பொது மாநாடு
இது நமது நேரம்!
ஏப்ரல் 2021 பொது மாநாடு


இது நமது நேரம்!

வரலாற்றில் இந்த முக்கியமான நேரத்தில், இப்போது, தேவன் நம்மை இங்கே அனுப்பியுள்ளார்.

1978 ஆம் ஆண்டில், 65,000 ரசிகர்கள் நிறைந்த அரங்கத்தில் ஒரு கால்பந்து மைதானத்தில் நான் நின்றேன். எனக்கு முன்னால் மிக பெரிய எதிர் போட்டியாளர்கள் இருந்தனர், அவர்கள் என் தலையை எடுக்க விரும்புவதைப் போல தோற்றமளித்தனர். தேசிய கால்பந்து லீக்கில் தொடக்க குவாட்டர்பேக்காக இது எனது முதல் ஆட்டம், நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் சூப்பர் போவுல் சாம்பியன்களாக விளையாடிக் கொண்டிருந்தோம். உண்மையைச் சொல்வதானால், நான் களத்தில் இருப்பதற்கு தகுதியானவனா என்று கேள்வி எழுப்பினேன். எனது முதல் பந்தை வீச நான் பின்வாங்கினேன், நான் பந்தைவீசியபோது, நான் முன்பு தாக்கப்பட்டதை விட கடுமையாக தாக்கப்பட்டேன். அந்த நேரத்தில், அந்த பலசாலியான விளையாட்டு வீரர்களின் குவியலின் கீழ் படுத்து, நான் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று யோசித்தேன். நான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியவனாயிருந்தேன். என் சந்தேகங்கள் என்னை மேற்கொள்ள நான் விடுவேனா, அல்லது எழுந்து தொடர்ந்து விளையாட எனக்கு தைரியமும் பலமும் கிடைக்குமா?

படம்
முதல் கடப்பு

தொடர்புடைய ஊடகம்

எதிர்கால வாய்ப்புகளுக்கு இந்த அனுபவம் என்னை எவ்வாறு தயார்படுத்தும் என்பதை நான் அப்போது உணரவில்லை. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் நான் பலமாகவும் தைரியமாகவும் இருக்க முடியும் என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் போல ஒரு கால்பந்து விளையாட்டு கிட்டத்தட்ட முக்கியமானதாக இருக்காது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மக்கள் நிறைந்து, பார்க்கும் அரங்கமாக இருக்காது. ஆனால் உங்கள் துணிவுமிக்க தீர்மானங்களுக்கு நித்திய முக்கியத்துவம் இருக்கும்.

ஒருவேளை நாம் எப்போதும் சவாலை உணராதிருக்கலாம். ஆனால், அவருடைய ராஜ்யத்தை பயமில்லாது கட்டுபவர்களாக நமது பரலோக பிதா, நம்மைப் பார்க்கிறார். அதனால்தான் உலக வரலாற்றில் மிக தீர்க்கமான இந்த நேரத்தில் அவர் நம்மை இங்கு அனுப்பினார். இது நமது நேரம்!

சபையின் தலைவரான சிறிது நேரத்திலேயே தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினதைக் கேளுங்கள்: “நம்முடைய இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து, இப்போதும், அவர் மீண்டும் வரும்போதும் அவருடைய பராக்கிரமமான பணிகளைச் செய்வார். பிதாவாகிய தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் இந்த சபையை கம்பீரத்திலும் மகிமையிலும் தலைமை தாங்குகிறார்கள் என்ற அற்புதமான அறிகுறிகளை நாம் காண்போம்” (“Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 96).

பராக்கிரமமான பணிகள்? அற்புதமான அறிகுறிகள்? அது எதைப் போலிருக்கும்? நாம் என்ன பங்கு வகிப்போம், என்ன செய்வது என்று எவ்வாறு நாம் புரிந்துகொள்வோம்? எல்லா பதில்களும் எனக்குத் தெரியாது, ஆனால் நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும் என தேவன் விரும்புகிறார் என்பதை நான் அறிவேன்! ஆசாரியத்துவ வல்லமையை தகுதியாக பயன்படுத்துவது எப்போதும் மிக முக்கியமானதாயிருந்ததில்லை.

