பொது மாநாடு
சத்திரத்தில் இடம்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


சத்திரத்தில் இடம்

இந்த ஈஸ்டர் காலத்தில், அவரைப் போல மாறவும், அவருடைய சத்திரத்தை (அவருடைய சபை) அனைவருக்கும் அடைக்கலமாக மாற்றும்படி ஒரு நல்ல சமாரியனாக மாறவும், இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார் என்றாலும், நான் என் தகப்பனை தேடும் நேரங்கள் உள்ளன. நான் அவரை மீண்டும் பார்ப்பேன் என ஈஸ்டர் வாக்களிக்கிறது.

இங்கிலாந்தில் கல்லூரியில் நான் படித்தபோது, என் தகப்பன் என்னை சந்திக்க வருகை தந்தார். நான் வீட்டாரைத் தேடுவது அவரது தகப்பனின் இருதயம் அறிந்திருந்தது.

என் தகப்பன் உணவையும் சாகசத்தையும் விரும்பினார். சமையலுக்கு பேர்போன பிரான்சில் கூட, அவர், “சீன உணவை சாப்பிடுவோம்” என்று கூறுவார். சபையில் நீண்ட காலமாக கோத்திரப் பிதாவாக ஊழியம் செய்த என் தகப்பன் ஆவிக்குரிய மற்றும் ஆழ்ந்த இரக்கமுள்ளவர். ஒரு இரவு, பாரிஸ் வழியாக உரத்த சைரன்களுடன் கூடிய அவசர வாகனங்கள் ஓடியபோது, “கெரிட், அந்த அழுகுரல்கள் ஒரு நகரத்தின் காயங்கள்” என்று கூறினார்.

அந்த பயணத்தில், மற்ற அழுகுரல்களையும் காயங்களையும் உணர்ந்தேன். ஒரு இளம் பெண் ஒரு சிறிய தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து கொண்டிருந்தாள். அவளது ஐஸ்கிரீம் கூம்புகள் ஒரு கரண்டி அளவு மட்டுமே இருந்தது. சில காரணங்களால், ஒரு பெரிய மனிதன் அந்த இளம் பெண்ணுக்கு எதிரே வந்தான். கத்தி, தள்ளி, அவன் அவள் வண்டியின் மேல் விழுந்து, அவளது ஐஸ்கிரீம் கூம்புகளை கீழே கொட்டினான். அவன் தனது பூட்ஸால் கூம்புகளை நசுக்கியதைப் பார்த்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த இளம்பெண் தெருவில் முழங்காலில் நின்று, உடைந்த பிஸ்கட் துண்டுகளை காப்பாற்ற முயற்சித்து, வேதனையின் கண்ணீர் அவள் முகத்தின் கீழே ஓடுவதை என்னால் இன்னும் காண முடிகிறது. அவளுடைய உருவம் என்னை துன்புறுத்துகிறது, அநாகரிகத்தின், அக்கறையற்றதின், தவறாகப் புரிந்துகொள்வதின் நினைவூட்டுதல், நாமும் அடிக்கடி ஒருவருக்கொருவர் இதை சுமத்துகிறோம்.

மற்றொரு பிற்பகலில், பாரிஸுக்கு அருகில், நானும் எனது தகப்பனும் சார்ட்ரஸில் உள்ள பெரிய கதீட்ரலைப் பார்வையிட்டோம். கதீட்ரலில் உலகப்புகழ் பெற்ற நிபுணரான1 மால்கம் மில்லர், மூன்று செட் சார்ட்ரெஸ் படிந்த கண்ணாடி ஜன்னல்களை சுட்டிக்காட்டினார். அவைகள் ஒரு கதையைச் சொல்லுகின்றன என்றார்.

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறுவதை முதல் ஜன்னல்கள் காட்டுகின்றன.

நல்ல சமாரியனின் உவமையை இரண்டாவது ஜன்னல்கள் விவரிக்கின்றது.

மூன்றாவது கர்த்தரின் இரண்டாம் வருகையை சித்தரிக்கிறது.

