பொது மாநாடு
வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஆதரவாக
ஏப்ரல் 2024 பொது மாநாடு


வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஆதரவாக

இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள உறவுகளே அவர்களின் தேர்வுகளில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்துகின்றன.

உங்களுடன் பேசத் தயாராகும் போது, நான் ஏலமன் மற்றும் அம்மோன் ஜனங்களின் வாலிப மகன்களின் கதைக்கு ஈர்க்கப்பட்டேன். இந்த விவரத்தைப் படிப்பதன் மூலம் பெற்றோர்கள், ஆயர்கள் மற்றும் தொகுதி உறுப்பினர்களுக்கு மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகளின் போதிப்பின் வல்லமையை நான் உணர்ந்தேன்.

இளம் அம்மோனியர்கள் நம்பக்கூடிய ஒரு மனிதர் ஏலமன். அவர்கள் நீதியில் வளரவும் முதிர்ச்சியடையவும் அவன் உதவி செய்தான். அவர்கள் அவனை அறிந்தார்கள் மற்றும் நேசித்தார்கள், “ஏலமன் தங்களின் தலைவனாக இருக்கவேண்டுமென வாஞ்சித்தார்கள்.”1

ஏலமன் இந்த இளைஞர்களை மகன்களைப் போல நேசித்தான் மற்றும் அவர்களின் திறனைக் கண்டான்.2 மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் போதித்தார், “மற்றவர்களுக்கு திறம்பட சேவை செய்ய, பரலோக பிதாவின் கண்களால் நாம் அவர்களைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு ஆத்துமாவின் உண்மையான தகுதியை அறியத் தொடங்குகிறோம். அப்போதுதான் தன் எல்லா பிள்ளைகள் மீதும் பரலோக பிதா வைத்துள்ள அன்பை நாம் உணர்கிறோம்.”3 இன்று ஆயர்கள் தங்கள் பாதுகாப்பில் உள்ள இளைஞர்களின் தெய்வீக அடையாளத்தைக் காணும் விவேகத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.

ஏலமன் தனது பாதுகாப்பில் உள்ள இளைஞர்களை “இலக்கமிட்டான்”.4 அவர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்குவதற்கு அவன் முன்னுரிமை அளித்தான்.

வாழ்க்கையும் மரணமும் சமநிலையில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு முக்கியமான நேரத்தில், ஏலமனும் அவனது இளம் போர்வீரர்களும் இராணுவம் அவர்களைப் பின்தொடர்வதை்க கண்டுபிடிக்கத் தவறிவிட்டனர். ஏலமன் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கினான்:

“இதோ, நாம் அவர்களுக்கு விரோதமாய் வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்கள் நின்றிருக்கிறார்கள், …

ஆதலால் என் குமாரரே, … என்ன சொல்லுகிறீர்கள்?5

இந்த உண்மையுள்ள இளைஞர்கள் பதிலளித்தனர், “தகப்பனே, இதோ, நம்முடைய தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் விழுந்துபோக அவர் அனுமதியார்; ஆதலால் நாம் போவோம்.”6 இந்த இளைஞர்கள் செயல்பட வேண்டும்8 என்ற தீர்மானத்தில் ஏலமன் ஆதரவளித்ததால், அந்த நாள் வெற்றி பெற்றது.7

இளம் அம்மோனியர்களுக்கு ஒரு பெரிய காரணம் இருந்தது மற்றும் “ஜனங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படிக்கு” துணிச்சலானவர்கள்.9 ஏலமன் தலைமையிலான “சிறு சேனை” அனுபவம் வாய்ந்த நேபிய படைகளின் இருதயங்களில் “மிகுந்த நம்பிக்கையையும், அதிக சந்தோஷத்தையும்” பரப்பியது.10 தொகுதியை ஆசீர்வதிப்பதிலும் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதிலும் இன்று ஒரு ஆயர்அவர்களின் தனித்துவமான திறமைமிக்க இளைஞர்களை வழிநடத்த முடியும். தலைவர் ரசல் எம். நெல்சன் “இந்த ஊழியத்திற்காகத்தான் [அவர்கள்] பூமிக்கு அனுப்பப்பட்டார்கள்” என்று கற்பித்தார்.11

