பொது மாநாடு
மிக நேர்த்தியான வீடுகள்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


மிக நேர்த்தியான வீடுகள்

இரட்சகர் ஒரு சரியான பொறியாளர், கட்டிடம் கட்டுபவர் மற்றும் உள்புற வடிவமைப்பாளர். அவருடைய திட்டம் நம் ஆத்துமாக்களின் பரிபூரணமும் நித்திய மகிழ்ச்சியும் ஆகும்.

சமீபத்தில் சால்ட் லேக் சிட்டியில் ஒரு விளம்பர பலகை என் கண்களைக் கவர்ந்தது. அது மரச்சாமான்கள் மற்றும் உள்புற வடிவமைப்பு நிறுவனத்தை விளம்பரப்படுத்தியது. “சால்ட் லேக் சிட்டியின் மிகநேர்த்தியான வீடுகளுக்கு சேவை செய்தல்” என எளிமையாக அது கூறியது.

அந்த செய்தி கவர்ச்சியாக இருந்தது, “நேர்த்தியான வீடு” என்றால் என்ன? குறிப்பாக என் மனைவி கேத்தியும் நானும் வளர்த்த பிள்ளைகள் மற்றும் அவர்கள் இன்று வளர்க்கும் குழந்தைகள் குறித்த அந்த கேள்வியைப்பற்றி நான் எனக்குள்ளேயே யோசித்துக்கொண்டிருந்ததை நான் கண்டேன், எல்லா இடங்களிலுமுள்ள பெற்றோரைப்போல எங்கள் குடும்பத்தைப்பற்றி நாங்கள் கவலைப்பட்டு, அவர்களுக்காக ஜெபித்தோம். நாங்கள் இன்னமும் அதைச் செய்கிறோம். அவர்களுக்கு மிகச்சிறந்தது கிடைக்க நேர்மையாக நாங்கள் விரும்புகிறோம். அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் எவ்வாறு நேர்த்தியான வீடுகளில் வாழமுடியும்? கேத்தியும் நானும் சந்திக்க பாக்கியம் பெற்ற சபை அங்கத்தினர்கள் வீடுகளைப்பற்றி நான் சிந்தித்தேன். கொரியா, கென்யா, பிலிப்பைன்ஸ், பெரு, லாவோஸ், மற்றும் லாட்வியா வீடுகளுக்குள் நாங்கள் அழைக்கப்பட்டோம். இந்த வீடுகளைப்பற்றிய நான்கு அவதானிப்புகளை நான் பகிர்ந்துகொள்கிறேன்.

முதலாவதாக, கர்த்தருடைய பார்வையில், மிக நேர்த்தியான வீடுகளை ஸ்தாபித்தல் என்பது, எல்லா வகையிலும் அங்கு வாழ்கிற மக்களின் தனிப்பட்ட குணங்களுக்குத் தொடர்புடையது. எந்த முக்கியமான அல்லது அவர்களுடைய மரச்சாமான்கள் அல்லது அவைகளை சொந்தமாக்கிக்கொண்ட மக்களின் நிகர மதிப்பு அல்லது சமூக அந்தஸ்தின் நீடித்த வழியில் இந்த வீடுகள் அமைக்கப்படவில்லை. வீட்டில் குடியிருப்பவர்களில் பிரதிபலிக்கும் கிறிஸ்துவின் உருவமே எந்த ஒரு வீட்டின் நேர்த்தியான குணாதிசயம். குடிமக்களின் ஆத்துமாக்களின் உள்புற வடிவமைப்பே பொருட்டாகும், கட்டமைப்பு அல்ல.