இவற்றை ஒன்றாக எடுத்துக்கொண்டால், இந்த கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள் நம் நித்திய பயணத்தை விவரிக்கின்றன. அவருடைய சத்திரத்தில் இடத்துடன் அனைவரையும் வரவேற்க அவர்கள் நம்மை அழைக்கிறார்கள். 2

படம்
சாட்ரெஸ் கத்தீடரலில் ஜன்னல்

iStock.com/digitalimagination

ஆதாமையும் ஏவாளையும் போலவே, நாமும் முட்செடிகள் மற்றும் முட்பூண்டுகள் நிறைந்த உலகத்திற்கு வருகிறோம்3

படம்
சாட்ரெஸ் கத்தீடரலில் ஜன்னல்

iStock.com/digitalimagination

எரிகோவிற்குப் போகிற நாமும் தூசி நிறைந்த சாலைகளில், நாங்கள் மூழ்கி, காயமடைந்து, வேதனையுடன் இருக்கிறோம்.4

நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்றாலும், பெரும்பாலும் நாம் எதாவது காரணத்திற்காக சாலையின் மறுபுறம் செல்கிறோம்.

ஆயினும், நல்ல சமாரியன் நின்று இரக்கத்துடன், எங்கள் காயங்கள்மீது திராட்சை ரசத்துடனும் எண்ணெயுடனும் கட்டுகிறான். திருவிருந்தின் அடையாளங்கள் மற்றும் பிற நியமங்கள், திராட்சை ரசம், எண்ணெய் ஆகியவை, இயேசு கிறிஸ்துவில் ஆவிக்குரிய குணப்படுத்துதலுக்கு நம்மை சுட்டிக்காட்டுகின்றன.5 நல்ல சமாரியன் நம்மை தனது சொந்த கழுதை மீது வைக்கிறார் அல்லது சில கறை படிந்த கண்ணாடி குறிப்புகளில், நம்மை அவரது தோள்களில் சுமக்கிறார். அவருடைய சபையை, பிரதிபலிக்கிற சத்திரத்திற்கு அவர் நம்மைக் கொண்டு வருகிறார். சத்திரத்தில் நல்ல சமாரியன் சொல்கிறான், “நீ இவனை விசாரித்துக்கொள், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன்”6 நமது இரட்சகரின் ஒரு அடையாளமான, நல்ல சமாரியன், இம்முறை கம்பீரத்திலும் மகிமையிலும்திரும்பி வருவதாக, வாக்களிக்கிறான்.

படம்
சாட்ரெஸ் கத்தீடரலில் ஜன்னல்

iStock.com/digitalimagination

இந்த ஈஸ்டர் காலத்தில் அவரைப் போலாகவும், வாழ்க்கையின் காயங்கள் மற்றும் புயல்களிலிருந்து அனைவருக்கும் ஒரு அடைக்கலமாக அவருடைய சத்திரத்தை (அவருடைய சபை) மாற்றுவதற்காக இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்7 நாம் அவருக்கு செய்வதைப்போல “இந்த சிறியவர்களுக்கு” நாம் தினமும் செய்வதைப்போல, அவருடைய வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டாம் வருகைக்கு நாம் ஆயத்தமாகிறோம்.8 “இந்தச் சிறியவர்கள்” நாம் ஒவ்வொருவருமே.

நல்ல சமாரியனுடன் சத்திரத்திற்கு நாம் வரும்போது, இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் நம்மைப்பற்றியும் ஐந்து காரியங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்.

முதலாவதாக, நாம் ஒவ்வொருவரிடமும் இருக்கிற பெலவீனங்கள் மற்றும் குறைபாடுகளுடன், நாம் இருக்கிறதைப் போலவே நாம் சத்திரத்திற்கு வருகிறோம். ஆனாலும், நம் அனைவருக்கும் ஏதாவது பங்களிப்பு தேவை. தேவனுக்கான நமது பயணம் பெரும்பாலும் ஒன்றாகக் காணப்படுகிறது. தொற்றுநோய்கள், புயல்கள், காட்டுத் தீ, வறட்சி, அல்லது அன்றாட தேவைகளை அமைதியாக எதிர்கொண்டாலும் நாம் ஒன்றுபட்ட சமூகமாகவே இருக்கிறோம். ஒவ்வொரு சகோதரியையும், பரிசுத்த ஆவியையும் சேர்த்து, ஒவ்வொருவரின் குரலையும் கேட்டு நாம் ஒன்றாக ஆலோசிக்கும்போது, நாம் உணர்த்துதலைப் பெறுகிறோம்.