தேவனின் தீர்க்கதரிசியை நாம் நம்புகிறோமா? நமது இலக்கை நாம் கண்டுபிடித்து நிறைவேற்ற முடியுமா? ஆம், நம்மால் முடியும், ஆம் நாம் செய்யவேண்டும், ஏனெனில் இது நமது நேரம்!

நமக்கு முன்வந்த, மோசே, மரியாள், மரோனி, ஆல்மா, எஸ்தர், ஜோசப் மற்றும் பலரைப் போன்ற தேவனின் வலிமைமிக்க ஊழியர்களின் கதைகளைக் கேட்கும்போது, வாழ்க்கையை விட அவர்கள் பெரியவர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் அவர்கள் நம்மிலிருந்து வேறுபட்டவர்களாய் இருந்ததில்லை. அவர்கள் சவால்களை எதிர்கொண்ட சாதாரணமான மனிதர்கள். அவர்கள் கர்த்தரை நம்பினார்கள். முக்கியமான நேரங்களில் அவர்கள் சரியான தேர்ந்தெடுப்புகளைச் செய்தார்கள். அவர்களுடைய நேரத்தில் தேவையான வேலைகளை இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் அவர்கள் செய்தார்கள்.

படம்
தீர்க்கதரிசி யோசுவா

நல்லஉப்பு

பழைய ஏற்பாட்டு வீரன் யோசுவாவை கருத்தில் கொள்ளுங்கள். சரித்திரத்தில் பெரிய தலைவர்களில் ஒருவனான அவன் மோசேயின் அர்ப்பணிப்புடன் பின்பற்றுபவனாக இருந்தான். மோசே போன பின்பு, அது யோசுவாவின் நேரம். இஸ்ரவேல் புத்திரரை வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு அவன் நடத்திச் செல்லவேண்டும். அவன் அதை எப்படிச் செய்வான்? யோசுவா எகிப்தில் அடிமைத்தனத்தில் பிறந்து வளர்க்கப்பட்டான். அவனுக்கு உதவ அவனிடம் கையேடு அல்லது அறிவுறுத்தல் காணொலிகள் எதுவும் இல்லை. அவனிடம் ஸ்மார்ட்போன் கூட இல்லை! ஆனால் அவன் கர்த்தரிடமிருந்து இந்த வாக்குறுதியைப் பெற்றான்:

“நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

“பலங்கொண்டு திடமனதாயிரு” (யோசுவா 1:5–6).

நான் ஒரு புதிய மற்றும் அனுபவமற்ற எழுபதின்மராக இருந்தபோது, மருத்துவமனையில் ஒரு இளைஞனை உடனடியாகப் பார்ப்பதில் நான் தீர்க்கதரிசியின் பிரதிநிதியாக இருக்கலாமா என்று கேட்டு, பிரதான தலைமை அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த இளைஞனின் பெயர் சாக். அவன் ஒரு ஊழியக்காரனாக இருக்க தயாராகிக் கொண்டிருந்தான், ஆனால் ஒரு விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்தான்.

நான் மருத்துவமனைக்கு வண்டி ஓட்டிச்சென்றபோது, என் மனம் மிக வேகமாக ஓடியது. தீர்க்கதரிசியின் ஒரு பணி, நீங்கள் கேலி செய்கிறீர்களா? நான் எதை சந்திக்கப் போய்க்கொண்டிருக்கிறேன்? இந்த இளைஞனுக்கு நான் எவ்வாறு உதவப் போகிறேன்? எனக்கு போதுமான விசுவாசமிருக்கிறதா? தீவிர ஜெபமும் பரிசுத்த ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தைப்பற்றி நான் பெற்றிருந்த அறிவும் என் நங்கூரங்களாக மாறின.