உடன்படிக்கை பாதையிலே வேண்டுமென்றே முன்னேறுவதால் “காலப்போக்கில்”1 கிறிஸ்துவின் இந்த பண்புக்கூறுகள் பெறப்படுகின்றன. நற்குணத்துடன் வாழ முயற்சிப்பவர்களின் வாழ்க்கையை கிறிஸ்துவைப் போன்ற தன்மைகள் அலங்கரிக்கின்றன. மண்தரையோ, பளிங்கு தரையோ, சுவிசேஷ ஒளியுடன் அவர்கள் வீடுகளை நிரப்புகிறார்கள். “இந்தக் காரியங்களை நாட”2 என்ற உத்தரவைப் பின்பற்றுகிறவர்களாக, உங்கள் வீட்டில் நீங்கள் மட்டுமே இருந்தாலும், உங்கள் குடும்பத்தின் வீட்டின் ஆவிக்குரிய அலங்காரங்களுக்கு நீங்கள் பங்களிக்க முடியும்.

“[நம்மை] ஒழுங்கமைக்க கர்த்தருடைய ஆலோசனையை நாம் பின்பற்றுகிறோம்; தேவையான ஒவ்வொரு பொருளையும் தயார் செய்கிறோம்; மற்றும் ”நம்முடைய நில சொத்தால் அல்ல, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஒழுங்கமைத்தலால், ஆயத்தப்படுவதால் மற்றும் நிறுவுவதால், ஒரு வீட்டை ஸ்தாபிக்கிறோம், இரட்சகரின் உடன்படிக்கைப் பாதையில் பொறுமையாக நாம் பின்தொடரும்போது, நமது வீடு “மகிமையின் ஆலயமாக, ஒழுங்கின் ஆலயமாக, [மற்றும்] தேவனின் ஆலயமாக” 3 மாறுகிறது.

இரண்டாவதாக, நேர்த்தியான வீடுகளில் குடியிருப்பவர்கள், ஒவ்வொரு நாளும் வேதங்களையும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் படிக்க நேரம் ஒதுக்குகிறார்கள். சுவிசேஷ படிப்பு மூலமாக நமது வீடுகளை “உருமாற்றவும்” “மறுவடிவமைக்கவும்” தலைவர் ரசல் எம்.நெல்சன் நம்மை அழைக்கிறார்.4 நேர்த்தியான வீடுகள் மென்மையை தங்கவைக்கிற, தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கிய வேலையாயிருந்து, நமது பலவீனங்களை உருமாற்றுகிறதென அவரது அழைப்பு அங்கீகரிக்கிறது. சிறிது கனிவுடனும், அதிக அன்புடனும், அதிக புரிந்துகொள்ளுதலுடனும் நமக்கு சாத்தியமாக்குகிற அன்றாட மனந்திரும்புதல் உருமாற்றத்திற்கு ஒரு கருவி. வேதங்களைப் படித்தல், நமது வளர்ச்சியுடன், தாராள அன்புடனும் கிருபையுடனும் நமக்குதவுகிற இரட்சகரிடத்தில் நம்மை நெருக்கமாகக் கொண்டுவருகிறது.

வேதாகமும், மார்மன் புஸ்தகமும், விலையேறப்பெற்ற முத்துவும் குடும்பங்களின் கதைகளைக் கூறுகின்றன, ஆகவே, மிகநேர்த்தியான வீடுகளைக் கட்டுவதற்காக அந்த தெய்வீக தொகுப்புகள், ஒப்பிடமுடியாத கையேடுகள் என்பது ஆச்சரியமல்ல. பெற்றோரின் ஜெபங்கள், சோதனையின் அபாயங்கள், நீதியின் வெற்றி, பஞ்சம் மற்றும் ஏராளத்தின் பாடுகள், மரணம் மற்றும் துக்கத்தின் அனுபவம் மற்றும் போரின் கொடூரங்கள் மற்றும் சமாதானத்தின் வெகுமதிகள் ஆகியவற்றை அவை விவரிக்கின்றன. நீதியான வாழ்க்கை மூலம் குடும்பங்கள் எவ்வாறு வெற்றி பெறுகின்றன, பிற பாதைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவை எவ்வாறு தோல்வியடைகின்றன என்பதை மீண்டும் மீண்டும் வேதங்கள் நமக்குக் காட்டுகின்றன.

