பொது மாநாடு
அவருடைய நாமத்தில் ஆசீர்வதியுங்கள்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


அவருடைய நாமத்தில் ஆசீர்வதியுங்கள்

நாம் ஆசாரியத்துவத்தைப் பெறுவதற்கான நோக்கம், கர்த்தருக்காக ஜனங்களை ஆசீர்வதிக்கவும், அவருடைய நாமத்தில் அவ்வாறு செய்யவும் நம்மை அனுமதிப்பதற்கே.

எனக்கன்பான சகோதரர்களே, தேவனின் ஆசாரியத்துவத்தில் சகஊழியக்காரர்களே, இன்றிரவு உங்களிடையே உரையாற்றுவது எனக்குக் கிடைத்த ஒரு கௌரவம். நீங்கள் எனது ஆழ்ந்த மரியாதையும் நன்றியும் பெற்றிருக்கிறீர்கள். நான் உங்களுடன் பேசும்போதும், உங்கள் பெரும் விசுவாசத்தைப்பற்றிக் கேட்கும்போதும், எப்போதும் வலுவான குழுமங்களுடனும், எப்போதும் அதிக உண்மையுள்ள ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களுடனும், உலகத்தில் எப்போதும் அதிகரித்துவரும் ஆசாரியத்துவ வல்லமை உள்ளது, என்பது எனது நம்பிக்கை.

உங்கள் தனிப்பட்ட ஆசாரியத்துவ சேவையில் இன்னும் சிறப்பாக செயல்பட விரும்புகிற உங்களுடன் இன்றிரவு, எனது சிறிது நேரத்தில், நான் பேசுவேன். சேவை செய்வதற்கான உங்கள் அழைப்பை நீங்கள் சிறப்பிக்க வேண்டும் என்ற கட்டளை உங்களுக்குத் தெரியும்.1 ஆனால் உங்கள் அழைப்பை சிறப்பிப்பது உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.

நான் புதிய உதவிக்காரர்களுடன் ஆரம்பிப்பேன், ஏனென்றால் அவர்களின் ஆசாரியத்துவ சேவையை சிறப்பித்தல் என்றால் என்ன அர்த்தம் என்பதைப்பற்றி அநேகமாக அவர்கள் நிச்சயமற்றவர்களாக உணரக்கூடும். புதிதாக நியமிக்கப்பட்ட மூப்பர்களும் கேட்க விரும்பலாம். தனது முதல் வாரங்களின் சேவையில் ஒரு ஆயர் ஆர்வமாக இருக்கக்கூடும்.

ஒரு உதவிக்காரனாக என் நாட்களை திரும்பிப் பார்ப்பது எனக்கு அறிவுறுத்தலாக இருக்கிறது. நான் இப்போது பரிந்துரைக்கப்போவதை, யாராவது என்னிடம் சொல்லியிருக்கலாம் என நான் நம்புகிறேன். அப்போதிருந்து எனக்கு வந்த எல்லா ஆசாரியத்துவ நியமிப்புகளுக்கும், இன்றைய நாளில் நான் பெறும் நியமிப்புகளுக்கும் கூட, இது உதவியிருக்கக்கூடும்.

நான் ஒரு சிறிய கிளையில் ஒரு உதவிக்காரனாக நியமிக்கப்பட்டேன், அங்கு, நான் ஒரே உதவிக்காரன் மற்றும் என் சகோதரன் டெட் ஒரே ஆசிரியர். கிளையில் எங்கள் குடும்பம் மட்டுமே இருந்தோம். முழு கிளையும் எங்கள் வீட்டில் சந்தித்தனர். ஆசாரியத்துவத்தை இப்போதுதான் பெற்ற ஒரு புதிய மனமாறியவர் எனது சகோதரனுக்கும் எனக்கும் ஆசாரியத்துவ தலைவராயிருந்தார். நான் சாப்பாட்டு அறையில் திருவிருந்தை பரிமாறுவது மட்டுமே எனது அப்போதைய ஒரே ஆசாரியத்துவக் கடமை என்று நான் நம்பினேன்.