நான் வந்து சேர்ந்தபோது மருத்துவமனை படுக்கையில் சாக் படுத்திருந்தான். டாக்டர்கள் அவனது மூளையில் உள்ள அழுத்தத்தை குறைக்கும்படியாக, அறுவை சிகிச்சை அறைக்கு அவனை விரைவாகக் கொண்டு செல்ல ஒரு வயதான நபர் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தார். கண்ணீர் மல்கி நின்றிருந்த அவனது தாயையும், பயத்துடன் அருகில் நின்றிருந்த ஒரு இளம் நண்பனையும் நான் பார்த்தேன், சாக்குக்கு ஒரு ஆசாரியத்துவ ஆசீர்வாதம் தேவை என்பதை நான் தெளிவாக அறிந்தேன். அவனது நண்பன் சமீபத்தில் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெற்றிருந்தான், எனவே எனக்கு உதவுமாறு அவனிடம் கேட்டேன். சாக்குக்கு ஒரு ஆசீர்வாதத்தை நாங்கள் தாழ்மையுடன் கொடுத்தபோது ஆசாரியத்துவத்தின் வல்லமையை நான் உணர்ந்தேன். பின்னர் அவன் அறுவை சிகிச்சைக்காக அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டான், இரட்சகர் அவனுடைய ஞானத்திற்கு ஏற்ப காரியங்களை கையாள்வார் என்பதை ஒரு அமைதியான உணர்வு உறுதிப்படுத்தியது.

ஆரம்ப அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு மருத்துவ ஊழியர்கள் கடைசியாக ஒரு எக்ஸ்ரே எடுத்தனர். எந்த ஒரு அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்பதை அவர்கள் ஆச்சரியமாக கண்டுபிடித்தார்கள்.

அதிக சிகிச்சைக்குப் பின்னர் சாக் மீண்டும் நடக்கவும் பேசவும் கற்றுக்கொண்டான். அவன் ஒரு வெற்றிகரமான ஊழியம் செய்தான், இப்போது ஒரு அழகான குடும்பத்தை வளர்த்து வருகிறான்.

நிச்சயமாக, அதுவே எப்போதும் விளைவாகாது. சமமான விசுவாசத்துடன் பிற ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை நான் வழங்கியுள்ளேன், இந்த வாழ்க்கையில் கர்த்தர் முழுமையான குணப்படுத்துதலை வழங்கவில்லை. அவருடைய நோக்கங்களை நாம் நம்புகிறோம், விளைவுகளை அவரிடம் விட்டுவிடுகிறோம். நமது செயல்களின் முடிவை நம்மால் எப்போதும் தேர்ந்தெடுக்க முடியாது, ஆனால் செயல்படத் தயாராக இருப்பதை நாம் தேர்ந்தெடுக்கலாம்.

உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலையில், பிரதான தலைமைக்கு பிரதிநிதியாயிருக்க அவர்களால் நீங்கள் ஒருபோதும் கேட்கப்படமாட்டீர்கள். ஆனால் வாழ்க்கையை மாற்றும் காரியங்களைச் செய்ய நாம் அனைவரும் கர்த்தருடைய பிரதிநிதிகளாக அழைக்கப்படுகிறோம். அவர் நம்மைக் கைவிடமாட்டார். இது நமது நேரம்!

இயேசு தண்ணீரில் நடப்பதைக் கண்ட இரட்சகரின் தலைமை அப்போஸ்தலனாகிய பேதுரு கடலில், படகில் இருந்தான். அவருடன் சேர அவன் விரும்பினான், இரட்சகர் சொன்னார், “வா.” தைரியமாகவும், அற்புதமாகவும், பேதுரு படகின் பாதுகாப்பை விட்டுவிட்டு இரட்சகரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால் பேதுரு கடுமையான காற்றில் கவனம் செலுத்தியபோது, அவனுடைய விசுவாசம் தடுமாறியது. “அவன் பயந்தான்; அவன் மூழ்கத் தொடங்கி, “ஆண்டவரே, என்னை ரட்சியும்” என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்தார்.” (மத்தேயு 14:22–33 பார்க்கவும்.)