மூன்றாவதாக, ஆலயம் என்ற அவருடைய மிகநேர்த்தியான வீட்டிற்காக கர்த்தரால் உருவாக்கப்பட்ட வரைபடத்தை நேர்த்தியான வீடுகள் பின்பற்றுகின்றன. ஒரு ஆலயத்தைக் கட்டுவது அடிப்படை படிகளுடன் ஆரம்பிக்கிறது, புதரை நீக்குதல் மற்றும் நிலத்தை சமன் செய்தல். தரையை ஆயத்தப்படுத்துவதற்கான அந்த ஆரம்ப முயற்சிகளை, அடிப்படை கட்டளைகளைக் கைக்கொள்ளுவதற்கு ஒப்பிடலாம். கட்டளைகள் அஸ்திபாரமாயிருக்கின்றன, அதன்மேல் சீஷத்துவம் கட்டப்படுகிறது. ஒரு ஆலயத்திற்கான எஃகு கட்டமைப்பைப்போல, திடமனதாயும், உறுதியாயும், அசைக்கமுடியாதவர்களாயுமாக5 மாற, உறுதியான சீஷத்துவம் நம்மை நடத்துகிறது. இந்த நிலையான கட்டமைப்பானது நம்முடைய இருதயங்களை மாற்ற கர்த்தர் தம்முடைய ஆவியை அனுப்ப அனுமதிக்கிறது. 6 இருதயத்தின் மாபெரும் மாற்றத்தை அனுபவிப்பது ஒரு ஆலயத்தின் உட்புறத்தில் அழகான அம்சங்களைச் சேர்ப்பது போன்றது.

விசுவாசத்தில் நாம் தொடரும்போது, கர்த்தர் நம்மை படிப்படியாக மாற்றுகிறார். நமது முகத்தில் அவருடைய சாயலை நாம் பெற்று, அவருடைய குணத்தின் அன்பையும் அழகையும் பிரதிபலிக்க ஆரம்பிப்போம்.7 அவரைப்போல நாம் மாறும்போது, அவருடைய வீட்டில், நாம் நம்முடைய வீட்டிலிருப்பதாக உணருவோம், அவர் நம்முடைய வீட்டில் அவருடைய வீட்டிலிருப்பதாக உணருவார்.

நம்முடைய சூழ்நிலைகள் அனுமதிக்கும் போதெல்லாம் ஒரு ஆலயப் பரிந்துரைக்கு தகுதி பெறுவதன் மூலமும், பயன்படுத்துவதன் மூலமும், நம்முடைய வீட்டிற்கும், அவருடைய வீட்டிற்குமான ஒரு நெருங்கிய தொடர்பை நாம் பராமரிக்க முடியும். நாம் அவ்வாறு செய்யும்போது கர்த்தருடைய வீட்டிலுள்ள பரிசுத்தம் அப்படியே நம் வீட்டிலும் தங்கும்.

மகத்துவமான சால்ட் லேக் சிட்டி ஆலயம் பக்கத்தில் நிற்கிறது. ஆரம்ப நிலை கருவிகள், உள்ளூர் பொருட்கள் மற்றும் முடிவற்ற கடின உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு, இந்த ஆலயம் 1853 முதல் 1893 வரை முன்னோடிகளால் கட்டப்பட்டது பொறியியல், கட்டிடக்கலை மற்றும் உள்துறை வடிவமைப்பு ஆகியவற்றில் சிறந்ததை ஆரம்பகால சபை அங்கத்தினர்கள் வழங்க வேண்டியதிருந்து மில்லியன் கணக்கானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைசிறந்த படைப்பை அது உருவாக்கியது.

ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஏறக்குறைய 130 ஆண்டுகள் கடந்தன. நேற்று மூப்பர் காரி இ. ஸ்டீவென்சன் குறிப்பிட்டதைப்போல, ஆலய வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொறியியல் கொள்கைகள் புதிய, பாதுகாப்பான தரங்களால் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் பொறியியலை மேம்படுத்துவதில் மற்றும் கட்டமைப்பு பலவீனங்களை சரிசெய்வதில் தோல்வியடைதல், தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, பின்னர் ஆலயத்தின் பராமரிப்பை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுவிட்ட முன்னோடிகளின் நம்பிக்கையை நம்பிக்கை மோசம் செய்யும்.

ஆலயத்தின் கட்டமைப்பு வலிமையை மேம்படுத்த நான்கு ஆண்டு மறுசீரமைப்பு திட்டத்தை சபை ஆரம்பித்திருக்கிறது.8 அஸ்திபாரம், தளங்கள் மற்றும் சுவர்கள் பலப்படுத்தப்படும். இன்று கிடைக்கும் சிறந்த பொறியியல் அறிவு ஆலயத்தை நவீன தரங்களுக்குக் கொண்டு வரும். கட்டமைப்பு மாற்றங்களை நம்மால் பார்க்க முடியாது, ஆனால் அவற்றின் விளைவுகள் உண்மையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும். இந்த வேலைகள் அனைத்திலும், ஆலயத்தின் அழகான உள்துறை வடிவமைப்பு அம்சங்கள் பாதுகாக்கப்படும்.

சால்ட் லேக் ஆலயத்தின் புதுப்பித்தலால் நமக்கு வழங்கப்பட்ட எடுத்துக்காட்டை நாம் பின்பற்ற வேண்டும், மேலும் அது புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த நம்முடைய சொந்த ஆவிக்குரிய பொறியியலை மதிப்பீடு செய்ய நேரம் எடுக்க வேண்டும். கர்த்தரிடம், “இன்னும் எனக்கு என்ன குறைவு?”9 என்று கேட்பதுடன் இணைக்கப்பட்டுள்ள, அவ்வப்போதுள்ள சுய மதிப்பீடு, மிகநேர்த்தியான வீடுகளை கட்டுவதற்கு பங்களிக்க நம் ஒவ்வொருவருக்கும் உதவமுடியும்.

நான்காவதாக, நேர்த்தியான வீடுகள் வாழ்க்கையின் புயல்களிடமிருந்து அடைக்கலங்களாயிருக்கின்றன. தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் “தேசத்திலே செழித்திருப்பார்கள்”10 என்று கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார். வாழ்க்கையில் பிரச்சினைகளிருந்தபோதிலும் முன்னேறிச் செல்ல தேவனின் செழிப்பு வல்லமையாயிருக்கிறது.

2002 ஆண்டில் பிரச்சினைகளைப்பற்றிய ஒரு முக்கிய பாடத்தை நான் கற்றேன். அசுன்சியோன், பரகுவேயிலிருந்தபோது நகரத்தின் பிணையத் தலைவர்களை நான் சந்தித்தேன். அந்த நேரத்தில் பரகுவே ஒரு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, அநேக சபை அங்கத்தினர்கள் அவதிக்குள்ளாயிருந்தனர். என்னுடைய ஊழியத்திற்கு பின்னர் நான் தென்அமெரிக்காவுக்குச் சென்றதில்லை, பரகுவேக்கு ஒருபோதும் சென்றதில்லை. அந்த பகுதி தலைமையுடன் ஒரு சில வாரங்கள் மட்டும் நான் சேவைசெய்துகொண்டிருந்தேன். அந்த பிணையத் தலைவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான எனது இயலாமை குறித்து அச்சம்கொண்டவனாக, அவர்களின் பிணையங்களில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை மட்டும் அவர்கள் என்னிடம் சொல்லும்படி கேட்டேன். நன்றாக போய்க்கொண்டிருந்த காரியங்களைப்பற்றி முதல் பிணையத் தலைவர் என்னிடம் கூறினார். அடுத்தவர், நன்றாக போய்க்கொண்டிருந்த காரியங்களையும் ஒரு சில பிரச்சினைகளைப்பற்றியும் குறிப்பிட்டார். கடைசி பிணையத் தலைவரிடம் நாங்கள் வந்த நேரத்தில், அவர் தொடர்ச்சியான வேதனையான சவால்களை மட்டுமே குறிப்பிட்டார். பிணையத் தலைவர்கள், நிலைமையின் அளவை விளக்கியபோது, அதிக அக்கறை கொண்டவனாக, நான் என்ன சொல்ல வேண்டும் என்பதில் ஏறக்குறைய அவநம்பிக்கை அடைந்தேன்.