என் குடும்பம் யூட்டாவுக்குக் குடிபெயர்ந்தபோது, பல உதவிக்காரர்களுடன் ஒரு பெரிய தொகுதியில் என்னை நான் கண்டேன். அங்கு நடந்த எனது முதல் திருவிருந்து கூட்டத்தில், திருவிருந்தை பரிமாறும்போது, ஒரு பயிற்சி பெற்ற குழுவைப் போல உதவிக்காரர்கள் ஒரு சேனையாக துல்லியமாக நகர்வதை நான் கவனித்தேன்.

நான் மிகவும் பயந்து, அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்னை யாரும் பார்க்க முடியாதபடி இருக்க தொகுதி கட்டிடத்திற்கு நான் அதிகாலையில் சென்றேன். இது சால்ட் லேக் சிட்டியில் உள்ள யாலெக்ரெஸ்ட் தொகுதி என்பதை நினைவில் கொள்கிறேன், மேலும் அதில் ஒரு சிலை தரைகளில் இருந்தது. திருவிருந்தைப் பரிமாறுவதில் நான் என் இடத்தைப் பிடித்தபோது எப்படி தோல்வியடையக்கூடாது என்பதை அறிய உதவிக்காக சிலைக்கு பின்னால் சென்று நான் ஜெபித்தேன். அந்த ஜெபத்திற்கு பதில் கிடைத்தது.

ஆனால் நமது ஆசாரியத்துவ சேவையில் நாம் வளர முயற்சிக்கும்போது ஜெபிக்கவும் சிந்திக்கவும் ஒரு சிறந்த வழி இருக்கிறது என்பதை நான் இப்போது அறிவேன். தனிநபர்களுக்கு ஏன் ஆசாரியத்துவம் வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுவதன் மூலம் இது வந்துள்ளது. நாம் ஆசாரியத்துவத்தைப் பெறுவதற்கான நோக்கம், கர்த்தருக்காக மக்களை ஆசீர்வதிக்க அனுமதிக்க, அவருடைய நாமத்தில் அவ்வாறு செய்கிறோம். 2

நான் ஒரு உதவிக்காரனாக இருந்த பல ஆண்டுகளுக்குப் பிறகுதான், நடைமுறையில் அதற்கு என்ன அர்த்தம் என்பதை நான் அறிந்தேன். உதாரணமாக, ஒரு பிரதான ஆசாரியனாக, ஒரு பராமரிப்பு மைய திருவிருந்து கூட்டத்திற்கு வருகை தர நான் நியமிக்கப்பட்டேன். திருவிருந்தை பரிமாற நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன். நான் திருவிருந்தை பரிமாறி வந்த வழியின் செயல்முறை அல்லது துல்லியத்தைப்பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு வயதான நபரின் முகங்களையும் நான் பார்த்தேன். அவர்களில் அநேகர் அழுதுகொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஒரு பெண் என் கையைப் பிடித்து, மேலே பார்த்து, “ஓ, உமக்கு நன்றி, நன்றி” என்று சத்தமாக சொன்னாள்.

அவருடைய நாமத்தில் கொடுக்கப்பட்ட எனது சேவையை கர்த்தர் ஆசீர்வதித்தார். என் பங்கை நான் எவ்வளவு சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று ஜெபிப்பதற்குப் பதிலாக, அத்தகைய ஒரு அதிசயம் வர வேண்டும் என்று நான் அந்நாளில் ஜெபித்தேன். எனது அன்பான சேவையின் மூலம் ஜனங்கள் கர்த்தருடைய அன்பை உணர வேண்டும் என்று நான் ஜெபித்தேன். அவருடைய நாமத்தில் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் ஆசீர்வதிப்பதற்கும் இதுவே திறவுகோல் என்று நான் கற்றுக்கொண்டேன்.

