பொது மாநாடு
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவமும் திறவுகோல்களும்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவமும் திறவுகோல்களும்

சபையில் ஆசாரியத்துவ அதிகாரம் அந்த ஆசாரியத்துவ திறவுகோல்களைத் தரித்திருக்கிற ஆசாரியத்துவத் தலைவரின் வழிகாட்டுதல்களின் கீழ் பிரயோகிக்கப்படுகிறது.

ஆசாரியத்துவம் எவ்வாறு இளம் பெண்கள், வாலிபர்கள், மற்றும் பெண்களையும் ஆசீர்வதிக்கிறது என்பதைப்பற்றி நமக்குப் போதித்த மூன்று செய்தியாளர்களால் ஏற்கனவே பேசப்பட்ட தலைப்பாகிய தேவனின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மேலும் பேச நான் தேர்ந்துகொண்டிருக்கிறேன்.

அவருடைய எல்லா பிள்ளைகளின் ஆதாயத்துக்காகவும், தேவ பணி பயன்படுத்தப்பட நம்பிக்கையுடன் தரித்திருக்கிற தெய்வீக வல்லமையும் அதிகாரமும் ஆசாரியத்துவம் ஆகும். ஆசாரியத்துவம் என்பது, ஒரு ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்பட்டிருப்பவர்கள் அல்லது அதன் அதிகாரத்தை பிரயோகிப்பவர்கள் அல்ல. ஆசாரியத்துவத்தை தரித்திருக்கும் ஆண்கள் ஆசாரியத்துவம் அல்ல. ஆசாரியத்துவமாக நியமிக்கப்பட்ட ஆண்களை நாம் குறிப்பிடக் கூடாதபோது, அவர்களை ஆசாரியத்துவம் தரித்தவர்கள் என குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கிறது.

சபை மற்றும் குடும்ப அமைப்பு இரண்டிலும் ஆசாரியத்துவ வல்லமை இருக்கிறது. ஆனால் ஆசாரியத்துவ வல்லமையும் ஆசாரியத்துவ அதிகாரமும் குடும்பத்தில் செயல்படுவதைவிட சபையில் வித்தியாசமாக செயல்படுகிறது. இவை அனைத்தும் கர்த்தர் ஸ்தாபித்துள்ள கொள்கைகளின் படியே இருக்கிறது. தேவனின் திட்டத்தின் நோக்கம் தன் பிள்ளைகளை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துவதாகும். அநித்திய குடும்பங்கள் அத்திட்டத்துக்கு அத்தியாவசியமானவை. குடும்ப உறவுகளை நித்தியங்களாக நீடிக்கத் தேவையான கோட்பாடு, அதிகாரம் மற்றும் நியமங்களைக் கொடுக்க சபை இருக்கிறது. அவ்விதமாக, குடும்ப அமைப்பும் இயேசு கிறிஸ்துவின் சபையும் ஒன்றுக்கொன்று அதிகமாக பலப்படுத்துகிற உறவைக் கொண்டிருக்கின்றன. ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களான, சுவிசேஷத்தின் முழுமை, ஞானஸ்நானம், திடப்படுத்தல், மற்றும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற நியமங்கள், ஆலய தரிப்பித்தல், மற்றும் நித்திய திருமணம் போன்றவை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுபோல் கிடைக்கின்றன.1

நாம் இங்கு பேசும் ஆசாரியத்துவமாகிய மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம், சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் தொடக்கத்தில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது. ”ராஜ்யம் மற்றும் காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறவர்களாக” தங்களை அறிவித்த, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானால் ஜோசப் ஸ்மித்தும் ஆலிவர் கௌட்ரியும் நியமிக்கப்பட்டார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:20). இந்த மூத்த அப்போஸ்தலர்கள் இரட்சகரிடமிருந்தே அதிகாரத்தைப் பெற்றனர். ஆசாரியத்துவத்தின் பிற அனைத்து அதிகாரங்களும் அலுவல்களும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் இணைப்புகளாகும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:5 பார்க்கவும்), ஏனெனில் இது “தலைமையின் உரிமையையும், உலகத்தின் எல்லா நேரங்களிலும் சபையின் அனைத்து அலுவல்கள் மேல் வல்லமையும் அதிகாரமும் பெற்றிருக்கிறது”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:8).

