கும்போது, நாமனைவரும் பாதுகாப்பாக ஆசீர்வதிக்கப்படிருப்போம். (பாடல்கள் எண் 124.)

நாம் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ளும்போது, நாம் சிறந்த முயற்சியை செய்து, நமது அடைக்கலமாக இயேசு கிறிஸ்துவையும் அவரது பாவநிவர்த்தியையும் சார்ந்திருக்கும்போது, நாம் தேடுகிற நிவாரணம், ஆறுதல், பெலன், இச்சையடக்கம் மற்றும் சமாதானத்தால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம், பூமியில் நமது சமயத்தின் முடிவில் நமது இருதயங்களில் நிச்சயத்துடன், போதகரின் வார்த்தையை நாம் கேட்போம்: “நல்லது உத்தமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி” (மத்தேயு 25:21).} இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.