அத்தகைய அன்பை நினைவூட்டிய ஒரு சமீபத்திய அனுபவத்தை நான் கேள்விப்பட்டேன். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அனைத்து சபை கூட்டங்களும் இடைநிறுத்தப்பட்டபோது, அவர் ஊழியம் செய்துகொண்டிருந்த ஒரு சகோதரிக்கு திருவிருந்தை ஆசீர்வதிக்கவும் பரிமாறவும் அவருடைய மூப்பர் குழும தலைவரிடமிருந்து வந்த ஒரு பணிப்பை ஒரு ஊழிய சகோதரர் ஏற்றுக்கொண்டார். திருவிருந்தைக் கொண்டுசெல்ல, அவர் அவளை அழைத்தபோது, அவள் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டாள், அத்தகைய ஆபத்தான நேரத்தில் அவரை தனது சொந்த வீட்டிலிருந்து வெளியே அழைப்பதை அவள் வெறுத்தாள், மேலும் விஷயங்கள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என்று நம்பினாள்.

அந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர் அவளுடைய வீட்டிற்கு வந்தபோது, அவளுக்கு ஒரு கோரிக்கை இருந்தது. அவளுடைய 87 வயதான அண்டை வீட்டு பெண்மணியுடன் திருவிருந்து பெறும்படிக்கு அவர்களால் பக்கத்து வீட்டுக்கு வர முடியுமா? ஆயரின் அனுமதியுடன் அவர் ஒப்புக்கொண்டார்.

பல பல வாரங்கள், மற்றும் மிகவும் கவனமான சமூக இடைவெளி மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு எளிய திருவிருந்து சேவைக்காக பரிசுத்தவான்களின் இந்த சிறிய குழு கூடினர். பிட்கப்பட்ட அப்பத்தின் சில துண்டுகளும் தண்ணீர் தம்ளர்களும்தான், ஆனால் ஒரு அன்பான தேவனின் நன்மைக்காக அதிகமானோர் கண்ணீர் வடித்தனர்.

காலப்போக்கில், ஊழிய சகோதரரும், அவரது குடும்பத்தினரும், அவர் ஊழியம் செய்த சகோதரியும் சபைக்குத் திரும்ப முடிந்தது. ஆனால் அண்டை வீட்டாரான, 87 வயதான விதவை, மிகுந்த எச்சரிக்கையுடன், வீட்டிலேயே இருக்க வேண்டியதிருந்தது. அவருடைய நியமிப்பு அவளுடைய அண்டை வீட்டாருக்காக, இந்த வயதான சகோதரிக்கு கூட இல்லை என்பதை ஊழிய சகோதரர் நினைவுகூருகிறார். வேதங்களையும் கையில் ஒரு சிறிய அப்பத்தையும் எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய போஜனமான திருவிருந்தை நிர்வகிக்க இன்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அமைதியாக அவளுடைய வீட்டிற்கு வருகிறார்.

அந்த நாளில் பராமரிப்பு மையத்தில் என்னைப் போன்று, அவரது ஆசாரியத்துவ சேவை, அன்பினால் வழங்கப்பட்டது. உண்மையில், தொகுதியில் அவர் கவனிக்க வேண்டிய மற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா என ஊழிய சகோதரர் சமீபத்தில் தனது ஆயரிடம் கேட்டார். அவர் ஆசாரியத்துவ சேவையை சிறப்பிப்பதற்கான அவரது விருப்பம், அவர் கர்த்தருடைய நாமத்தில் பணியாற்றியதாலும், அவருக்கு மட்டுமே தெரிந்தவிதமாக அறியப்பட்டதாலும் வளர்ந்துள்ளது. நான் செய்ததைப் போலவே ஊழிய சகோதரரும், அவர் சேவை செய்கிறவர்களும் கர்த்தருடைய அன்பைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என ஜெபம் செய்தாரா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவருடைய சேவை கர்த்தருடைய நாமத்தில் இருந்ததால், விளைவு ஒரே மாதிரியாயிருந்தது.