ஆசாரியத்துவ திறவுகோல்களைத் தரித்திருக்கிற ஒரு ஆயர் அல்லது தலைவர் போன்ற ஆசாரியத்துவ தலைவரின் வழிநடத்துதலின் கீழ், சபையில் மாபெரும் ஆசாரியத்துவத்தின் அதிகாரம், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம், மற்றும் இளநிலை அல்லது ஆரோனிய ஆசாரியத்துவம், பிரயோகிக்கப்படுகிறது. சபையில் ஆசாரியத்துவ அதிகாரத்தைப் பிரயோகிப்பதைப் புரிந்துகொள்ள, நாம் ஆசாரியத்துவ திறவுகோல்களின் கொள்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ராஜயத்தின் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ திறவுகோல்கள் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானால் அருளப்பட்டன, ஆனால் அது ஆசாரியத்துவ திறவுகோல்களின் மறுஸ்தாபிதத்தை நிறைவு செய்யவில்லை. ஆசாரியத்துவத்தின் சில திறவுகோல்கள் பின்னாளில் வந்தன. ஒஹாயோவின் கர்த்லாந்தில், இந்த ஊழியக்காலத்தின் முதல் ஆலய பிரதிஷ்டையைத் தொடர்ந்து, இஸ்ரவேலின் கூடுகைக்கும் கர்த்தரின் ஆலயப் பணிக்கும் சம்மந்தப்பட்ட திறவுகோல்கள் உள்ளிட்ட “இந்த ஊழியக்காலத்தின் திறவுகோல்களை” தலைவர் ஐரிங் இப்போது வலியுறுத்தி விவரித்தததுபோல, மூன்று தீர்க்கதரிசிகளான மோசே, எலியாஸ் மற்றும் எலியா மறுஸ்தாபிதம் செய்தனர்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110 பார்க்கவும்).

திறவுகோல்களின் இயக்கத்தின் மிகவும் பிரசித்தமான உதாரணம், ஆசாரியத்துவ நியமங்களின் நிறைவேற்றம். ஒரு நியமம் என்பது உடன்படிக்கைகள் செய்தல் மற்றும் ஆசீர்வாதங்களின் வாக்குத்தத்தத்தைக் குறிக்கிற பரிசுத்த செயலாகும். சபையில் எல்லா நியமங்களும் அந்த நியமத்துக்கான திறவுகோல்களைத் தரித்திருக்கிற ஆசாரியத்துவத் தலைவரின் அதிகாரமளிக்கப்படுதலின் கீழ் நிறைவேற்றப்படுகின்றன.

ஒரு நியமம் மிகவும் பொதுவாக, ஆசாரியத்துவ திறவுகோல்களைத் தரித்திருக்கிற ஒருவரின் வழிநடத்துதலின் கீழ் ஆசாரியத்துவ செயல்பாட்டில் ஒரு அலுவலுக்கு நியமிக்கப்பட்டவர்களால் நடத்தப்படுகிறது. உதாரணமாக, ஆரோனிய ஆசாரியத்துவ திறவுகோல்களைத் தரித்திருக்கிற ஆயரின் திறவுகோல்கள் மற்றும் வழிநடத்துதலின் கீழ் திருவிருந்து நியமத்தை ஆரோனிய ஆசாரியத்துவத்தின் பல்வேறு அலுவல் தரித்தவர்கள் நடத்துகிறார்கள். ஆலயத்தில் பெண்கள் நடத்துகிற ஆசாரியத்துவ நியமங்களுக்கு இதே கொள்கை பொருந்துகிறது. ஆசாரியத்துவத்தில் ஒரு அலுவலை பெண்கள் தரித்திருக்கவில்லையானாலும், ஆலயத்தின் நியமங்களின் திறவுகோல்களைத் தரித்திருக்கிற ஆலயத் தலைவரின் அதிகாரமளித்தலின் கீழ் அவர்கள் பரிசுத்த ஆலய நியமத்தை நிறைவேற்றுகிறார்கள்.