நம்முடைய இருதயங்கள் மாறும்போது, அவருடைய சாயலை நம் முகரூபத்தில் நாம் பெறுகிறோம், 9 நாம் அவரையும் நம்மையும் அவருடைய சபையில் காண்கிறோம். அவரிடத்தில், அதிருப்தியை அல்ல, தெளிவைக் காண்கிறோம். அவரிடத்தில், நன்மை செய்வதற்கான காரணத்தையும், நல்லவராக இருப்பதற்கான காரணத்தையும், சிறந்தவர்களாக மாறுவதற்கான திறனையும் நாம் காண்கிறோம். அவரிடத்தில், நிலையான விசுவாசத்தையும், தன்னலமற்றதை விடுவிப்பதையும், அக்கறையுள்ள மாற்றத்தையும், தேவன்மீது நம்பிக்கையையும் கண்டுபிடிக்கிறோம். அவருடைய சத்திரத்தில், நம்முடைய பிதாவாகிய தேவனுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நம்முடைய தனிப்பட்ட உறவைக் கண்டுபிடித்து ஆழப்படுத்துகிறோம்.

அது அவருக்கு தேவைப்படுகிற இடமாயிருக்க, சத்திரத்தை மாற்றுவதற்கு உதவ அவர் நம்மை நம்புகிறார். நம்முடைய திறமைகளையும் சிறந்த முயற்சிகளையும் நாம் வழங்கும்போது, அவருடைய ஆவிக்குரிய வரங்களும் 10 பலப்படுத்தப்பட்டு, ஆசீர்வதிக்கின்றன.

ஒரு ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளர் என்னிடம், “மூப்பர் காங், நான் மொழிபெயர்க்க முடியும்படியாக, நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்” என்பதை “நாவுகளின் வரத்தால்” ஆவியால் நான் அறிந்தேன், என்று இந்த உண்மையுள்ள சகோதரர் சொன்னார்.

விசுவாசம் மற்றும் உறுதிப்பாட்டின் வரங்கள் வந்து, வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக வெளிப்படுகின்றன. கோவிட்-19 லிருந்து அவளுடைய கணவர் மரித்தபோது, ஒரு அன்பான சகோதரி ஆவிக்குரிய ஆறுதல் பெற்றாள். அவள் சொன்னாள், “எனக்கன்பான என் கணவனை நான் அறிவேன், நான் மீண்டும் அவருடன் ஒன்றாக இருப்பேன்.” வேறொரு கோவிட் சூழ்நிலையில், மற்றொரு அன்பான சகோதரி, சொன்னாள், “என் கணவருக்கு இன்னும் சிறிது நேரம் அவகாசம் கொடுக்கும்படி நான் தேவனிடமும் மருத்துவர்களிடமும் மன்றாட வேண்டும் என்று உணர்ந்தேன்.”

இரண்டாவதாக, அனைவருக்கும் போதிய இடத்துடன் எல்லோரும் கூடும்படியாக, அவருடைய சத்திரத்தை கிருபையுடனும் பரந்த இடத்துடனான ஒரு இடமாக மாற்றும்படி அவர் நம்மை வேண்டுகிறார். இரண்டாம் தரக் குழுக்கள் இல்லாமல், இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, அனைவரும் சமமானவர்கள்.

திருவிருந்து கூட்டங்களிலும், பிற ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களிலும், சமூக நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.11 ஒருவருக்கொருவர் சிந்தனையுடனும் அக்கறையுடனும், நாம் நம்முடைய இரட்சகரை பயபக்தியுடன் தொழுகிறோம். ஒவ்வொரு நபரையும் நாம் காண்கிறோம், அங்கீகரிக்கிறோம். நாம் புன்னகைக்கிறோம், தனியாக அமர்ந்திருப்பவர்களுடன் அமர்ந்துகொள்கிறோம், புதிய மனமாற்றம் அடைந்தவர்கள், திரும்பி வரும் சகோதர சகோதரிகள், இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள், ஒவ்வொரு அன்பான ஆரம்பக் குழந்தை உள்ளிட்டவர்களின் பெயர்களை அறிந்துகொள்கிறோம்.

