பொது மாநாடு
உத்தமம்: கிறிஸ்துவைப் போன்ற ஒரு பண்பு
ஏப்ரல் 2024 பொது மாநாடு


உத்தமம்: கிறிஸ்துவைப் போன்ற ஒரு பண்பு

உத்தமமான வாழ்க்கை வாழ்வதற்கு, நாம் தேவனுக்கும், ஒருவருக்கொருவருக்கும், மற்றும் நமது தெய்வீக அடையாளத்திற்கும் உண்மையாக இருக்க வேண்டும்.

இரட்சகரின் ஊழியத்தின் இறுதி நேரத்தில், அவர் கெத்செமனே என்ற தோட்டத்திற்கு ஒலிவ மலைக்குச் சென்று, அவருடைய சீடர்களை காத்திருக்க அழைத்தார்.1 இப்போது தனியாக, அவர் தனது பிதாவிடம் வேண்டினார், “உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்.”2 வேதனையில் இருந்ததால், அவரது துன்பம் அவரை சொல்ல வைத்தது, “சகலத்திற்கும் மேலான தேவனாகிய என்னையே வேதனையினிமித்தம் நடுங்கி, ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் கசிந்து, … [அவர்] கசப்பான பானம்பண்ணி குறுகிப்போகாமலிருக்க விரும்பினேன்.”3 ஆனாலும் இந்த ஆழ்ந்த விரக்தியின் தருணத்தில், இரட்சகர் சுருங்கவில்லை, “மனுபுத்திரருக்காக [அவர்] பங்கெடுத்து [அவரது] ஆயத்தங்களை முடித்தார்.”4

பிதாவின் ஒரே பேறானவராக, இயேசு கிறிஸ்து மரணம், வலி மற்றும் துன்பத்தின் மீது வல்லமை கொண்டிருந்தார், ஆனால் சுருங்கவில்லை. அவர் தனது பிதாவுடன் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றினார், அவ்வாறு செய்வதன் மூலம், நாம் வாழும் உலகில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்துவைப் போன்ற ஒரு பண்பை வெளிப்படுத்தினார்—உத்தமம் என்ற பண்பு. அவர் தேவனுக்கும், நம் ஒவ்வொருவருக்கும், அவருடைய தெய்வீக அடையாளத்திற்கும் உண்மையாக இருந்தார்.

உத்தமம்

இயேசு கிறிஸ்துவே நமது உதாரணம். உத்தமமான வாழ்க்கை வாழ்வதற்கு, நாம் தேவனுக்கும், ஒருவருக்கொருவருக்கும், மற்றும் நமது தெய்வீக அடையாளத்திற்கும் உண்மையாக இருக்க வேண்டும். தேவனை நேசிப்பதற்கான முதல் பெரிய கட்டளையிலிருந்து உத்தமம் பாய்கிறது. நீங்கள் தேவனை நேசிப்பதால், நீங்கள் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்கிறீர்கள். சரி மற்றும் தவறு இருப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், மேலும் முழுமையான சத்தியம் இருக்கிறது—தேவனின் சத்தியம். உத்தமம் என்பது மற்றவர்களைக் கவர அல்லது ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக நாம் நமது தரத்தையோ நடத்தையையோ குறைப்பதில்லை.5 நீங்கள் “சரியானதைச் செய்யுங்கள்” மற்றும் “பின்விளைவுகள் தொடரட்டும்.”6 என் சுவிசேசேஷத்தைப் பிரசங்கியுங்கள் ஊழியக்காரர் கையேடு, அண்மை மாற்றங்கள் குறிப்பாக கிறிஸ்துவைப் போன்ற பண்புக்கூறாக உத்தமத்தைச் சேர்த்தது.7

