பொது மாநாடு
நமது துக்கங்கள் சந்தோஷமாக மாறும்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


நமது துக்கங்கள் சந்தோஷமாக மாறும்

துக்கத்தை உணரும் அனைவரையும், நாம் மரித்த பிறகு என்ன நடக்கிறது என்று ஆச்சரியப்படுகிற அனைவரையும், கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வைக்க நான் அழைக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, சால்ட் லேக் சிட்டியில் கூட்டங்களில் கலந்துகொண்டபோது, நமது அன்பான தீர்க்கதரிசி ரசல் எம். நெல்சன் என்னை வாழ்த்தினார். அவருடைய இதமான அன்பிலும் தனிப்பட்ட வழியிலும் என்னிடம் அவர் கேட்டார், “மார்க் உங்களுடைய தாயார் எப்படியிருக்கிறார்கள்?”

அந்த வார ஆரம்பத்தில், நியூசிலாந்தில் உள்ள அவரது வீட்டில், நான் அவருடன் இருந்தேன், அவருக்கு வயதாகிவிட்டது, ஆனால் முழு விசுவாசமுள்ளவராகவும், அவரை அறிந்த அனைவருக்கும் ஒரு உணர்த்துபவர் என்று நான் அவரிடம் கூறினேன்.

பின்னர் அவர் சொன்னார், “தயவுசெய்து அவருக்கு என் அன்பைக் கொடுங்கள்… மேலும் அவரை மீண்டும் பார்க்க எதிர்பார்த்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்.”

நான் ஆச்சரியப்பட்டுக் கேட்டேன், “விரைவில் நியூசிலாந்திற்கு ஒரு பயணத்திற்கு நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்களா?”

சிந்தனையான நேர்மையுடன் அவர் பதிலளித்தார், “ஓ, இல்லை, நான் அடுத்த வாழ்க்கையில் அவரைப் பார்ப்பேன்.”

அவருடைய பதிலில் விளையாட்டுத்தனம் எதுவுமில்லை. அது ஒரு சரியான, உண்மையின் இயற்கையான வெளிப்பாடாயிருந்தது. அந்த தனிப்பட்ட, பாதுகாப்பற்ற தருணத்தில், மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை தொடர்கிறது என்பதற்கு ஒரு ஜீவனுள்ள தீர்க்கதரிசியின் தூய சாட்சியத்தை நான் கேட்டேன், உணர்ந்தேன்.

இந்த மாநாட்டின் வார இறுதியில், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு ஜீவனுள்ள அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் சாட்சியளிப்பதை நீங்கள் கேட்பீர்கள். “இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதைக்குறித்து அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் அளித்த சாட்சிகள் நமது மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்… நமது மதத்தைப்பற்றிய மற்ற எல்லா காரியங்களும் [இந்த உண்மைக்கு] பிற்சேர்க்கைகள் மட்டுமே.”1 நீங்கள் உண்மையான நோக்கத்துடன் கேட்கும்போது, இந்த சாட்சிகளின் உண்மையை ஆவியானவர் உங்கள் மனதிலும் உங்கள் இருதயத்திலும் உறுதிப்படுத்துவார் என்று நான் வாக்களிக்கிறேன். 2

இயேசுவின் மரணத்தைத் தொடர்ந்து அவர்களுக்கு அவர் தோன்றியபின், இயேசுவின் பண்டைய அப்போஸ்தலர்கள் என்றென்றைக்குமாக மாறினர். அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை அவர்களில் பத்து பேர் தங்களுக்குத் தாங்களே பார்த்தார்கள். ஆரம்பத்தில் அங்கில்லாத தோமா அறிவித்தான், “நான் கண்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்.”3 பின்னர் இயேசு தோமாவுக்கு அறிவுறுத்தினார்: “அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு”4 பின்னர் விசுவாசத்தின் முக்கிய பாத்திரத்தை கர்த்தர் போதித்தார்: “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.”5

அவரைக் குறித்து சாட்சியமளிக்கும்படி உயிர்த்தெழுந்த கர்த்தர் தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு கட்டளை கொடுத்தார். இன்று நம்முடைய ஜீவிக்கும் அப்போஸ்தலர்களைப் போலவே, அவர்கள் உலகத் தொழில்களை விட்டுவிட்டு, இந்த இயேசுவை தேவன் எழுப்பினார் என்று வாழ்நாள் முழுவதும் தைரியமாக அறிவித்தனர். ஞானஸ்நானம் பெற கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கானோரை அவர்களுடைய வல்லமையான சாட்சிகள் நடத்தின.6