அவர்களின் இடத்தில் நம்மை கற்பனை செய்துகொண்டு, நண்பர்கள், பார்வையாளர்கள், புதிதாக நகர்ந்தவர்கள், பல திசைகளிலிருந்தும் வந்த பரபரப்பான தனிப்பட்டவர்களை நாம் வரவேற்கிறோம். நாம் துக்கப்படுகிறோம், மகிழ்ச்சியடைகிறோம், ஒருவருக்கொருவராக இருக்கிறோம். நம்முடைய இலட்சியங்களில் நாம் தாழ்வடைந்து, விரைந்து, அறியாமல், தீர்ப்பளிப்பவர்களாக அல்லது பாரபட்சமற்றவர்களாக இருக்கும்போது, நாம் ஒருவருக்கொருவரின் மன்னிப்பைத் தேடுகிறோம், மேலும் சிறப்பாகச் செய்கிறோம்.

ஆப்பிரிக்காவிலிருந்து வந்து, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் சொன்னார்கள், “முதல் நாளிலிருந்து, சபை அங்கத்தினர்கள் நட்பாகவும் வரவேற்புடனும் இருந்தனர். ஒவ்வொருவரும் வீட்டிலிருப்பதைப்போல உணரவைத்தார்கள். யாருமே எங்களைத் தாழ்வாகப் பார்க்கவில்லை.” தகப்பன் சொன்னார், “சுவிசேஷ கனிகள் சுவிசேஷ வேர்களிலிருந்து வருகின்றன என பரிசுத்த வேதாகமம் போதிக்கிறது”. “எங்கள் மகனும் மகளும் அந்த ஊழியக்காரர்களைப்போல வளரவேண்டும்” என தகப்பனும் தாயும் சொன்னார்கள். சகோதர சகோதரிகளே, நாம் ஒவ்வொருவரும் அவருடைய சத்திரத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்போம்.

மூன்றாவதாக, அவருடைய சத்திரத்தில், பரிபூரணம் இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது, உலகத்தின் பரிபூரணத்தில் அல்ல என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். உண்மையற்ற மற்றும் நம்பத்தகாத, உலகத்தின் இன்ஸ்டா பரிபூரணமான வடிகட்டப்பட்ட பரிபூரணம் நம்மை குறைந்தவர்களாகவும், ஸ்வைப்ஸ், லைக்குகள் அல்லது இரட்டை தட்டுகளுக்கு அடிமையானவர்களாய் உணரவைக்கலாம். இதற்கு நேர்மாறாக, வேறு யாரும் தெரிந்து கொள்ள நாம் விரும்பாத நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார், அவர் இன்னும் நம்மை நேசிக்கிறார். அவருடைய பாவநிவாரண பலியால் சாத்தியமான இரண்டாவது மற்றும் மூன்றாவது வாய்ப்புகளின் சுவிசேஷம் அவரே.12 அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள நாம் இன்னும் முழுமையாகப் பாடுபடும்போது, நாமும் ஒவ்வொருவரும் குறைவான தீர்ப்புடனும், அதிக மன்னிப்புடனும் ஒரு நல்ல சமாரியனாயிருக்க, அவர் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார்.

நாம் ஒருவருக்கொருவர் உதவுவது போல நாமே நமக்கு உதவுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் பரபரப்பான சாலைக்கு அருகில் வசித்து வந்தது. உதவி கேட்பதற்காக பயணிகள் பெரும்பாலும் அங்கே நிறுத்தினர். ஒரு நாள் அதிகாலையில் தங்கள் கதவை சத்தமாக தட்டுவதை குடும்பத்தினர் கேட்டார்கள். அதிகாலை 2:00 மணிக்கு யாராயிருக்க முடியுமென சோர்வடைந்து கவலைப்பட்டு, இந்த ஒரு முறை, வேறு யாராவது உதவ முடியுமா என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். தொடர் தட்டுதல் தொடர்ந்தபோது, “தீ, உங்கள் வீட்டின் பின்புறத்தில் நெருப்பு எரிகிறது” என்ற சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். நல்ல சமாரியர்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்.