“எல்லா நேரத்திலும் தங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட எக்காரியத்திலும் உண்மையுள்ள மனுஷர்களாக” இருந்த இந்த இளம் அம்மோனியர்களைப் போலவே,12 ஏலமன் உண்மையாகத் தன் தலைவர்களைப் பின்பற்றினான். சவால் அல்லது பின்னடைவு எதுவாக இருந்தாலும், ஏலமன் எப்போதும் தங்கள் நோக்கத்தை முன்னேற்றுவதற்கு “உறுதியாய் தீர்மானமாய்” இருந்தான்.13 “[அவனுடைய] சிறு குமாரரோடு அணிவகுத்துப் போகவேண்டுமென்று” அவன் கட்டளையிடப்பட்டபோது,14 அவன் கீழ்ப்படிந்தான்.

“தொகுதி இளம் பெண்கள் தலைவி[கள்] உடன் ஆலோசனை” என்ற நமது தலைவர்களின் வழிகாட்டுதலை ஆயர்கள் பின்பற்றுவதால் இன்று இளைஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.15 பிணையத் தலைவர்கள், ஆயர்கள் மற்றும் இளம் பெண்கள் தலைவர்கள் மூலம், ஆயர்கள் மற்றும் இளம் பெண்கள் தலைவர்கள் இளைஞர்களுக்கு தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.16

ஏலமன் உடன்படிக்கைகளை கௌரவித்தான். அம்மோன் வாலிப இளைஞர்களின் பெற்றோருக்கு சுவிசேஷத்தைக் கற்பித்தபோது, ​​இந்த தீர்க்கதரிசிகள் திறந்த இருதயத்துடன் அதை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நீதியுள்ள சீஷத்துவத்தின் புதிய வாழ்க்கைக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தனர், அவர்கள் “தங்கள் கலகத்தின் ஆயுதங்களைக் கீழே போட” ஒரு உடன்படிக்கை செய்தார்கள்.17 அவர்கள் இந்த உடன்படிக்கையை மீறுவதைக் கருத்தில் கொள்ளச் செய்த ஒரே விஷயம், அவர்களின் பழக்கமான போருக்குத் திரும்பிச் செல்வது, நேபியர்களை ஆபத்தில் பார்த்ததுதான்.

அம்மோனியர்கள் தங்களுக்கு பாதுகாப்பான வீட்டை வழங்கிய இந்த மக்களுக்கு உதவ விரும்பினர். ஏலமன், மற்றவர்களுடன் சேர்ந்து, ஒருபோதும் சண்டையிடக்கூடாது என்ற தங்கள் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க அவர்களை வற்புறுத்தினான். இந்த அம்மோனியர்கள் தங்கள் பட்டயங்களாலும் அம்புகளாலும் அளித்திருக்கக்கூடிய பலத்தை விட தேவன் அளிக்கும் பலத்தை அவன் அதிகம் நம்பினான்.

ஏலமனும் அவனது இளம் வீரர்களும் கடினமான சவால்களை எதிர்கொண்டபோது, ஏலமன் உறுதியுடன் இருந்தான். “இதோ, இது அவசியமற்றது, தேவன் எங்களை விடுவிப்பார் என்றும், நம்புகிறோம்.”18 ஒரு சந்தர்ப்பத்தில், பட்டினியால் இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவர்களின் பதில், தேவன் [அவர்களை] பெலப்படுத்தி, [அவர்களை] தப்புவித்து, [அவர்களை] விடுவிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் தேவனாகிய கர்த்தர் [அவர்களை] விசாரிக்கும்படி, அவரிடத்தில் [அவர்களது] ஆத்துமாக்களை ஜெபத்திலே ஊற்றினார்கள்.19 “நம்பும்படி போதிக்கப்பட்டதிலே அவர்களுக்கிருக்கிற மிகுந்த விசுவாசத்தினிமித்தமே ஆனது.”20

இந்த இளைஞர்கள் தங்கள் பெற்றோரால் ஆதரிக்கப்பட்டனர் என்பதை ஏலமனிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். இந்த உண்மையுள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் முக்கியப் பொறுப்பு அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், தேவனுக்கு முன்பாக “தலைநிமிர்ந்து நடக்கவும்”21 கற்றுக்கொடுத்தார்கள். அவர்களின் தாய்மார்கள் கற்றுக் கொடுத்தார்கள் “தாங்கள் சந்தேகப்படாமலிருந்தால், தேவன் தங்களை விடுவிப்பார்.”22 அவர்களின் தகப்பன்மார் உடன்படிக்கையை உருவாக்குவதற்கு ஒரு வல்லமைவாய்ந்த முன்மாதிரியை ஏற்படுத்தினர்.23 இந்த முன்னாள் போர்வீரர்கள் போரின் கொடூரங்களை அறிந்திருந்தனர். அவர்கள் தங்கள் அனுபவமில்லாத மகன்களை ஏலமனின் பராமரிப்பில் ஒப்படைத்தனர் மற்றும் “உணவுப்பொருட்களை” அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளித்தனர்.24

