பொது மாநாடு
சேவை செய்வதற்கு முன்னியமிக்கப்பட்டோர்
ஏப்ரல் 2024 பொது மாநாடு


சேவை செய்வதற்கு முன்னியமிக்கப்பட்டோர்

நம்முடைய பரலோக பிதா உங்களுடைய தனிப்பட்ட முன்னியமனத்தை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறார், நீங்கள் அவருடைய சித்தத்தைக் கற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் முயலும்போது அவர் அதைச் செய்வார்.

இன்று மாலை, சபையின் இளைஞர்களிடம், அடுத்த தலைமுறைக்கு தரமானவர்களாக இருக்கும், வளர்ந்து வரும் வாலிபர்கள் மற்றும் இளம் பெண்களிடம் பேசுகிறேன்.

அக்டோபர் 2013 இல், நமது அன்பான தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன் அறிவித்தார்: “உங்கள் பரலோக பிதா உங்களை மிக நீண்ட காலமாக அறிந்திருக்கிறார். அவருடைய மகனாகவோ அல்லது மகளாகவோ நீங்கள், இந்த துல்லியமான நேரத்தில் பூமிக்கு வர, பூமியில் அவருடைய மகத்தான பணியில் ஒரு தலைவராக இருக்க அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.”1

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தலைவர் நெல்சன் தொடர்ந்தார்:

“தகுதியான, திறமையான ஒவ்வொரு இளைஞனையும் ஒரு ஊழியத்திற்கு ஆயத்தம் செய்து சேவை செய்யும்படி கர்த்தர் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதை இன்று நான் உறுதியாக உறுதிப்படுத்துகிறேன். பிற்காலப் பரிசுத்தவான் வாலிபர்களுக்கு, ஊழிய சேவை ஒரு ஆசாரியத்துவ பொறுப்பு. இஸ்ரவேலின் வாக்குத்தத்தத்தின் கூடுகை நடைபெறும் போது இந்தக் காலத்திற்காக வாலிபர்களாகிய நீங்கள், வைக்கப்பட்டிருக்கிறீர்கள். …

இளம் மற்றும் திறமையான சகோதரிகளாகிய உங்களுக்கு, ஒரு ஊழியம் என்பது ஒரு ஆற்றல்மிக்க, ஆனால் விருப்ப, வாய்ப்பாகும். … நீங்கள் ஒரு ஊழியத்தைச் செய்ய கர்த்தர் மனதுடையவராயிருக்கிறார் என்பதை அறிய ஜெபியுங்கள், பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்திற்கும் மனதிற்கும் பதிலளிப்பார்.”2

இஸ்ரவேலின் கூடுகையின் இந்த நேரத்தில் கர்த்தர் நம் நாளின் இளைஞர்களை இதற்காக வைத்திருப்பதைப் பற்றிய நமது தீர்க்கதரிசியின் குறிப்புகள் மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புவார் என்பதை அறிய ஜெபிக்க அவர் அழைத்தது, ஒரு பகுதியாக, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் உங்களை ஆசீர்வதிப்பதற்கான குறிப்புகள், நீங்கள் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பே தேவனிடமிருந்து பெறப்பட்டவை.3 இந்த பூமியில் பிறந்த நாம் அனைவரும் முதலில் நமது பரலோக பிதாவுடன் அவருடைய ஆவிக் குழந்தைகளாக வாழ்ந்தோம்.4 கர்த்தர் மோசேக்கு அறிவித்தார், “அவைகள் பூமி முழுவதன்மேல் இயற்கையாக இருந்ததற்கு முன்பாகவே, தேவனாகிய கர்த்தராகிய நான், நான் பேசிய சகல காரியங்களையும் ஆவியிலே சிருஷ்டித்தேன்.”5

அவர் உங்களை ஆவிக்குரிய விதமாக படைத்தபோது, அவர் உங்களைத் தம் ஆவி மகன்களாகவும், மகள்களாகவும் நேசித்தார், மேலும் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தெய்வீக இயல்பு மற்றும் நித்திய இலக்கைப் பதித்தார்.6