நான்காவதாக, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சத்தியத்தில், ஜீவிக்கிற தீர்க்கதரிசி, அப்போஸ்தலர்களில், இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடான மார்மன் புஸ்தகத்தில் நங்கூரமிடப்பட்டு, அவருடைய சத்திரத்தில், இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஒரு சுவிசேஷ சமூகத்தின் ஒரு பகுதியாகிறோம். அவருடைய சத்திரத்துக்கும், பரிசுத்த ஆலயமான அவருடைய வீட்டிற்கும் அவர் நம்மை கொண்டு வருகிறார். கர்த்தருடைய வீடு என்பது எரிகோ செல்லும் பாதையில் காயமடைந்த மனிதரைப் போலவே, நல்ல சமாரியனும் நம்மைச் சுத்தப்படுத்தி, ஆடை அணிவித்துவிடவும், தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்பவும் நம்மை ஆயத்தப்படுத்தவும், தேவனின் குடும்பத்தில் நித்தியமாக ஐக்கியமாக முடியும். விசுவாசத்துடனும் கீழ்ப்படிதலுடனும் அவருடைய சுவிசேஷத்தின்படி வாழும் அனைவருக்கும் அவருடைய ஆலயங்கள் திறந்திருக்கும்.

ஆலய மகிழ்ச்சி என்பது பல்வேறு மரபுகள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் தலைமுறைகளுக்கு மத்தியில் சுவிசேஷ ஒற்றுமையை உள்ளடக்கியது. டெய்லர்ஸ்வில் யூட்டா ஆலய அஸ்திபார விழாவில், 17 வயதான மேக்ஸ் ஹார்க்கர் தனது கொள்ளுத் தாத்தா ஜோசப் ஹார்க்கர் மற்றும் அவரது மனைவி சுசன்னா ஸ்னீத் ஆகியோரால் ஆறு தலைமுறைகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட குடும்ப விசுவாசத்தின் பாரம்பரியத்தை பகிர்ந்து கொண்டார். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தில், நாம் ஒவ்வொருவரும் நம் குடும்ப தலைமுறைகளில் ஒரு வலுவான இணைப்பாக மாறலாம்.

இறுதியாக, ஐந்தாவதாக, சகல தேசங்களிலும், இனங்களிலும், பாஷைகளிலும், அவருடைய சத்திரத்தில் அனைவருக்கும் இடவசதியுடன், நம்முடைய வெவ்வேறு பின்னணியிலும் சூழ்நிலைகளிலும் தேவன் தம் பிள்ளைகளை நேசிக்கிறார் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

கடந்த 40 ஆண்டுகளில், சபை உறுப்பினர்கள் அதிகரித்து சர்வதேசத்தாராகி விட்டனர். 1998 ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்கா மற்றும் கனடாவுக்குள் இருந்ததை விட அதிகமான சபை உறுப்பினர்கள் வெளியே வாழ்ந்து வருகின்றனர். 2025 வாக்கில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளதைப் போல லத்தீன் அமெரிக்காவிலும் பல சபை உறுப்பினர்கள் வாழக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். தகப்பன் லேகியின் உண்மையுள்ள சந்ததியினரின் கூட்டம் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது. முன்னோடி நடைபாதை உட்பட, விசுவாசமுள்ள பரிசுத்தவான்கள், உலகளாவிய சபையின் விசுவாசம் மற்றும் சேவையின் கொள்ளிடமாக இருக்கிறார்கள்.

மேலும், வயது வந்த சபை உறுப்பினர்களில் பெரும்பாலோர் இப்போது திருமணமாகாதவர்கள், விதவைகள் அல்லது விவாகரத்து பெற்றவர்கள். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நமது ஒத்தாசைச் சங்க சகோதரிகளிலும், பாதிக்கும் மேற்பட்டவர்கள் நமது வயதுவந்த ஆசாரியத்துவ சகோதரர்களிலும் அடங்குவர். 1992 முதல் உலகளாவிய சபையிலும், 1992 முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சபையிலும் இந்த மக்கள்தொகை முறை உள்ளது.