ஏலமன் தனது இளம் படைக்கு சேவை செய்யும்போது தனியாக இருக்கவில்லை. அவனைச் சுற்றி இருந்த மக்களிடம் அவன் ஆதரவுக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் அவர்கள் பக்கம் திரும்பினான். . அவன் உதவிக்காக தலைவன் மரோனியை அணுகினான், அது வந்தது.

கர்த்தருடைய ராஜ்யத்தில் பணிபுரியும் எவரும் தனியாகச் சேவை செய்வதில்லை. கர்த்தர் நமக்கு தொகுதிகளையும், பிணையங்களையும் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட அமைப்பின் மூலம், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் ஆதாரங்களும், ஞானமும், உணர்த்துதலும் நம்மிடம் உள்ளன.

ஒரு ஆயர் ஆலோசனைக்குழுக்கள் மூலம் தொகுதியை வழிநடத்துகிறார்.25 அவர் காலாண்டு ஊழிய நேர்காணல்களை ஊக்குவிக்கிறார், பின்னர் குடும்பங்களுக்கு ஊழியம் செய்யும் பொறுப்பை நிறைவேற்ற மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசை சங்கத்தை ஊக்குவிக்கிறார். இந்த தலைமைகள் தேவைகளை மதிப்பிடுவதிலும், உணர்த்தப்பட்ட தீர்வுகளைக் கண்டறிவதிலும் முன்னணி வகிக்கின்றன. இந்த பொறுப்புகளில் மூப்பர்கள் குழுமம் மற்றும் ஒத்தாசை சங்கத்தின் தலைவர்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம் பிணையத் தலைவர்கள் ஆதரவை வழங்குகிறார்கள்.

தலைவர்களுக்கும் பெற்றோருக்கும் தேவையான வழிகாட்டுதல்கள் சுவிசேஷ நூலகம் மற்றும் சுவிசேஷ வாழ்க்கை செயலிகளில் காணப்படுகின்றன. இந்த உணர்த்தப்பட்ட ஆதாரங்களில், வேதங்கள், தற்காலத் தீர்க்கதரிசிகளின் போதனைகள் மற்றும் பொது கையேடு ஆகியவற்றைக் காணலாம். சுவிசேஷ நூலகத்தில் உள்ள இளைஞர் பட்டனில் குழும மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கான பல ஆதாரங்கள் 26 For the Strength of Youth: A Guide for Making Choices உள்ளன. தொகுதியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்த உணர்த்தப்பட்ட ஆதாரங்களைப் படித்து, ஆவியின் வழிகாட்டுதலைப் பெறுவதால், இளைஞர்களைப் பலப்படுத்துவதில் ஒவ்வொருவரும் கர்த்தரால் வழிநடத்தப்பட முடியும்.

உறுப்பினர்கள் வளரும் தலைமுறையில் கவனம் செலுத்துவதால் முழு தொகுதியும் ஆசீர்வதிக்கப்பட்டு பலப்படுத்தப்படும். நம்முடைய பரிபூரணமின்மை மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும், பரலோக பிதா நம் ஒவ்வொருவரையும் தம் ஆவியின் துணையின் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளஅழைக்கிறார். பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களைப் பின்பற்றும்போது நாம் வளர்ந்து பரிசுத்தமாக்கப்படுகிறோம் என்பதை அவர் அறிவார்.27 நமது முயற்சிகள் நிறைவற்றவை என்பது முக்கியமல்ல. நாம் கர்த்தருடன் கூட்டு சேரும்போது, அவர் இளைஞர்களுக்கு என்ன செய்வார் என்பதற்கு ஏற்ப நமது முயற்சிகள் இருக்கும் என்று நம்பலாம்.