உங்கள் பூலோக வாழ்க்கையில், “நீங்கள் உங்கள் அடையாளத்தை வளர்த்துக் கொண்டீர்கள் மற்றும் உங்கள் ஆவிக்குரிய திறன்களை அதிகரித்தீர்கள்.”7 சுயாதீனத்தின் வரம், உங்களுக்காகத் தேர்வு செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டு நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டீர்கள், மேலும் பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் திட்டத்தைப் பின்பற்றுவதற்கான முடிவு போன்ற முக்கியமான முடிவுகளை எடுத்தீர்கள், அதாவது “மாம்ச சரீரம் பெற்று மற்றும் முன்னேற பூமிக்குரிய அனுபவத்தைப் பெறுவது. … இறுதியில் நித்திய ஜீவனின் வாரிசுகளாக [உங்கள்] தெய்வீக இலக்கை உணரவுமே.”8 இந்த தீர்மானம் உங்கள் வாழ்க்கையைப் பாதித்தது, உங்கள் பூலோக வாழ்க்கைக்கு முந்தைய வாழ்க்கையிலும், அது தொடர்ந்து இப்போதும் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறது.9 உங்கள் பரலோக வாழ்க்கைக்கு முந்தைய வாழ்க்கையில் வாழும் தேவனின் குழந்தையாக, நீங்கள் “புத்திசாலித்தனத்தில் வளர்ந்தீர்கள், சத்தியத்தை நேசிக்க கற்றுக்கொண்டீர்கள்.”10

நீங்கள் பிறப்பதற்கு முன்பே, பூமியில் உங்கள் பூலோக வாழ்வின் போது குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்ற தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் நியமித்தார்.11 நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், அந்த பூலோக வாழ்க்கைக்கு முந்தைய ஆணையின் ஆசீர்வாதங்கள், இந்த வாழ்க்கையில் எல்லா வகையான வாய்ப்புகளையும் பெற உங்களுக்கு உதவும், இதில் சபையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் இன்று பூமியில் நடக்கும் மிக முக்கியமான வேலையான இஸ்ரவேலின் கூடுகை உட்பட.12 அந்த பூலோக வாழ்க்கைக்கு முந்தைய வாக்குறுதிகள் மற்றும் ஆசீர்வாதங்கள் உங்களுடைய முன்னியமனம் என்று அழைக்கப்படுகின்றன. முன்னியமிக்கப்படும் கோட்பாடு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.13 நீங்கள் குறிப்பிட்ட அழைப்புகள் அல்லது பொறுப்புகளைப் பெறுவீர்கள் என்பதற்கு முன்னியமனம் உத்தரவாதம் அளிக்காது. இந்த ஆசீர்வாதங்களும் வாய்ப்புகளும் இந்த வாழ்க்கையில் உங்கள் நேர்மையான செயல்பாட்டின் விளைவாக வருகின்றன, உங்கள் பூலோக வாழ்க்கைக்கு முந்தைய வாழ்க்கையில் உங்கள் முன்னியமனம் நீதியின் விளைவாக வந்தது.14 நீங்கள் தகுதியானவர் மற்றும் உடன்படிக்கையின் பாதையில் முன்னேறும்போது, உங்கள் இளம் பெண்கள் வகுப்பில் அல்லது ஆசாரியத்துவக் குழுமத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் ஆலயத்தில் சேவை செய்யவும், ஊழியம் செய்யும் சகோதரனாக அல்லது சகோதரியாக ஆகவும், இயேசு கிறிஸ்துவின் சீடராக ஊழியம் செய்யவும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