வகுப்புக்களிலோ, அவர்களது சொந்த தொகுதிகளிலோ, அல்லது ஊழிய களத்திலோ சுவிசேஷம் போதிக்க அழைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் போதனைகள், திறவுகோல்களைத் தரித்த ஒருவரின் வழிநடத்துதலின் கீழ் ஆசாரியத்துவ அதிகாரத்தின் மற்றொரு உதாரணம். தொகுதியிலோ அல்லது பிணையத்திலோ திறவுகோல்கள் தரித்த ஆசாரியத்துவ தலைவரின் பணிக்கப்படுதல் மற்றும் வழிகாட்டுதலின்கீழ், தங்கள் அழைப்பின் காரணத்தால் தங்கள் தலைமையில் தொகுதியில் மற்றும் ஆசாரியத்துவ அதிகார பிரயோகத்தில் தலைமைத்துவ ஸ்தானங்களைத் தரித்திருப்பவர்கள், பிற உதாரணங்கள். இப்படித்தான் ஆசாரியத்துவத்தின் அதிகாரமும் வல்லமையும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் பிரயோகிக்கப்பட்டு அனுபவிக்கப்படுகிறது.2

ஆசாரியத்துவ அதிகாரம் பிற்காலப் பரிசுத்தவான்கள் குடும்பங்களிலும் பிரயோகிக்கப்பட்டு அதன் ஆசீர்வாதங்கள் அடையப்படுகின்றன. குடும்பம் என நான் சொல்வது, ஆசாரியத்துவம் தரித்திருக்கிற ஆணும், திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்ற, பெண்ணும்தான். மரணம் அல்லது விவாகரத்தால் ஏற்படுத்தப்பட்ட சரியான உறவுகளிலுள்ள வேறுபாடுகளையும்கூட நான் சேர்த்திருக்கிறேன்.

அந்த செயலுக்கான திறவுகோல்களைத் தரித்திருக்கிற ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே ஆசாரியத்துவ அதிகாரம் பிரயோகிக்கப்பட முடியும் என்பது சபையில் அஸ்திபாரமாக இருக்கிறது, ஆனால் இது குடும்பத்துக்குப் பொருந்தாது. உதாரணமாக, ஒரு தகப்பன் தான் தரித்திருக்கிற ஆசாரியத்துவ அதிகாரத்தால், தன் குடும்பத்தில் தலைமைதாங்கி ஆசாரியத்துவத்தைப் பிரயோகிக்கிறார். தன் பல்வேறு குடும்ப செயல்களை நிறைவேற்றும் விதமாக, ஒரு ஆசாரியத்துவம் தரித்தவரது வழிகாட்டலோ அங்கீகாரமோ அவர் பெறத் தேவையில்லை. இதில் குடும்பத்தினருக்கு ஆலோசனையளித்தல், குடும்ப கூட்டங்கள் நடத்துதல், மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஆசாரியத்துவ ஆசீர்வாதம் கொடுத்தல், அல்லது குடும்பத்தார் அல்லது பிறருக்கு குணமாக்கும் ஆசீர்வாதங்கள் கொடுத்தல் அடங்கும். 3 சபை அதிகாரிகள் குடும்பத்தினருக்கு போதிக்கிறார்கள், ஆனால் குடும்பத்தில் ஆசாரியத்துவ அதிகார பிரயோகத்துக்கு வழிகாட்டுவதில்லை.

ஒரு தகப்பன் இல்லையானாலும், தாய் குடும்பத் தலைவியானாலும் இதே கொள்கை பொருந்தும். அவள் தன் வீட்டில் தலைமை தாங்குகிறாள், தன் தரிப்பித்தல் மற்றும் ஆலய முத்திரித்தல் மூலம் தன் குடும்பத்துக்குள் ஆசாரியத்துவ வல்லமையையும், ஆசீர்வாதங்களையும் கொண்டுவருவதில் கருவியாக அவள் இருக்கிறாள். ஆசாரியத்துவத்தில் குறிப்பிட்ட அலுவல் தரித்திருக்கிற ஒருவரால் மட்டுமே கொடுக்கப்படுகிற ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை அவள் கொடுக்க அதிகாரமளிக்கப்படாதபோது, அவள் பிற செயல்களையும் குடும்ப தலைமையேற்றல் எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியும். அப்படிச் செய்வதால், குடும்பத்தில் அவளது தலைமைப்பொறுப்பில் அவள் தலைமை தாங்குகிற பிள்ளைகளின் ஆதாயத்துக்காக அவள் ஆசாரியத்துவ வல்லமையை பிரயோகிக்கிறாள்.4