இளைஞர்களை சென்றடைவதில் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் மூலம், அவர்களின் வாழ்க்கையில் பரலோக பிதாவின் அன்பின் சாட்சிகளாக மாறுகிறோம். கர்த்தரின் தூண்டுதலின்படி செயல்படுவது அன்பு மற்றும் நம்பிக்கையின் உறவுகளை உருவாக்குகிறது. இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள உறவுகளே அவர்களின் தேர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மற்றவர்களுக்கு சேவை செய்ய தூண்டுதல்களைத் தேடும் மற்றும் செயல்படும் செயல்பாட்டில் நம்முடன் பங்கேற்கும்போது இளைஞர்கள் வெளிப்பாட்டின் மாதிரியைக் கற்றுக்கொள்வார்கள். இந்த உணர்த்தப்பட்ட வழிகாட்டுதலுக்காக இளைஞர்கள் கர்த்தரிடம் திரும்பும்போது, அவருடனான அவர்களின் உறவுகளும் நம்பிக்கையும் ஆழமடையும்.

கட்டுப்படுத்தாமல், ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவதன் மூலம் இளைஞர்கள் மீது நமது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்.28 நாம் பின்வாங்கி, இளைஞர்கள் ஒன்றாக ஆலோசனையின் மூலம் கற்றுக்கொள்ள அனுமதிக்கும்போது, உணர்த்தப்பட்ட வழியைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அவர்கள் உண்மையான மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் அனுபவிப்பார்கள்.

தலைவர் ஹென்றி பி. ஐரிங் போதித்தார்: “அவர்கள் உண்மையாகவே யார் மற்றும் அவர்கள் உண்மையாகவே என்னவாக முடியும் என்பது பற்றி [உங்களிடமிருந்து] இளைஞர்கள் என்ன கற்கிறார்கள் என்பதே மிக முக்கியமாகும். விரிவுரைகளிலிருந்து அவர்கள் அதிகம் கற்க மாட்டார்கள் என்பதே என் யூகம். நீங்கள் யார், அவர்கள் யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் மற்றும் அவர்கள் என்ன ஆக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற உணர்விலிருந்து அவர்கள் பெறுவார்கள்.”29

நமது இளைஞர்கள் தங்கள் தைரியம், நம்பிக்கை மற்றும் திறமைகளால் நம்மை வியக்க வைக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் முழு ஈடுபாடுள்ள சீடர்களாக அவர்கள் தேர்ந்தெடுக்கும்போது, அவருடைய சுவிசேஷம் அவர்களின் இருதயங்களில் பொறிக்கப்படும். அவரைப் பின்தொடர்வது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் யார் என்பதில் ஒரு பகுதியாக மாறும்.

இயேசு கிறிஸ்துவின் வீரம் மிக்க ஒரு சீடர் எப்படி வாழ்கிறார் என்பதைக் காண இளம் அம்மோனியர்களுக்கு ஏலமன் உதவினார். இன்று கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கு நாம் இளைஞர்களுக்கு வல்லமை வாய்ந்த உதாரணங்களாக இருக்க முடியும். விசுவாசமுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் இந்த உதாரணங்களுக்காக ஜெபிக்கிறார்கள். அன்பான, உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும் வயதுவந்தவர்களின் செல்வாக்கை எந்த திட்டமும் மாற்ற முடியாது.

ஆசாரியத்துவ குழுமத்தின் தலைவராக, விசுவாசமிக்க கணவராகவும், அன்பான தகப்பனாகவும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆயர் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும்30 நீதியான வழிகளில் பாதுகாத்தல், வழங்குதல் மற்றும் தலைமை தாங்குதல் மூலம்.31 ஆயர்கள், இளைஞர்கள் மீது சீரொளி போன்ற கவனம் செலுத்தினால்,32 தலைமுறைகளுக்கு நீடிக்கும் ஒரு செல்வாக்கு பெற முடியும்.