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் பிணையத்தை மறுசீரமைக்க மூப்பர் உக்டர்ப் நியமிக்கப்பட்டார். எங்கள் நேர்காணலின் போது, நான் மறக்காத ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்: “பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவந்தால், உங்களுக்கோ அல்லது சபைக்கோ சங்கடமாக இருக்கும் ஏதேனும் உங்கள் வாழ்க்கையில் உண்டா?” ஆச்சரியத்துடன், என் மனம் என் வாழ்நாள் முழுவதும் வேகமாக ஓடியது, நான் தவறிவிட்ட அந்த தருணங்களை நினைவுபடுத்த முயன்று, “நான் செய்த அனைத்தையும் மற்றவர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் என்னைப் பற்றி அல்லது சபையைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

இந்த நேரத்தில், மூப்பர் உக்டர்ப் தகுதியைப் பற்றி மட்டுமே கேட்கிறார் என்று நினைத்தேன், ஆனால் அது உண்மையில் உத்தமம் பற்றிய கேள்வி என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் அறிவித்தவற்றுக்கு உண்மையாக இருந்தேனா? எனது வார்த்தைகளுக்கும் எனது செயல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை உலகம் காணுமா? என்னுடைய நடத்தை மூலம் மற்றவர்கள் தேவனைப் பார்ப்பார்களா?

தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல், “உத்தமம்” என்பது “நமது நம்பிக்கைகள் மற்றும் ஒப்புக்கொடுத்தல்களுக்கு ஏற்ப வாழ விருப்பம் மற்றும் திறன்” என்று கற்பித்தார்.8

தேவனுக்கு உண்மையாக

உத்தம வாழ்க்கைக்கு நாம் முதலில் தேவனுக்கு உண்மையாக இருங்கள் என்பது தேவைப்படுகிறது.

சிறுவயதிலிருந்தே, சிங்கத்தின் குகையில் தானியேலின் கதையை நாங்கள் கற்றுக்கொண்டோம். தானியேல் எப்போதும் தேவனுக்கு உண்மையாக இருந்தான். அவனது பொறாமை கொண்ட நண்பர்கள் “[அவனைக்] குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்” 9 மேலும் தங்கள் கடவுள்களுக்கு மட்டுமே ஜெபங்களை கட்டாயப்படுத்தும் ஆணையை உருவாக்கினர். தானியேல் ஆணையைப் பற்றி அறிந்திருந்தான், ஆனால் வீட்டிற்குச் சென்றான்— “பலகணிகள் திறந்திருக்க,” 10 —இஸ்ரவேலின் தேவனிடம் ஒரு நாளைக்கு மூன்று முறை மண்டியிட்டு ஜெபம் செய்தான். இதன் விளைவாக, தானியேல் சிங்கத்தின் குகைக்குள் தள்ளப்பட்டான். காலையில், தானியேலின் தேவன் அவனை விடுவித்ததை ராஜா கண்டுபிடித்து, அனைவரும் செய்ய வேண்டும் என்று ஒரு புதிய ஆணையை வெளியிட்டான், “தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டும் ; ஏனெனில் அவர் ஜீவனுள்ள தேவன்.”11

தானியேலின் உத்தமத்தின் மூலம் ராஜா தேவனை அறிந்துகொண்டான். மற்றவர்கள் நம்முடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் தேவனைப் பார்க்கிறார்கள். தானியேலைப் போலவே, தேவனுக்கு உண்மையாக இருப்பது நம்மை உலகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும்.

இரட்சகர் நமக்கு நினைவூட்டுகிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”12 தலைவர் ரசல் எம். நெல்சன் ஆலோசனையளித்தார் “[உலகத்தை மேற்கொள்வது] என்பது, தேவனின் விஷயங்களை விட இந்த உலகத்தின் விஷயங்களைப் பற்றி அதிக அக்கறை செலுத்துவதற்கான சோதனையை சமாளிப்பது என்று பொருள். மனிதர்களின் தத்துவங்களை விட கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்புவது என்பது இதன் பொருள்.”13 அதேபோல், “[நமது] சொந்த வழியிலும், [நமது] சொந்த தேவனின் சாயல், அதன் சாயலானது உலகத்தின் சாயலைப் போலிருப்பதில்” நாம் நடக்க வேண்டும் என்ற சோதனையை எதிர்க்க வேண்டும். 14