ஈஸ்டர் காலையின் மகிமையான செய்தி முழு கிறிஸ்தவத்திற்கும் மையமானது. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், இதனால், நாமும் மரித்த பிறகு மீண்டும் வாழ்வோம். இந்த அறிவு நம் வாழ்விற்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் தருகிறது. நாம் விசுவாசத்தில் முன்னோக்கிச் சென்றால், பழங்கால அப்போஸ்தலர்களைப் போலவே நாம் என்றென்றும் மாற்றப்படுவோம். அவர்களைப் போலவே, நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் எந்தவொரு கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள முடியும். நமது “துக்கம் சந்தோஷமாக மாறுகிற” 7 நேரத்தில் இந்த விசுவாசமும் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

துக்கமான ஒரு நேரத்தைத் தொடர்ந்து என்னுடைய சொந்த விசுவாசம் அதன் ஆரம்பங்களைக் கொண்டிருந்தது.

என்னுடைய தகப்பனும் தாயும் நியூசிலாந்தில் ஆடு வளர்ப்பவர்களாயிருந்தனர்.8 அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அனுபவித்தனர். திருமணமான இளம் தம்பதியராக, மூன்று இளம் மகள்களால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இளையவளுக்கு ஆன் என பெயரிடப்பட்டது. ஒரு நாள் அவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு ஏரிக்கு விடுமுறைக்குச் சென்றிருந்தபோது, 17 மாத வயதான ஆன் தவறி விழுந்தாள். சில நிமிட நம்பிக்கையற்ற தேடலுக்குப் பிறகு, அவள் தண்ணீரில் உயிரற்றவளாகக் கண்டுபிடிக்கப்பட்டாள்.

இந்த பயங்கரம் சொல்லமுடியாத துக்கத்தை ஏற்படுத்தியது. சில சிரிப்புகள் தங்கள் வாழ்க்கையிலிருந்து என்றென்றும் வெளியேறிவிட்டன என்று அப்பா பல ஆண்டுகள் கழித்து எழுதினார். வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்கு பதில்களுக்கான ஏக்கத்தையும் இது ஏற்படுத்தியது: “எங்கள் விலைமதிப்பற்ற ஆன் என்னவாக மாறுவாள்? நாம் எப்போதாவது மீண்டும் அவளைப் பார்ப்போமா? நமது குடும்பம் மீண்டும் எப்போதும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?”

இந்த துயரத்திற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையைச் சேர்ந்த இரண்டு இளம் ஊழியக்காரர்கள் எங்கள் பண்ணைக்கு வந்தார்கள். மார்மன் புஸ்தகத்திலும் வேதாகமத்திலும் காணப்படுகிற சத்தியங்களைப்பற்றி அவர்கள் போதிக்க ஆரம்பித்தார்கள். ஆன் இப்போது ஆவி உலகத்தில் வாழ்கிறாள் என்ற உறுதிப்பாடும் இந்த சத்தியங்களில் அடங்கின. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால், அவளும் உயிர்த்தெழுவாள். ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசி மற்றும் பன்னிரு அப்போஸ்தலர்களுடன், இயேசு கிறிஸ்துவின் சபை பூமியில் மீண்டும் ஒருமுறை மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது என அவர்கள் போதித்தார்கள். இயேசு கிறிஸ்து அவருடைய முதன்மையான அப்போஸ்தலனான பேதுருவுக்கு கொடுத்த அதே ஆசாரியத்துவ அதிகாரத்தால் குடும்பங்கள் என்றென்றும் கட்டப்பட்டிருக்க முடியுமென்ற தனித்துவமான குறிப்பிடத்தக்க கோட்பாட்டை அவர்கள் போதித்தார்கள்.9

அம்மா, உடனேயே சத்தியத்தை அடையாளம் கண்டு பரிசுத்த ஆவியின் ஒரு சாட்சியைப் பெற்றார். எப்படியாயினும், ஒரு ஆண்டாக, சந்தேகங்களுக்கும் ஆவிக்குரிய அழுத்தத்துக்கும் இடையில் அப்பா போராடினார். மேலும், அவருடைய வாழ்க்கை முறையை மாற்ற அவர் தயங்கினார். தூக்கமில்லாத இரவைத் தொடர்ந்து, ஒரு நாள் காலை தரையில் நிதானமாக நடந்தபோது, அவர் அம்மாவிடம் திரும்பி, “நான் இன்று ஞானஸ்நானம் பெறுவேன் அல்லது ஒருபோதும் இல்லை” என்றார்.