படம்
இயேசு அணுகுதல்

நமது வாழ்க்கையில் புயல் வீசும்போது நமது கவனம் எங்கே இருக்கிறது? நினைவில் கொள்ளுங்கள், வலிமை மற்றும் தைரியத்தின் நம்பகமான ஆதாரங்கள் எப்போதும் உள்ளன. அவைகள் பேதுருவிடம் நீட்டப்பட்டதைப்போலவே இயேசுவின் கரங்கள் நமக்கு நீட்டப்படுகின்றன. நாம் அவரிடம் வந்தடையும்போது, அவர் அன்பாக நம்மை ரட்சிப்பார். நாம் அவருடையவர்கள். அவர் சொன்னார், “பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன்” (ஏசாயா 43:1). அவரை நீங்கள் அனுமதித்தால், உங்கள் வாழ்க்கையில் அவர் ஜெயங்கொள்ளுவார். தேர்ந்தெடுப்பு உங்களுடையது. (Russell M. Nelson, “Let God Prevail,” Liahona, Nov. 2020, 92–95 பார்க்கவும்.)

அவனுடைய வாழ்வின் முடிவில் யோசுவா அவனுடைய ஜனங்களிடத்தில் வேண்டிக்கொண்டான், “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள் … நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15). கர்த்தருக்குச் சேவை செய்ய அவன் செய்த தேர்ந்தெடுப்புகளினால், யோசுவா அவனுடைய காலத்தில் ஒரு சிறந்த தலைவரானான். என்னுடைய அன்பான நண்பர்களே, இது நமது நேரம்! நமது தேர்ந்தெடுப்புகள் நமது இலக்கைத் தீர்மானிக்கும் (Thomas S. Monson, “Decisions Determine Destiny” [Brigham Young University fireside, Nov. 6, 2005], speeches.byu.edu பார்க்கவும்).

ஆயராக நான் சேவை செய்துகொண்டிருந்தபோது, எங்கள் தொகுதியில் எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது: நல்ல தேர்ந்தெடுப்புகள் நித்தியமாக சந்தோஷத்திற்கு சமமானதாயிருக்கிறது. அரங்கத்தில் என்னைக் கடந்துபோகும்போது இளைஞர்கள் சொல்வார்கள், “ஆயரே, நான் நல்ல தேர்ந்தெடுப்புகளைச் செய்துகொண்டிருக்கிறேன்!” அதுதான் ஒரு ஆயரின் கனவு!

“நல்ல தேர்ந்தெடுப்புகள்” என்பது நமக்கு என்ன அர்த்தமாகிறது? ஒருமுறை ஒருவன் இயேசுவைக் கேட்டான், “நியாயப்பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானது?” அவர் பதிலளித்தார்:

“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.

“இது முதலாம் பிரதான கற்பனை.

“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத்தேயு 22: 37–39).

உங்களைப்பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் இந்த இரண்டு பெரிய கட்டளைகளையும் நான் படிக்கும்போது, மூன்றாவது, மறைமுகமான கட்டளையை நான் கண்டறிகிறேன்: உங்களை நேசிக்க வேண்டும்.

உங்களை நேசிப்பதை ஒரு கட்டளையாக நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? நாம் நம்மையே நேசிக்காவிட்டால், நாம் உண்மையிலேயே தேவனையும் அவருடைய பிள்ளைகளையும் நேசிக்க முடியுமா?

பல ஆண்டுகளாக அழிவுக்கேதுவான தேர்ந்தெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு ஒரு புத்திசாலியான தலைவர் சமீபத்தில் ஆலோசனையளித்தார். அவன் யாருடைய அன்பிற்கும் தகுதியானவனா என்று சந்தேகித்து அந்த மனிதன் வெட்கப்பட்டான்.

அவனுடைய தலைவர் அவனை நோக்கி, “கர்த்தர் உன்னை அறிகிறார், உன்னை நேசிக்கிறார், உன்னிடமும், நீ எடுக்கும் தைரியமான நடவடிக்கைகளிலும் மகிழ்ச்சி அடைகிறார்.” ஆனால் பின்னர் அவர் மேலும் கூறினார், “[உங்களை] நேசிக்க வேண்டும் என்ற கட்டளையை நீங்கள் கேட்க வேண்டும், இதனால் நீங்கள் [தேவனின்] அன்பை உணரமுடியும், மற்றவர்களையும் நேசிக்க முடியும்.”