இந்த உலகத்தின் எதிர்ப்பு இழுப்பு என்பது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும். இழுப்புக்கு நாம் எவ்வாறு பதிலளிப்போம் என்பது நாம் யார் என்பதன் சாராம்சம்—நமது உத்தமத்தின் அளவு. திருமணத்தில் உள்ள நம்பகத்தன்மையை அழிப்பது போல அல்லது சபை கோட்பாடு அல்லது கலாச்சாரத்தை விமர்சிக்கும் அநாமதேய கருத்துக்களை உள்ளிடுவது போன்ற நுட்பமான உலக இழுப்பு நேரடியாக இருக்கலாம். நம்முடைய தேர்வுகளில் உத்தமத்தைக் கடைப்பிடிப்பது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான உள் உறுதிப்பாட்டின் வெளிப்புற வெளிப்பாடாகும்.

பிறருக்கு உண்மையாக

தேவனை நேசிப்பதற்கான முதல் பெரிய கட்டளையிலிருந்து உத்தமம் பாய்வது போல, ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதற்கு, நம்மைப் போலவே நம் அண்டை வீட்டாரையும் நேசிக்க வேண்டும். உத்தமத்தின் வாழ்க்கை பரிபூரண வாழ்க்கை அல்ல; தேவனுக்கு உண்மையாக இருப்பதற்கும், அந்தச் சூழலில் மற்றவர்களுக்கு உண்மையாக இருப்பதற்கும் நாம் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்யும் வாழ்க்கை அது. தலைவர் ஓக்ஸ் நமக்கு நினைவூட்டுகிறார், “இரண்டாவது கட்டளையைக் கடைப்பிடிப்பதற்கான நமது வைராக்கியம் முதல் கட்டளையை மறந்துவிடக் கூடாது.”15

மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளை நிர்வகிக்கும் நடத்தை நெறிமுறைகள் அல்லது நெறிமுறை விதிகளை திணிப்பதன் மூலம் உலகம் அதிகமாக உத்தமத்துடன் போராடுகிறது. நல்லது என்றாலும், இந்த விதிகள் பொதுவாக முழுமையான சத்தியத்துடன் இணைக்கப்படவில்லை மற்றும் கலாச்சார ஏற்பு அடிப்படையில் உருவாகின்றன. மூப்பர் உக்டர்ப் எழுப்பிய கேள்வியைப் போலவே, சில நிறுவனங்கள் தங்கள் முடிவுகள் அல்லது முடிவெடுக்கும் செயல்முறை நேரலையில் அல்லது ஒரு பெரிய செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டால் எப்படி இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன. தெளிவற்ற இருளில் இருந்து சபை வெளியே வரும்போது,16 நாம், தானியேலைப் போலவே, உலக எதிர்பார்ப்புகளுக்கு மேலாக உயர்ந்து, எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உண்மையான மற்றும் ஜீவிக்கும் தேவனின் முகமாக மாற வேண்டும். 17

நம் செயல்கள் நம் வார்த்தைகளுக்கு முரணாக இருந்தால், நம்மிடம் உத்தமம் இருப்பதாக வெறுமனே சொல்வதுமட்டும் போதாது. அதேபோல், கிறிஸ்தவ தயவு உத்தமத்திற்கு மாற்றாக இல்லை. ஒரு உடன்படிக்கை மக்களாகவும், அவருடைய சபையின் தலைவர்களாகவும், நாம் நிந்தனைக்கு அப்பாற்பட்டவர்களாகவும், கர்த்தர் வகுத்துள்ள தராதரங்களுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும்.