நோய்வாய்ப்பட்ட அல்லது தேவைப்படும் நேரத்திலுள்ள ஒருவருக்கு ஒரு ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தை வழங்குவதற்கு முன்பு நான் அதற்காக ஜெபிக்கும்போது அதே அற்புதமான முடிவு வருகிறது. ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தைக் கொடுக்க எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பதைவிட, அவர்களுடைய பணியைச் செய்யும்படியாக, அவசரமாக என்னை அங்கிருந்து வெளியேற, பொறுமையிழந்த மருத்துவர்கள் என்னை வற்புறுத்தினார்கள், வற்புறுத்தியதைவிட எனக்கு கட்டளையிட்டனர், இது ஒருமுறை ஒரு மருத்துவமனையில் நடந்தது. நான் அங்கேயே இருந்து ஆசீர்வாதத்தைக் கொடுத்தேன். மரித்துப்போவாள் என மருத்துவர்கள் நினைத்த, அந்நாளில் நான் ஆசீர்வதித்த அந்த சிறுபெண் உயிரோடிருந்தாள். அந்த நாளில், நான் என் சொந்த உணர்வுகளை வழியில் வர விடவில்லை, ஆனால் அந்த சிறுமிக்கு ஒரு ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று தேவன் விரும்புவதாக உணர்ந்ததற்காக இந்தக் கணநேரத்தில் நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆசீர்வாதம் என்றால் என்னவென நான் அறிந்திருந்தேன், அவள் குணமடைய அவளை நான் ஆசீர்வதித்தேன். அவள் குணமடைந்தாள்.

குடும்ப உறுப்பினர்கள் படுக்கையைச் சுற்றியிருந்து, குணப்படுத்துதலின் ஆசீர்வாதத்தை எதிர்பார்த்து, மரணத்தின் விளிம்பில் உள்ள ஒருவருக்கு நான் ஆசீர்வாதம் அளித்தபோது இது பலமுறை நடந்திருக்கிறது. எனக்கு சிறிது நேரமே இருந்தாலும், அவருடைய நாமத்தில் நான் கொடுக்கக்கூடிய, என்ன ஆசீர்வாதத்தை கர்த்தர் வைத்திருக்கிறார் என்பதை அறிய நான் எப்போதும் ஜெபிக்கிறேன். அந்த நபரை அவர் எவ்வாறு ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதையும் நான் அல்லது அருகில் நிற்பவர்கள் அறிய விரும்புகிறார்கள் என்பதையும் அறிய நான் கேட்கிறேன். என் அனுபவம் என்னவென்றால், தங்களுக்காக, அல்லது தாங்கள் நேசிப்பவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது ஆசீர்வாதமாக இல்லாதபோது, மாறாக, ஏமாற்றத்தை விட ஏற்றுக்கொள்வதையும் ஆறுதலையும் அனுபவிக்க, பரிசுத்த ஆவியானவர் இருதயங்களைத் தொடுகிறார்.

ஒரு நபருக்காக கர்த்தர் வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை வழங்கும்படி வழிகாட்டுதலுக்காக கோத்திரப்பிதாக்கள் உபவாசமிருந்து ஜெபிக்கும்போது அதே உணர்த்துதல் வருகிறது. மீண்டும், கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களை நான் கேள்விப்பட்டேன், அது என்னை ஆச்சரியப்படுத்தியது, மேலும் ஆசீர்வாதத்தைப் பெற்ற நபரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆசீர்வாதம் கர்த்தரிடமிருந்து வந்தது என்பது தெளிவாகிறது, எச்சரிக்கைகள் இரண்டும் அப்படியே அவருடைய நாமத்தில் பகிரப்பட்ட வாக்குறுதிகளும் அதில் அடங்கியிருக்கின்றன. கோத்திரப்பிதாவின் ஜெபமும் உபவாசமும் கர்த்தரால் பிரதிபலனளிக்கப்பட்டன.