கடைசி பிணையத் தலைவர் அவருடைய கருத்துக்களை முடித்தபோது ஒரு சிந்தனை என் மனதில் வந்தது: “மூப்பர் கிளேடன் இந்த கேள்வியை அவர்களிடம் கேள்: ‘தலைவர்களே, முழு தசமபாகத்தைச் செலுத்துகிற, தாராளமான உபவாசக் காணிக்கையை செலுத்துகிற, சபையில் தங்களுடைய அழைப்புகளை நிறைவேற்றுகிற, ஒவ்வொரு மாதமும் வீட்டுப்போதகர்களாக அல்லது விசாரிப்புப் போதகர்களாக11, உண்மையில் அவர்களுடைய குடும்பங்களைச் சந்திக்கிற, குடும்ப இல்ல மாலையை நடத்துகிற, ஒவ்வொரு நாளும் வேதங்களைப் படித்து, குடும்ப ஜெபத்தை ஏறெடுக்கிற உங்கள் பிணையங்களிலுள்ள அங்கத்தினரான அவர்களில் எத்தனை பேருக்கு சபை காலடி எடுத்து வைத்து அவர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்காமல் அவர்களால் சொந்தமாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் உள்ளன? ’”

எனக்கு கிடைத்த உணர்த்துதலுக்கு பதிலளித்த நான், அந்த கேள்வியை பிணையத் தலைவர்களிடம் கேட்டேன்.

ஆச்சரியமான அமைதியில் அவர்கள் என்னைப் பார்த்து, பின்னர் சொன்னார்கள், “பியுஸ் நின்குனோ” அதற்கு அர்த்தம் “நல்லது, யாருமில்லை.” அந்த காரியங்கள் எல்லாவற்றையும் செய்த அங்கத்தினர்கள் எவருக்கும் அவர்கள் சொந்தமாகத் தீர்க்க இயலாத பிரச்சினைகள் இல்லை என அப்போது அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஏன்? ஏனெனில் அவர்கள் மிகநேர்த்தியான வீடுகளில் வசித்தார்கள். அவர்களைச் சுற்றியுள்ள பொருளாதாரக் கொந்தளிப்பில் அவர்களுக்குத் தேவையான பலத்தையும், பார்வையையும், பரலோக உதவியையும் அவர்களின் விசுவாசமுள்ள வாழ்க்கை அவர்களுக்கு வழங்கியது.

நீதிமான்கள் நோய்வாய்ப்படமாட்டார்கள், விபத்துக்களுக்கு ஆளாக மாட்டார்கள், வணிக பின்னடைவுகளை எதிர்கொள்ள மாட்டார்கள் அல்லது வாழ்க்கையில் பல அநேக சிரமங்களை எதிர்கொள்ள மாட்டார்கள் என்பது இதன் அர்த்தமாகாது. அநித்தியம் எப்போதும் சவால்களைக் கொண்டுவருகிறது, ஆனால் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முயற்சிப்பவர்கள், சமாதானத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னேற தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கு பாக்கியவான்களாயிருக்கிறார்கள் என்பதை காலங்காலமாக நான் கண்டேன். அந்த ஆசீர்வாதங்கள் எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.12