உங்கள் முன்னியமனத்தை அறிந்து புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? கேள்விகள் அதிகமாக இருக்கும் ஒரு நாளில், பலர் அவர்களின் உண்மையான அடையாளத்தை அறிய முற்படும்போது, இந்த பூமியில் நாம் பிறப்பதற்கு முன்பே தேவன் நம் ஒவ்வொருவரையும் “அத்தியாவசியமான குணாதிசயம்[கள்] … பூலோக வாழ்கைக்கு முந்தைய, பூலோக மற்றும் நித்திய அடையாளம் மற்றும் நோக்கத்தை” அறிந்திருக்கிறார் மற்றும் ஆசீர்வதித்திருக்கிறார் என்பது நம் மனதுக்கும் இதயத்திற்கும் இனிமையான சமாதானத்தையும் உறுதியையும் தருகிறது.15 நீங்கள் யார் என்பதை அறிவது, நீங்கள் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பே உங்களுக்கு வழங்கிய தேவனின் முன்னியமிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் புரிந்துகொள்வதில் இருந்து தொடங்குகிறது. நம்முடைய பரலோக பிதா உங்களுடைய தனிப்பட்ட முன்னியமனத்தை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறார், நீங்கள் அவருடைய சித்தத்தைக் கற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் முயலும்போது அவர் அதைச் செய்வார்.16

தலைவர் நெல்சனின் இன்ஸ்டாகிராம் இடுகைகளை வாசிப்பதை விரும்புகிறேன். எனக்குப் பிடித்த ஒன்று ஜூலை 20, 2022 அன்று வந்தது. அவர் எழுதினார்:

“கர்த்தர் உங்களிடம் நேரடியாகப் பேசினால், உங்கள் உண்மையான அடையாளத்தை நீங்கள் புரிந்துகொள்வதை அவர் முதலில் உறுதிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். என் அன்பான நண்பர்களே, நீங்கள் உண்மையில் தேவனின் ஆவி குழந்தைகள். …

“… இதில் எந்த தவறும் செய்யாதீர்கள்: உங்கள் ஆற்றல் தெய்வீகமானது. உங்கள் கருத்தான தேடல் மூலம், நீங்கள் யாராகலாம் என்பதை தேவன் உங்களுக்குத் தருவார்.”17

எனது அடையாளத்தையும் தேவனின் திட்டத்தையும் என் வாழ்வில் கண்டறிய என் பூமிக்குரிய தகப்பன் எனக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?

எனக்கு 13 வயதாக இருந்தபோது ஒரு சனிக்கிழமை காலை, எனது வாராந்திர வேலைகளின் ஒரு பகுதியாக புல் வெட்டிக்கொண்டிருந்தேன். நான் முடித்ததும், எங்கள் வீட்டின் பின்புறம் கதவு மூடப்படும் சத்தம் கேட்டு, என் தந்தை என்னை அவருடன் சேர அழைப்பதைக் கண்டேன். நான் பின் தாழ்வாரத்துக்கு நடந்தேன், அவர் என்னை அவருடன் படிக்கட்டில் உட்கார அழைத்தார். அது ஒரு அழகான காலை. எங்கள் தோள்கள் தொடும் அளவுக்கு அவர் எனக்கு அருகில் அமர்ந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் என்னை நேசிப்பதாக சொல்லி ஆரம்பித்தார். வாழ்க்கையில் எனது இலக்குகள் என்ன என்று கேட்டார். நான் நினைத்தேன், “சரி, அது எளிது.” எனக்கு இரண்டு விஷயங்கள் உறுதியாகத் தெரியும்: நான் உயரமாக இருக்க விரும்பினேன், மேலும் அடிக்கடி முகாம் செல்ல விரும்பினேன். நான் ஒரு எளிய ஆத்துமா. அவர் புன்னகைத்து, சிறிது நேரம் நிறுத்திவிட்டு கூறினார்: “ஸ்டீவ், எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது பரலோக பிதா நான் இப்போது சொல்வதை உன் மனதிலும், உன் ஆத்துமாவிலும் அழியாமல் பதியச் செய்யும்படி நான் ஜெபித்தேன், அதனால் நீ ஒருபோதும் மறக்க முடியாது.”

அந்த நேரத்தில் என் தந்தைமீது என் முழு கவனமும் இருந்தது. அவர் திரும்பி என் கண்களைப் பார்த்து, “மகனே, உன் வாழ்க்கையின் தனிப்பட்ட நேரத்தைப் பாதுகாத்துக்கொள்” என்றார். அவர் அர்த்தத்தை என் இருதயத்தில் ஆழமாக பதிய விடும்போது ஒரு நீண்ட இடைநிறுத்தம் ஏற்பட்டது.