என்ன நடந்ததென அம்மா ஊழியக்காரர்களிடம் கூறி, என் தந்தையின் மீதுள்ள விசுவாசத்தின் ஒளி இப்போது எரிகிறது அல்லது அணைக்கப்படும் என்பதை அவர்கள் உடனடியாக உணர்ந்தார்கள்.

அதே காலையில் எங்கள் குடும்பம் அருகிலுள்ள கடற்கரைக்கு பயணமானார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறதென்பதை அறியாதவர்களாக, பிள்ளைகளான நாங்கள் மணல் திட்டுகளில் ஒரு சுற்றுலாவை நடத்தியபோது, மூப்பர்கள் பாய்ட் கிரீன் மற்றும் கேரி ஷெஃபீல்ட் என் பெற்றோரை கடலுக்குள் அழைத்துச் சென்று ஞானஸ்நானம் கொடுத்தனர். விசுவாசத்தின் மேலும் ஒரு செயலாக, என்ன வந்தாலும், அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு அவர் வாழ்நாள் முழுவதும் உண்மையாக இருப்பார் என அப்பா தேவனிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்தார்.

ஒரு ஆண்டுக்குப் பின்னர், ஹாமில்டன், நியுசிலாந்தில் ஒரு ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது. அதன் பிறகு விரைவிலேயே, எங்கள் குடும்பம், ஆன்னை பிரதிபலித்த ஒருவருடன், கர்த்தருடைய பரிசுத்த இல்லத்தில் பலிபீடத்தைச் சுற்றி முழங்காலிட்டோம். அங்கு, ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால், நாங்கள் ஒரு நித்திய குடும்பமாக ஒரு எளிய மற்றும் அழகான நியமத்தில் இணைக்கப்பட்டோம். பெரிய சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் இது கொண்டு வந்தது.

ஆன்னின் துயர மரணம் இல்லையென்றால், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர் ஒருபோதும் தாழ்மையுடன் இருந்திருக்க மாட்டார் என பல ஆண்டுகள் கழித்து அப்பா என்னிடம் சொன்னார். இருந்தும், ஊழியக்காரர்கள் போதித்தது உண்மை என கர்த்தருடைய ஆவி நம்பிக்கையை ஊற்றியது. என் பெற்றோரின் வாழ்க்கையில் அவர்களுடைய ஒவ்வொரு முடிவையும் அமைதியாகவும் தாழ்மையாகவும் வழிநடத்திய சாட்சியின் நெருப்பால் அவர்கள் ஒவ்வொருவரும் எரியும் வரை அவர்களுடைய விசுவாசம் தொடர்ந்து வளர்ந்தது.

வருங்கால தலைமுறைகளுக்கு என்னுடைய பெற்றோரின் எடுத்துக்காட்டுக்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆழ்ந்த துக்கத்திற்கு விடையறுக்கும் விதமாக அவர்கள் செய்த விசுவாசச் செயல்களால் எப்போதும் மாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையை அளவிட முடியாது.

துக்கத்தை உணரும் அனைவரையும், சந்தேகத்துடன் போராடும் அனைவரையும், நாம் மரித்த பிறகு என்ன நடக்கிறது என்று ஆச்சரியப்படுகிற அனைவரையும், கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வைக்க நான் அழைக்கிறேன். நம்புவதற்கு நீங்கள் விரும்பினால் பின்னர் விசுவாசத்தில் செயல்பட்டால் , பரிசுத்த ஆவியின் மென்குரலை பின்பற்றினால் இந்த வாழ்க்கையிலும் வரப்போகிற வாழ்க்கையிலும் நீங்கள் சந்தோஷத்தைக் காண்பீர்களென நான் வாக்களிக்கிறேன்.

என்னுடைய சகோதரி ஆனை நான் சந்திக்கப்போகிற நாளை நான் எவ்வாறு எதிர்பார்த்திருப்பேன். 30 ஆண்டுகளுக்கு முன் மரித்த என் தகப்பனுடன் ஒரு மகிழ்ச்சிகரமான ஒன்றுகூடுதலுக்காக நான் காத்திருக்கிறேன். காணாதிருந்தும் விசுவாசித்து, விசுவாசத்துடன் வாழ்வதில் காணப்படுகிற சந்தோஷத்திற்கு, ஆனால், இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்று பரிசுத்த ஆவியின் வல்லமையால் அறிவதைப்பற்றி நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவையும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தையும் என் முழு இருதயத்துடனும் ஆத்துமாவுடனும் பின்பற்ற நான் தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இது ஆசீர்வதிக்கிறது. இயேசுவே கிறிஸ்து என்றும், தேவனின் குமாரனென்றும், நமது இரட்சகரும் மீட்பருமானவர் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.