உத்தமத்துடன் செயல்படுவது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்து, கர்த்தரின் சித்தத்தை மட்டுமே செய்ய விரும்புகிறோம் என்பதை மற்றவர்களுக்கு உறுதியளிக்கிறது. நமது ஆலோசனைக்குழுக்களில், நாம் வெளிப்புற தாக்கங்களை எதிர்க்கிறோம் மற்றும் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணிடம் இருந்து உள்ளுணர்வுகளை நாடி கர்த்தர் வெளிப்படுத்திய செயல்முறையைப் பின்பற்றுகிறோம் மற்றும் பெறப்பட்ட உணர்த்தப்பட்ட ஆலோசனைக்கு இசைவாக செயல்படுகிறோம்.18

நமது கவனம் இரட்சகரிடம் உள்ளது, மேலும் நமது சொந்த நலன்களுக்காக சேவை செய்வது, நம் குடும்பத்திற்கு நன்மை செய்வது அல்லது ஒருவரின் இழப்பில் மற்றொருவருக்கு சாதகமாக கருதப்படும் செயல்களைத் தவிர்ப்பதில் கவனமாக இருக்கிறோம். தனிப்பட்ட அங்கீகாரத்தைப் பெற, அதிக விருப்பங்களை உருவாக்க, மேற்கோள் காட்ட அல்லது வெளியிடுவதற்கான, நமது செயல்கள் மனுஷர்களின் கௌரவத்தால் பாதிக்கப்படலாம் என்ற எண்ணத்தைத் தவிர்க்க, நாம் மிகவும் முயற்சி செய்கிறோம். 19

நமது தெய்வீக அடையாளத்திற்கு உண்மையாக

இறுதியாக, ஒரு உத்தமமான வாழ்க்கைக்கு, நம் தெய்வீக அடையாளத்திற்கு உண்மையாக இருக்க வேண்டியது தேவைப்படுகிறது.

அப்படியில்லாத சிலரை நாம் அறிவோம். அந்திகிறிஸ்து கோரிகோர், அவர்களின் “மாம்ச சிந்தையை” கவர்ந்து, அவன் பலரின் இருதயங்களை தவறாக வழிநடத்தினான், என்பது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.20 ஆனாலும், தனது வாழ்வின் இறுதிக் கணங்களில், அவன் அறிக்கை செய்தான், “தேவன் ஒருவர் உண்டென்று நான் எப்போதும் அறிந்திருக்கிறேன்.”21 தலைவர் ஹென்றி பி. ஐரிங் போதித்தார், பொய் சொல்வது நம்முடைய தெய்வீக அடையாளமாகிய, “நம் ஆவியின் இயல்புக்கு முரணானது.”22 கோரிகோர் தன்னை ஏமாற்றிக்கொண்டான், சத்தியம் அவனில் இல்லை.23

மாறாக, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் தன்னம்பிக்கையுடன் அறிவித்தார், “அதை நான் அறிவேன், அதை தேவன் அறிவாரென நான் அறிவேன், அதை என்னால் மறுக்கமுடியாது.”24

ஜோசப்பின் சகோதரன் ஹைரம், “அவருடைய இருதயத்தின் உத்தமத்தினிமித்தம்” கர்த்தரால் நேசிக்கப்பட்டார்.25 அவரும் ஜோசப்பும் இறுதிவரை உண்மையாகவே இருந்தனர்—தங்கள் தெய்வீக அடையாளம், அவர்கள் பெற்ற ஒளி மற்றும் அறிவு, மற்றும் தாங்கள் எப்படி ஆக முடியும் என்று அவர்கள் அறிந்ததற்கு உண்மையாக இருந்தனர்.

முடிவுரை

“தேவனின் சித்தத்திற்கு” நம்மை நாமே ஒப்புரவு செய்துகொள்வோமாக.26 மேலும் கிறிஸ்துவைப் போன்ற உத்தமம் என்ற பண்பை வளர்த்துக்கொள்வோமாக. உலகத்தின் இரட்சகராகிய நமது முன்மாதிரியைப் பின்பற்றி, சுருங்காமல், தேவனுக்கும், ஒருவருக்கொருவருக்கும், மற்றும் நமது தெய்வீக அடையாளத்துக்கும் உண்மையுள்ள வாழ்க்கையை வாழ்வோமாக.

யோபு சொன்னது போல, “சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்தி, என் உத்தமத்தை அறிவாராக.” 27 இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.