இன்றைய இளைஞர்கள் பரலோக பிதாவின் மிக உத்தமமான ஆவிகளிடையே உள்ளனர்.33 அவர்கள் பூலோக வாழ்க்கைக்கு முந்தைய உலகில் சத்தியம் மற்றும் சுயாதீனத்தின் உறுதியான பாதுகாவலர்களாக இருந்தனர்.34 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமை வாய்ந்த சாட்சியின் மூலம் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதற்காக அவர்கள் இந்த நாட்களில் பிறந்தார்கள். அவர் அவர்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார் மற்றும் அவர்களின் சிறந்த திறனை அறிந்திருக்கிறார். அவர்கள் வளரும்போது அவர் பொறுமையாக இருக்கிறார். அவர் அவர்களை மீட்டு பாதுகாப்பார். அவர் அவர்களைக் குணப்படுத்தி வழிநடத்துவார். அவர்களுக்கு அவர் உணர்த்துவார். நாம், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் தலைவர்கள், அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம். அடுத்த தலைமுறையை நாம் வளர்க்கும் போது நமக்கு உதவ இரட்சகரின் சபை உள்ளது.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டு, இன்று தலைவர் ரசல் எம். நெல்சன் தலைமையில் கிறிஸ்துவின் சபை, இந்த பிற்காலத்தில் இளைஞர்களின் மகத்தான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ளது என்று நான் சாட்சி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. ஆல்மா 53:19.

  2. “சபையின் இளைஞர்களுக்கு தலைவர் நெல்சன் சொன்னார்: “நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் விரும்பினால் … பெரிய ஒன்றின், மகத்தான ஒன்றின், மகத்துவமான ஒன்றின் பெரிய பகுதியாக நீங்கள் இருக்கலாம்! … கர்த்தர் எப்போதும் உலகுக்கு அனுப்பியுள்ளவர்களிடையே நீங்கள்தான் சிறந்தவர்கள். நீங்கள் துடிப்பாகவும், ஞானமாகவும், எந்த முந்தய தலைமுறையையும் விட உலகத்தில் அதிக தாக்கம் உண்டாக்க திறமை படைத்தவர்கள்!” Russell M. Nelson, “Hope of Israel” (worldwide youth devotional, June 3, 2018), Gospel Library.

  3. Dale G. Renlund, “Through God’s Eyes,” Liahona, Nov. 2015, 94.

  4. ஆல்மா 56:55.

  5. ஆல்மா 56:43–44.

  6. ஆல்மா 56:46.

  7. “நமது பரலோக பிதாவின் குறிக்கோள், அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யச் செய்வதல்ல; அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுப்பதே ஆகும் .” (Dale G. Renlund, “Choose You This Day,” Liahona, Nov. 2018, 104).

  8. “இளைஞர்களை அழைத்து அவர்களைச் செயல்பட அனுமதிப்பதன் மூலம் நாம் அவர்களை மேம்படுத்தும்போது, சபை அதிசயமான வழிகளில் முன்னேறும்.” (from a meeting with Elder David A. Bednar; see also 2020 Temple and Family History Leadership Instruction, Feb. 27, 2020, Gospel Library).

  9. ஆல்மா 53:22.

  10. ஆல்மா 56:17.

  11. Russell M. Nelson, “Hope of Israel,” Gospel Library.

  12. ஆல்மா 53:20.

  13. ஆல்மா 58:12.

  14. ஆல்மா 56:30.

  15. General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 7.1.2, Gospel Library.

  16. General Handbook, 6.7.2. பார்க்கவும்.

  17. ஆல்மா 23:7.

  18. ஆல்மா 58:37.

  19. ஆல்மா 58:10–11.

  20. ஆல்மா 57:26.

  21. ஆல்மா 53:21.

  22. ஆல்மா 56:47.

  23. ஆல்மா 23:7,, 24:17–19 பார்க்கவும்.

  24. ஆல்மா 56:27.

  25. General Handbook, 7.1.1. பார்க்கவும்.

  26. “நாம் நித்திய சத்தியத்தைத் தேடும்போது, ஒரு கருத்து தேவனிடமிருந்து வந்ததா அல்லது வேறொரு மூலத்திலிருந்து வந்ததா என்பதை அறிய பின்வரும் இரண்டு கேள்விகள் நமக்கு உதவும்: இந்த கருத்து வேதங்களிலும் வாழும் தீர்க்கதரிசிகளால் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறதா? பரிசுத்த ஆவியின் சாட்சியால் கருத்து உறுதிப்படுத்தப்பட்டதா? தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் கோட்பாட்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறார், மேலும் பரிசுத்த ஆவியானவர் அந்த சத்தியங்களை நமக்கு உறுதிசெய்து அவற்றைப் பிரயோகிக்க உதவுகிறார் (John C. Pingree Jr., “Eternal Truth,” Liahona, Nov. 2023, 100).

  27. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:2–4 பார்க்கவும்.