“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா”13 என தாவீது அறிவித்தான். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், உங்கள் வீடு எப்படி இருந்தாலும், உங்கள் குடும்பத்தின் அமைப்பு எதுவாக இருந்தாலும், உங்கள் குடும்பத்திற்காக மிகநேர்த்தியான வீட்டை நீங்கள் கட்டமுடியும். அந்த வீட்டிற்கான திட்டத்தை இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் வழங்குகிறது. இரட்சகர் ஒரு பரிபூரணமான பொறியாளர், கட்டிடம் கட்டுபவர் மற்றும் உள்புற வடிவமைப்பாளர். அவருடைய திட்டம் நம் ஆத்துமாக்களின் பரிபூரணமும் நித்திய மகிழ்ச்சியும் ஆகும். அவருடைய அன்பான உதவியுடன், நேர்த்தியான ஒரு வீட்டை நிர்வகிக்க ஆயத்தப்படவும் அதில் வாழவும் அவர் விரும்புகிறதாகவும், உங்களுக்கு நீங்களே நேர்த்தியான பதிப்பாக நீங்கள் இருக்கவும் உங்கள் ஆத்துமாவே அவர் விரும்புகிற அனைத்துமாக இருக்கிறது.

நம் அனைவரின் பிதாவாகிய தேவன் ஜீவிக்கிறார் என நான் நன்றியுடன் சாட்சியளிக்கிறேன். அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனுக்குலம் முழுவதற்கும் இரட்சகரும் மீட்பருமாயிருக்கிறார். அவர்கள் நம்மை முழுமையாக நேசிக்கிறார்கள். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியின்மேல் தேவனுடைய ராஜ்ஜியம். இன்று ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் வழிநடத்துகிறார்கள். மார்மன் புஸ்தகம் உண்மையானது. இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம், நேர்த்தியான வீடுகளை ஸ்தாபிப்பதற்கான சரியான வரைபடம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. மோசே 7:21.

  2. விசுவாசப் பிரமாணங்கள் 1:13.

  3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:119.

  4. Russell M. Nelson, “Becoming Exemplary Latter-day Saints,”Liahona, Nov. 2018, 113 பார்க்கவும்.

  5. 1 நேபி 2:10; மோசியா 5:15; 3 நேபி 6:14 பார்க்கவும்.

  6. மோசியா 5:2; ஆல்மா 5:7 பார்க்கவும்.

  7. ஆல்மா 5:14, 19 பார்க்கவும்.

  8. மார்ச் 18, 2020 ல் ஏற்பட்ட ஒரு பூமியதிர்ச்சி, திட்டத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை போதுமானதாக காட்டியது.

  9. மத்தேயு 19:20.

  10. மோசியா 2:22

  11. வீட்டுப் போதகமும், விசாரிப்புப் போதகமும் மாற்றப்பெற்று, 2018 ல் ஊழியம் செய்தல் அமலாக்கப்பட்டது (Russell M. Nelson, “Ministering,” Liahona, May 2018, 100 பார்க்கவும்).

  12. கட்டளைகளுக்கு ஏற்ப வாழ வேண்டாம் என்று நாம் தேர்ந்தெடுக்கும்போது, பின்னர், கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் ஓரளவிற்கு திரும்பப் பெறப்படுகின்றன. மார்மன் புஸ்தகத்தில் காணப்படுகிற இந்த தொடர் மாதிரி, சிலநேரங்களில் நீதிக்கும் துன்மார்க்கத்திற்கும் சுழற்சியாக குறிப்பிடப்படுகிறது (Book of Mormon Student Manual [Church Educational System manual, 2009], 414, ChurchofJesusChrist.org பார்க்கவும்).

  13. சங்கீதம் 127:1.