தங்கள் சொந்த குடும்பங்களில் தங்கள் ஆசாரியத்துவத்தை தகப்பன்கள் சிறப்பித்தால், அவர்கள் செய்கிற எதையும்போல, அது சபையின் ஊழியத்தை முன்னேற்றும். மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருக்கும் தகப்பன்கள் “வற்புறுத்தலாலும், நீடிய பொறுமையோடும், மென்மை மற்றும் சாந்தமாய் மாறாத அன்பினால்” தங்கள் அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:41). எல்லா ஆசாரியத்துவ அதிகாரத்தின் பிரயோகத்துக்கும் அந்த உயர் தரம், குடும்பத்துக்கு மிக முக்கியம். ஆசாரியத்துவம் தரித்தவர்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு ஆசீர்வாதங்கள் கொடுக்க அவர்கள் ஆசாரியத்துவ வல்லமை பெற்றிருக்க, அவர்கள் கட்டளைகளையும் கைக்கொள்ள வேண்டும். ஆசீர்வாதங்களை அவர்களிடம் கேட்க குடும்பத்தினர்கள் விரும்பும்பொருட்டு, அவர்கள் அன்பான குடும்ப உறவுகளை விருத்தி செய்ய வேண்டும். குடும்பத்தில் அதிக ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.5

இந்த மாநாட்டு கூட்டங்களில் பேரழிவுக்குள்ளாக்கும் தொற்றுநோயைப்பற்றிய நமது உலக அக்கறைகளிலிருந்து, நாம் சிறு அடைக்கலம் தேடும்போது, நாம் நித்தியத்தின் மாபெரும் கொள்கைகளை போதிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் “முழுவதும் ஒளி நிறைந்திருக்கும்படிக்கு,” இந்த நித்திய சத்தியங்களைப் பெற “ஒரே” சிந்தையாய் வைத்திருக்க நம் ஒவ்வொருவரையும் நான் ஊக்குவிக்கிறேன். (3 நேபி 13:22).

வேதாகமத்திலும் மார்மன் புஸ்தகத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ள திரளானோருக்கு அவரது பிரசங்கத்தில் அநித்திய சரீரங்கள் முழுவதும் ஒளி நிறைந்திருக்க முடியும் அல்லது முழுவதும் இருள் நிறைந்திருக்க முடியும் என இரட்சகர் போதித்தார். நாம் உண்மையாகவே ஒளியால் நிரப்பப்பட விரும்புகிறோம், நமது இரட்சகர் நாம் இதை எப்படி நடப்பிக்க முடியும் என நமக்குப் போதித்தார். நித்திய சத்தியங்களைப்பற்றிய செய்திகளை நாம் கேட்க வேண்டும். அவர் நமது கண்ணின் உதாரணத்தை பயன்படுத்தினார், அதன் மூலம் நாம் நமது சரீரங்களுக்குள் ஒளி பெறுகிறோம். நமது கண் “ஒரே” நோக்குடையதாயிருந்தால், வேறு வார்த்தைகளிலெனில், நாம் நித்திய ஒளியையும் புரிதலையும் பெறுவதில் கவனம் செலுத்தினால், “உன் சரீரம் முழுவதும் ஒளி நிறைந்ததாய் இருக்கும்” என அவர் விளக்கினார், (மத்தேயு 6:22; 3 நேபி 13:22). ஆனால் நமது “கண் பொல்லாததாயிருந்தால்,”—அதாவது நாம் தீமையைத்தேடி, அதை நமது சரீரத்துக்குள் எடுத்துக்கொண்டால், “உனது சரீரம் முழுவதும் காரிருள் நிறைந்ததாய் இருக்கும்” என அவர் எச்சரித்தார் (வசனம் 23). வேறு வார்த்தைகளிலெனில், நமது சரீரங்களில் இருள் அல்லது ஒளி, நாம் போதிக்கப்படுகிற நித்திய சத்தியங்களை நாம் எப்படி பார்க்கிறோம்—அல்லது பெறுகிறோம் என்பதைப் பொருத்தது.