கர்த்தருக்கு முன்பாகவும் அவருடைய சபையிலும் நாம் நின்றுகொண்டிருத்தல், நமது திருமண நிலை அல்ல, ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவின் விசுவாசமுள்ள, வீரம் மிக்க சீஷர்களாக நாம் மாறுகிறோம். 13 வயதுவந்தவர்கள், வயதுவந்தவர்களாகப் பார்க்கப்பட விரும்ப வேண்டும், பொறுப்புடன் இருக்க வேண்டும், வயதுவந்தவர்களாக பங்களிக்க வேண்டும். எல்லா இடங்களிலிருந்தும், ஒவ்வொரு வடிவத்திலும், அளவிலும், நிறத்திலும், வயதிலும், ஒவ்வொருவரும் திறமைகளோடும், நீதியான விருப்பங்களோடும், ஆசீர்வதித்து சேவை செய்வதற்கான மகத்தான திறன்களோடும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் வருகிறார்கள். மனந்திரும்புதலுக்காக விசுவாசத்தோடு இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவும்14 நீடித்த மகிழ்ச்சிக்காகவும் தினமும் நாம் நாடுகிறோம்.

இந்த வாழ்க்கையில், நாம் சில சமயங்களில் தேவனுக்காகக் காத்திருக்கிறோம். இருந்தும் வருங்காலத்தில் நாம் நம்புகிற மற்றும் விரும்புகிற இடத்தில் நாம் இருக்கக்கூடாமல் போகலாம். ஒரு அர்ப்பணிப்புள்ள சகோதரி கூறுகிறார், “கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்காக உண்மையோடு காத்திருப்பது ஒரு பரிசுத்த நிலை. இது பரிதாபத்தையோ, ஆதரவையோ, தீர்ப்பையோ சந்திக்கக்கூடாது, மாறாக பரிசுத்தமான மரியாதையுடன் இருக்க வேண்டும்.”15 இதற்கிடையில், நாம் இப்போது வாழ்கிறோம், வாழ்க்கை தொடங்க காத்திருக்கவில்லை.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்”16 என ஏசாயா வாக்களிக்கிறான்.

திரும்ப வருவதாக நமது நல்ல சமாரியன் வாக்களிக்கிறான். அவர் விரும்புவதைப் போல நாம் ஒருவருக்கொருவர் அக்கறை கொள்ளும்போது அற்புதங்கள் நிகழ்கின்றன. நொறுங்கிய இருதயங்களுடனும் நருங்கிய ஆவிகளோடும் நாம் வரும்போது 17 இயேசு கிறிஸ்துவில் குரலை நாம் கண்டு, பாதுகாப்பின் அவருடைய புரிந்துகொள்ளுதலின் கரங்களால் நாம் சூழப்படுவோம்.18 உள் நோக்கத்தையும் வெளிப்புற செயலையும் பரிசுத்தப்படுத்த, உடன்படிக்கையை சொந்தமாக்குதலையும் “தெய்வீக வல்லமையையும்”19 பரிசுத்த நியமங்கள் வழங்குகின்றன. அவருடைய அன்பான இரக்கத்தோடும், நீடிய பொறுமையோடும், அவருடைய சபை நம்முடைய சத்திரமாக மாறுகிறது.

அனைவரையும் வரவேற்று, அவருடைய சத்திரத்தில் நாம் இடத்தை உருவாக்கும்போது, நம்முடைய நல்ல சமாரியன் நம் தூசி நிறைந்த அநித்திய சாலைகளில் நம்மை குணமாக்க முடியும். நமது பிதாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் பரிபூரண அன்புடன், “நானிருக்குமிடத்தில் நீங்களும் இருக்கும்படியாக” “இம்மையில் சமாதானத்தையும் மறுமையில் நித்திய ஜீவனையும்” வாக்களிக்கிறார்கள். அப்படியே இயேசு கிறிஸ்துவின் புனிதமான பரிசுத்த, நாமத்தில் நான் நன்றியோடு, சாட்சியாகி, சாட்சியமளிக்கிறேன், ஆமென்.