ஒரு ஆயராக, அந்த நபருக்கு அவர் என்ன விரும்புகிறார் என்பதை நான் உணரும்படி கர்த்தரிடம் ஜெபிக்க தகுதிக்கான நேர்காணல்களை நடத்தும்போது, என் சொந்த தீர்ப்பால் மறைக்கப்படாமல் அவர் வழங்கிய, எந்தவொரு உணர்த்துதலையும் வைத்து, நான் கற்றுக்கொண்டேன். கர்த்தர், அன்பில், ஒருவரை திருத்தி, ஆசீர்வதிக்க விரும்பினால் அது கடினம். நீங்கள் விரும்புவதிலிருந்து, மற்ற நபர் விரும்பக்கூடுவதிலிருந்து, கர்த்தர் விரும்புவதை வேறுபடுத்துவதற்கு முயற்சி தேவை.

நமது வாழ்நாளிலும் ஒருவேளை அதற்கு அப்பாலும் நமது ஆசாரியத்துவ சேவையை சிறப்பிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் சேவை செய்கிற நபருக்காக அவர் என்ன விரும்புகிறார் என்பதை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்படியாக, கர்த்தருடைய சித்தத்தை அறிய, அவருடைய குரலைக் கேட்பதற்கான நமது முயற்சிகளை அறிய முயற்சித்தல் நமது சிரத்தையைப் பொறுத்தது. அந்த சிறப்பித்தல் கொஞ்சம் கொஞ்சமாக வரும். அது மெதுவாக வரலாம், ஆனால் அது வரும். இதை கர்த்தர் நமக்கு வாக்களிக்கிறார்:

“நான் பேசிய இந்த இரண்டு ஆசாரியத்துவங்களைப் பெறுகிறதிலும், அவர்களுடைய அழைப்புகளை சிறப்பாக்குகிறதிலும் உண்மையுள்ளவர்களாயிருப்பவர்கள் தங்களுடைய சரீரங்களைப் புதுப்பிக்க ஆவியால் பரிசுத்தப்படுத்தப்படுகிறார்கள்.

“அவர்கள் மோசே, மற்றும் ஆரோனின், குமாரர்களாகவும், ஆபிரகாமின் சந்ததியாகவும், சபை மற்றும் ராஜ்யமாகவும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகவும் ஆகிறார்கள்.

“கர்த்தர் சொல்லுகிறார், இந்த ஆசாரியத்துவத்தை ஏற்றுக்கொள்ளுகிற யாவரும் என்னை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.”3

ஆசாரியத்துவத்தின் திறவுகோல்கள் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது என்பது எனது சாட்சி. தொடக்கப்பட்ட பெரும் நிகழ்வுகளுக்காக, ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபிதம் செய்ய, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் பரலோகத்திலிருந்து தோன்றினார்கள், அது நம்முன் இருக்கிறது. இஸ்ரவேல் கூட்டிச் சேர்க்கப்படும். அவருடைய மகிமையான இரண்டாம் வருகைக்காக கர்த்தருடைய ஜனங்கள் ஆயத்தப்படுத்தப்படுவார்கள். மறுஸ்தாபிதம் தொடரும். அவருடைய சித்தத்தின் அதிகமானவற்றை அவருடைய தீர்க்கதரிசிகளுக்கும் அவருடைய ஊழியக்காரர்களுக்கும் கர்த்தர் வெளிப்படுத்துவார்.

கர்த்தர் செய்யப்போகிற பெரிய காரியங்களை ஒப்பிடும்போது நீங்கள் சிறியவராக உணரலாம். நீங்கள் அப்படிச்செய்தால், கர்த்தர் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்று ஜெபத்துடன் கேட்க நான் உங்களை அழைக்கிறேன். அவர் உங்களை தனிப்பட்ட முறையில் அறிவார், அவர் உங்கள்மீது ஆசாரியத்துவத்தை அருளினார், மேலும் நீங்கள் எழுந்து, ஆசாரியத்துவத்தை சிறப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள், ஏனென்றால் அவருடைய நாமத்தில் அவர் நேசிக்கிற, ஜனங்களை நீங்கள் ஆசீர்வதிக்க, அவர் உங்களை நம்புகிறார்.

அவருடைய அன்பையும், அவருடைய நம்பிக்கையையும் உணரும்படியாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இப்போது உங்களை ஆசீர்வதிக்கிறேன், ஆமென்.