நித்தியத்தின் சத்தியங்களை புரிந்துகொள்ள தேடவும் கேட்கவும் இரட்சகரின் அழைப்பை நாம் பின்பற்ற வேண்டும். நாம் தேடுகிற சத்தியங்களை ஒவ்வொருவருக்கும் போதிக்க நமது பரலோக பிதா சித்தமாயிருக்கிறார் என அவர் வாக்களிக்கிறார்.(3 நேபி 14:8 பார்க்கவும்). நாம் இதை வாஞ்சித்தால், அவற்றைப் பெறுவதற்கு நம் கண்களை ஒரே நோக்கமாக கொண்டிருந்தால், நித்திய சத்தியங்கள் நமக்கு ”திறக்கப்படும்” என இரட்சகர் வாக்களிக்கிறார்.(3 நேபி 14:7–8).

மாறாக, நமது சிந்தனையைக் குழப்ப அல்லது தேவனின் ஆசாரியத்துவ செயல்பாடுகளைப் போன்ற காரியங்களில் நாம் வழிதவறிப்போக நம்மை வழிநடத்த சாத்தான் ஆர்வமாயிருக்கிறான். “கள்ளத் தீர்க்கரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், ஆனால் உல்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” என இரட்சகர் எச்சரித்தார்(3 நேபி 14:15). நம்மைக் குழப்புகிற வித்தியாசமான போதனைகளிலிருந்து, நாம் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள உதவ அவர் நமக்கு இந்த பரீட்சையைக் கொடுத்தார்: “நீங்கள் அவர்களை அவர்களது கனிகளினாலே அறிவீர்கள்”(3 நேபி 14:16). “நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமும் நல்ல கனியைக் கொடுக்காது” என அவர் போதித்தார் (வசனம் 18). ஆகவே, நாம் விளைவுகளைத் தேட வேண்டும் ”கனிகள்” போதிக்கப்படுகிற கொள்கைகள் மற்றும் அவற்றைப் போதிக்கிறவர்கள். சபைக்கும், அதன் கோட்பாடுகளுக்கும், கொள்கைகளுக்கும், தலைமைக்கும் எதிராக நாம் கேட்கும் அநேக எதிர்ப்புகளுக்கு, இதுவே சிறந்த பதில். இரட்சகர் போதித்த பரீட்சையைப் பின்பற்றுங்கள். கனிகளைப் பாருங்கள், விளைவுகள்.

சுவிசேஷத்தின் கனிகளையும், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபையையும்பற்றி நாம் நினைக்கும்போது, ஜீவித்திருக்கும் இதன் அங்கத்தினர்களின் வாழ்நாளில், இன்டர் மவுண்டன் வெஸ்ட்டிலுள்ள உள்ளூர் சபைகளிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட பிற நாடுகளில் 16 மில்லியனைவிட அதிகமான அங்கத்தினர்கள் பெரும்பான்மையாக வசிக்கிற நாடுகளில் வளர்ந்திருக்கிறது. அந்த வளர்ச்சியுடன், தன் அங்கத்தினர்களுக்கு உதவ சபையின் திறமை அதிகரிக்கிறதை நாம் உணர்கிறோம். கட்டளைகளைக் காத்துக்கொள்வதிலும், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதிலும், இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதிலும், உலகம் முழுவதிலும் ஆலயங்களைக் கட்டுவதிலும் நாம் உதவுகிறோம்.

நாம் ஒரு தீர்க்கதரிசியால் வழிநடத்தப்படுகிறோம், தலைவர் ரசல் எம். நெல்சன், அவரது தலைமையின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவும் நாம் உணர்ந்துள்ள முன்னேற்றத்தை எட்ட அவரது தலைமையை கர்த்தர் பயன்படுத்தியிருக்கிறார். இப்போது தலைவர் நெல்சன் பேசக் கேட்க நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்போம், இந்த சவாலான நேரங்களில் இந்த மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் நமது முன்னேற்றத்தை மேலும் எப்படி அதிகரிக்கலாம் என அவர் நமக்குப் போதிப்பார்.

இந்தக் காரியங்களின் சத்தியத்தைப்பற்றி, நான் சாட்சியளித்து, நமது தீர்க்கதரிசியிடமிருந்து நாம் அடுத்து கேட்கப்போவதற்காக ஜெபிப்பதில் உங்களுடன் நான் சேருகிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.