இந்த சகோதரன் அந்த ஆலோசனையைக் கேட்டபோது, புதிய கண்களுடன் அவன் வாழ்க்கையைப் பார்த்தான். பின்னர் அவன் சொன்னான், “சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளுதலையும் காண முயற்சிப்பதில் நான் என் முழு வாழ்க்கையையும் செலவழித்தேன். பல தவறான இடங்களில் நான் அந்த காரியங்களைத் தேடினேன். பரலோக பிதா மற்றும் இரட்சகரின் அன்பில் மட்டுமே எனக்கு ஆறுதல் கிடைக்கும். நான் என்னை நேசிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியும்; உண்மையில் என்மீது அவர்களின் அன்பை உணர ஒரே வழி இதுதான்.”

நம்மையே நாம் நேசிக்க நம்முடைய பரலோக பிதா விரும்புகிறார், பெருமை அல்லது சுயநலவாதியாக மாறாமல், ஆனால் அவருடைய நேசத்துக்குரிய பிள்ளைகளான நம்மை அவர் பார்ப்பதைப்போல பார்க்க விரும்புகிறார். இந்த உண்மை நம் இருதயங்களில் ஆழமாக மூழ்கும்போது, தேவன்மீது நம்முடைய அன்பு வளர்கிறது. நாம் நம்மை நேர்மையான மரியாதையுடன் பார்க்கும்போது, மற்றவர்களையும் அதே வழியில் நடத்த நம் இருதயங்கள் திறந்திருக்கும். நம்முடைய தெய்வீக மதிப்பை நாம் எவ்வளவு அதிகமாக அங்கீகரிக்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக இந்த தெய்வீக உண்மையை நாம் புரிந்துகொள்கிறோம்: நம்மிடம் இருக்கும் திறமைகள் மற்றும் வரங்களுடன் மிகச் சிறந்த சாத்தியமான நன்மைகளைச் செய்ய முடியும்படியாக, வரலாற்றில் இந்த முக்கியமான நேரத்தில், இப்போதே, தேவன் நம்மை இங்கே அனுப்பியுள்ளார். இது நமது நேரம்! (Russell M. Nelson, “Becoming True Millennials” [worldwide devotional for young adults, Jan. 10, 2016], broadcasts.ChurchofJesusChrist.org பார்க்கவும்).

ஒவ்வொரு தீர்க்கதரிசியும், ஒவ்வொரு யுகத்திலும், “நாம் வாழும் நாளுக்கு மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்திருந்து; … அவர்கள் நமது நாளைப் பாடி, எழுதி, தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்கள்; … பிற்கால மகிமையைக் கொண்டுவர தேவன் [தேர்ந்தெடுத்த] விரும்பிய மக்கள் நாம்” என ஜோசப் ஸ்மித் போதித்தார் (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 186).

உங்கள் அன்றாட சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது, மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் வழங்கிய இந்த நிச்சயத்தை நினைவில் கொள்ளுங்கள்: “நமது தோள்களில் அதிகமாய் இருக்கிறது, ஆனால் அது ஒரு மகிமையான, வெற்றிகரமான அனுபவம். … இந்த இறுதி போட்டியில் வெற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி ஏற்கனவே பதிவு புத்தகங்களான வேதங்களில் உள்ளன!” (“Be Not Afraid, Only Believe” [address to Church Educational System religious educators, Feb. 6, 2015], broadcasts.ChurchofJesusChrist.org).

இரட்சகர் மீண்டும் வரும்போது, அந்த மகிமையான நாளுக்காக நாம் தயாராகும் போது, நம்முடைய தனிப்பட்ட பாத்திரங்களை அடையாளம் காணவும், தழுவிக்கொள்ளவும் நாம் அனைவரும் ஜெபிக்க, இந்த அழகான ஈஸ்டர் வாரக்கடைசியில் நான் ஒரு அழைப்பைக் கொடுக்கிறேன். நாம் புரிந்துகொள்ளக்கூடியதை விட அதிகமாக கர்த்தர் நம்மை நேசிக்கிறார், நம்முடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பார்! நாம் ஒரு கால்பந்து மைதானத்திலோ, மருத்துவமனை அறையிலோ, அல்லது வேறு எந்த இடத்திலிருந்தாலும், இந்த விசேஷமான நிகழ்வுகளில் நாம் ஒரு முக்கிய அங்கமாக இருக்க முடியும், ஏனெனில் இது நமது நேரம்! இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.