  28. “[நமது] இளைஞர்கள் [தேவ பணியால்] அமிழ்த்தபடவில்லையானால், அவர்கள் உலகத்தால் மிகவும் அமிழ்த்தப்படலாம். … நடைமுறையில், ஒருவரை ஜெபம் பண்ணவோ, அல்லது திருவிருந்து பரிமாறவோ அழைக்க மட்டும் எத்தனை உதவிக்காரன் மற்றும் ஆசிரியர் குழும தலைமைகள் உள்ளன? சகோதரரே, இவர்கள் உண்மையாகவே விசேஷித்த ஆவிகள், சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டால், அவர்கள் விசேஷித்த காரியங்கள் செய்வர்!” (Neal A. Maxwell, “Unto the Rising Generation,” Ensign, Apr. 1985, 11).

  29. Henry B. Eyring, “Teaching Is a Moral Act” (address given at the Brigham Young University annual conference, Aug. 27, 1991), 3, speeches.byu.edu.

  30. See “Aaronic Priesthood Quorum Theme,” Gospel Library.

  31. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” ,” சுவிசேஷ நூலகம் பார்க்கவும்

  32. ஆயங்கள் அதிக வலியுறுத்தல்களைக் கொடுப்பார்களென்றும் இளம் ஆண்களின் ஆசாரித்துவ பொறுப்புகளில் கவனம் செலுத்தி, அவர்களுடைய குழும கடமைகளில் அவர்களுக்கு உதவுவார்களென்பது நமது நம்பிக்கை. ஆரோனிய ஆசாரியத்துவத்தின் குழும தலைமைகளுக்கு உதவவும், ஆயங்களுக்கு அவர்களுடைய கடமைகளில் உதவவும் திறமையான வயதுவந்த இளம் ஆண்கள் ஆலோசகர்கள், அழைக்கப்படுவார்கள். அதிகமான இளம் ஆண்களும் இளம் பெண்களும் சவாலுக்கு மேலெழுந்து, இந்த ஒளிக்கதிரைப்போல் நமது இளைஞர்களிடம் கவனம் செலுத்துவதால் உடன்படிக்கைப் பாதையில் நிலைத்திருப்பார்கள்.” (Quentin L. Cook, “Adjustments to Strengthen Youth,” Liahona, Nov. 2019, 41).

  33. “நமது பரலோக பிதா தன் அநேக மிக உத்தமமான ஆவிகளை சேமித்து வைத்திருக்கிறார், இந்த கடைசி கட்டத்துக்கு, ஒருவேளை அவரது அருமையான குழு என்றும் நாம் சொல்லலாம். அந்த உத்தமமான ஆவிகளான, அந்த அருமையான வீரர்கள், அந்த கதாநாயகர்கள்,நீங்கள்!!” (Russell M. Nelson, “Hope of Israel,” Gospel Library).

  34. “நீங்கள் விரும்பும் இளைஞன் சுயாதீனம் மற்றும் சத்தியத்தின் பக்கம் உள்ள வீரம் மிக்க வீரர்களில் ஒருவராக இருந்திருக்கலாம். … தாங்களே தேர்ந்தெடுப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டிற்கு நாம் எதிர்வினையாற்றும் விதத்தில் நாம் உதவலாம். அவர்கள் பூலோக வாழ்க்கைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே உண்மையுள்ள போர்வீரர்களில் ஒருவராக இருந்திருக்க முடியுமா என்று நாம் அவர்களைப் பார்க்கிறோமா என்பதை அவர்கள் உணருவார்கள், ஒழுக்க சுயாதீனத்தைப் பாதுகாப்பதில் இன்னும் உறுதியுடன் இருப்பார்கள் மற்றும் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கான அதன் பெரிய மதிப்பை அறிந்திருக்கிறார்கள். பூலோக வாழ்க்கைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அவர்களை உண்மையுள்ள போர்வீரர்களாக நாம் பார்க்க முடிந்தால், அவர்களின் சுதந்திரத்திற்கான உரிமைகோரல்களை அவர்களின் ஆற்றலின் அடையாளமாகவும் நாம் பார்க்கலாம், இது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் சுயாதீனத்தின் வல்லமையை அவர்கள் சோதிக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.” (Henry B. Eyring, “A Life Founded in Light and Truth” [Brigham Young University devotional, Aug. 15, 2000], 3, 4, speeches.byu.edu).