பின்னர் அவர் தொடர்ந்தார்: “உனக்குத் தெரியுமா, நீ மட்டும் அருகில் இருக்கும்போது நீ என்ன செய்கிறாய் என்பது வேறு யாருக்கும் தெரியாது? நான் இப்போது என்ன செய்தாலும் அது வேறு யாரையும் பாதிக்காது, என்னை மட்டும்தான் என்று நீ நினைக்கும் நேரங்கள்?

பின்னர் அவர் கூறினார், “உன் வாழ்க்கையில் வேறு எந்த நேரத்தையும் விட, உன் வாழ்க்கையின் தனிப்பட்ட காலங்களில் நீ என்ன செய்கிறாயோ, அது நீ எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மனவேதனைகளை எவ்வாறு எதிர்கொள்கிறாய் என்பதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; உன் வாழ்க்கையின் தனிப்பட்ட காலங்களில் நீ என்ன செய்கிறாயோ, அது உன் வாழ்க்கையில் வேறு எந்த நேரத்தையும் விட நீ அனுபவிக்கும் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் கூட நீ எவ்வாறு எதிர்கொள்கிறாய் என்பதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.”

என் தந்தை தனது இருதயத்தின் விருப்பத்தைப் பெற்றார். அவருடைய குரலின் ஒலியும், கதகதப்பும், அவருடைய வார்த்தைகளில் நான் உணர்ந்த அன்பும், அன்று என் மனதிலும், உள்ளத்திலும் அழியாமல் பதிந்துவிட்டன.

என்னுடைய சிறுவயது வீட்டுப் படிக்கட்டுகளில் அன்று நடந்த மிகப் பெரிய அதிசயம் என்னவெனில், என்னுடைய வாழ்க்கையின் தனிப்பட்ட காலங்களில், வெளிப்பாட்டைப் பெறுவதற்காக நான் ஜெபத்தில் தேவனிடம் செல்ல முடியும் என்பதை நான் பல ஆண்டுகளாகக் கற்றுக்கொண்டேன். தேவனின் முன்னியமிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பற்றி நான் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என்பதை என் தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார். அந்த தனிப்பட்ட தருணங்களில், மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தை என்பதை நான் கற்றுக்கொண்டேன். ஒரு பணியைச் செய்ய தேவன் என்னை முன்னியமித்துள்ளார் என்பதை நான் அறிந்தேன். தேவன் என்னை அறிந்திருக்கிறார், என் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார் என்பதை நான் கற்றுக்கொண்டேன். இயேசு கிறிஸ்து, நமது இரட்சகர் மற்றும் மீட்பர் என்பதை நான் அறிந்தேன்.

என் தந்தையுடனான அந்த மறக்கமுடியாத நாளிலிருந்து நான் பல தவறுகளைச் செய்திருந்தாலும், எனது வாழ்க்கையின் தனிப்பட்ட நேரத்தைப் பாதுகாக்கும் முயற்சி, வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியில் ஒரு நங்கூரமாக இருந்து, பாதுகாப்பான புகலிடத்தையும், நமது இரட்சகரின் அன்பு மற்றும் பாவநிவாரண பலி பலப்படுத்தும் ஆசீர்வாதங்களையும் பெற எனக்கு உதவியது.

எனது இளைய சகோதர சகோதரிகளே, உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட நேரத்தை ஆரோக்கியமான பொழுதுபோக்குடன் பாதுகாத்து, உற்சாகமூட்டும் இசையைக் கேட்பது, வேதங்களைப் படிப்பது, தவறாமல், அர்த்தமுள்ள ஜெபம் செய்வது, உங்கள் கோத்திர பிதா ஆசீர்வாதத்தைப் பெறவும் சிந்திக்கவும் முயற்சிப்பதால், நீங்கள் வெளிப்பாட்டைப் பெறுவீர்கள். தலைவர் நெல்சனின் வார்த்தைகளில், உங்கள் கண்கள் “ இந்த வாழ்க்கையின் உண்மை, மற்றும் நீங்கள் எந்த மாதிரியான வாழ்க்கையை என்றென்றும் வாழ விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க” விரிவடையும்.18

பரலோகத்திலுள்ள நமது பிதா, குறிப்பாக உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட காலங்களில் செய்யப்படும் உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பார். உங்கள் முன்னியமிக்கப்பட்ட வரங்களையும் திறமைகளையும் அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார், மேலும் நீங்கள் உண்மையாகக் கேட்டு தெரிந்துகொள்ள விரும்பினால், அவருடைய அன்பு உங்களைச் சூழ்ந்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட நேரத்தை நீங்கள் பாதுகாக்கும்போது, சுவிசேஷத்தின் நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் உங்கள் பங்கேற்பு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நீங்கள் அவருடன் செய்துகொள்ளும் உடன்படிக்கைகளில் நீங்கள் இன்னும் முழுமையாக அவரைப் பிணைத்துக் கொள்வீர்கள், மேலும் அவர் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் அதிக நம்பிக்கை, விசுவாசம் மற்றும் உறுதியைப் பெற நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். உங்களுக்கான தேவனின் திட்டத்தை அறிய விரும்புகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், மேலும் இந்த கண் திறக்கும் அனுபவத்தை நமக்காக ஜெபிக்கவும் பெறவும் நம் ஒவ்வொருவரையும் அழைக்கும்படி அவர் தனது தீர்க்கதரிசி உலகிற்கு உணர்த்த விரும்புகிறார் என்று நான் சாட்சி கூறுகிறேன்.19 தேவனின் முன்னியமிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழுவதை சாத்தியமாக்குகிற, நம்முடைய இரட்சகரின் பாவநிவாரண பலியின் உண்மை மற்றும் வல்லமைக்கு நான் சாட்சியாக இருக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Decisions for Eternity,” Liahona, Nov. 2013, 107.

  2. Russell M. Nelson, “Preaching the Gospel of Peace,” Liahona, May 2022, 6.

  3. See Russell M. Nelson, “Hope of Israel” (worldwide youth devotional, June 3, 2018), Gospel Library: “நம்முடைய பரலோக பிதா அவருடைய உன்னதமான பல ஆவிகளை—ஒருவேளை, அவருடைய மிகச்சிறந்த குழு என்று சொல்லலாம்—இந்த இறுதிக் கட்டத்திற்காக ஒதுக்கியுள்ளார். அந்த உத்தமமான ஆவிகளான, அந்த அருமையான வீரர்கள், அந்த கதாநாயகர்கள், நீங்கள்!!”

  4. எரேமியா 1:5 பார்க்கவும்.

  5. மோசே 3:5.

  6. See “The Family: A Proclamation to the World,” Gospel Library; “Young Women Theme,” Gospel Library; “Aaronic Priesthood Quorum Theme,” Gospel Library.

  7. Topics and Questions, “Premortal Life: Overview,” Gospel Library.

  8. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” Gospel Library.

  9. ஆல்மா 13:1–4 பார்க்கவும்.

  10. Topics and Questions, “Premortal Life: Overview,” Gospel Library; see also Doctrine and Covenants 138:55–56.

  11. See Topics and Questions, “Foreordination,” Gospel Library.

  12. Russell M. Nelson, “Hope of Israel” பார்க்கவும்.”

  13. Topics and Questions, “Foreordination,” Gospel Library; see also Jeremiah 1:5; “What Is the Relationship between Foreordination and Agency?,” Liahona, Oct. 2023, 47; Guide to the Scriptures, “Foreordination,” Gospel Library.

  14. ஆல்மா 13:1-4; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:20. பார்க்கவும்.

  15. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” Gospel Library.

  16. எரேமியா 1:5 பார்க்கவும்.

  17. Russell M. Nelson, Instagram, July 20, 2022, Instagram.com/russellmnelson.

  18. Russell M. Nelson, “Choices for Eternity” (worldwide devotional for young adults, May 15, 2022), Gospel Library.

  19. See Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 93–96.