பொது மாநாடு
நம்முடைய இரட்சகர் நமக்காக என்ன செய்திருக்கிறார்?
ஏப்ரல் 2021 பொது மாநாடு


நம்முடைய இரட்சகர் நமக்காக என்ன செய்திருக்கிறார்?

நம்முடைய பரலோக பிதாவின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை நோக்கி உலக வாழ்க்கை வழியாக நமது பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் இயேசு கிறிஸ்து செய்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிணைய மாநாட்டில் ஒரு சனிக்கிழமை மாலை கூட்டத்தில், ஒரு பெண்ணை நான் சந்தித்தேன், பல வருட ஆர்வமில்லாமைக்குப் பிறகு மீண்டும் சபைக்கு வருமாறு அவளுடைய சிநேகிதிகள் கேட்டுக் கொண்டதாகக் கூறினாள், ஆனால் அவள் ஏன் வர வேண்டும் என்று எந்த காரணத்தையும் யோசிக்க முடியவில்லை. அவளை ஊக்குவிப்பதற்காக நான் சொன்னேன், “இரட்சகர் உனக்காகச் செய்த எல்லாவற்றையும் நீ கருத்தில் கொள்ளும்போது, அவரை ஆராதிப்பதற்கும், சேவை செய்வதற்கும் நீ திரும்பி வர பல காரணங்கள் உள்ளன.” “அவர் எனக்காக என்ன செய்திருக்கிறார்?” என்று அவள் பதிலளித்தபோது நான் திகைப்படைந்தேன்.

படம்
இரண்டாம் வருகை

நம் ஒவ்வொருவருக்கும் இயேசு கிறிஸ்து என்ன செய்திருக்கிறார்? நம்முடைய பரலோக பிதாவின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை நோக்கி உலக வாழ்க்கை வழியாக நமது பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் அவர் செய்துள்ளார். அந்த திட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்களைப்பற்றி நான் பேசுவேன். இவை ஒவ்வொன்றிலும் அவருடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து மையமானவராக இருக்கிறார். இவை அனைத்தையும் தூண்டுவது, “மனுபுத்திரரின் இருதயங்களில் எங்கும் ஊற்றப்படுகிறதான தேவ அன்பு, ஆகையால் அது எல்லாக் காரியங்களுக்கும் மேலாக வாஞ்சிக்கத்தக்கது” (1 நேபி 11:22).

I.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு சற்று முன்பு, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றி முதலில் பேசுவது இந்நேரத்துக்கு பொருந்துவதாக இருக்கும். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் என்பது நம்முடைய விசுவாசத்தின் உறுதியளிக்கும் தனிப்பட்ட தூணாகும். இது நமது கோட்பாட்டிற்கு அர்த்தத்தையும், நம் நடத்தைக்கு தூண்டுதலையும், நமது எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் சேர்க்கிறது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றிய விவரிப்புகளுக்கு வேதாகமத்தையும், மார்மன் புஸ்தகத்தையும் நாம் நம்புவதால், இந்த பூமியில் இதுவரை வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் இதேபோன்ற உயிர்த்தெழுதல் வரும் என்ற ஏராளமான வேத போதனைகளையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.1 இயேசு போதித்தபடி, “நான் பிழைக்கிறபடியால் நீங்களும் பிழைக்கிறீர்கள்” (யோவான் 14:19). அவரது அப்போஸ்தலன் போதித்தான் “மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்” மற்றும் “அழிவுள்ளதாகிய இது அழியாமையை தரித்துக் கொள்ளும்” (1 கொரிந்தியர் 15:52, 54).

படம்
உயிர்த்தெழுதல்

ஆனால் அழியாமையின் உறுதிப்பாட்டை விட உயிர்த்தெழுதல் நமக்கு அதிகம் தருகிறது. இது உலக வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது.

நாம் ஒவ்வொருவரும், நாம் நேசிப்பவர்களும் எதிர்கொள்ளும் பூலோக சவால்களில் நிலைத்திருக்க பார்வையையும் வலிமையையும் உயிர்த்தெழுதல் நமக்கு அளிக்கிறது. பிறக்கும்போதோ அல்லது பூலோக வாழ்க்கையின் போதோ நாம் பெறும் சரீர, மன, அல்லது உணர்ச்சி சம்மந்தமான குறைபாடுகளைக் காண இது ஒரு புதிய வழியை வழங்குகிறது. துக்கங்கள், தோல்விகள் மற்றும் விரக்திகளை சகித்துக்கொள்ள இது நமக்கு பலத்தை அளிக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கப்பட்ட உயிர்த்தெழுதல் இருப்பதால், இந்த உலக குறைபாடுகள் மற்றும் எதிர்ப்புகள் தற்காலிகமானவை என்பதை நாம் அறிவோம்.

நம்முடைய பூலோக வாழ்க்கையின் போது தேவனின் கட்டளைகளைக் கடைபிடிப்பதற்கான ஒரு வல்லமையான ஊக்கத்தையும் உயிர்த்தெழுதல் நமக்கு அளிக்கிறது. நாம் மரித்தோரிலிருந்து எழுந்து, தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட நமது இறுதி நியாயத்தீர்ப்பிற்குச் செல்லும்போது, உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட மிகச் சிறந்த ஆசீர்வாதங்களுக்கு நாம் தகுதி பெற விரும்புகிறோம்.2

படம்
நாம் என்றென்றும் குடும்பங்களாக வாழ முடியும்.

கூடுதலாக, உயிர்த்தெழுதல் நமது குடும்ப உறுப்பினர்களுடன், கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் சந்ததியினருடன் இருப்பதற்கான வாய்ப்பை உள்ளடக்கியது என்ற வாக்குறுதியானது, பூலோக வாழ்க்கையில் நமது குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான ஒரு வல்லமையான ஊக்குவித்தல் ஆகும். இந்த வாழ்க்கையில் அன்புடன் ஒன்றாக வாழவும் இது உதவுகிறது, மேலும் இது நமது அன்புக்குரியவர்களின் மரணத்தில் நமக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த பூலோக பிரிவினைகள் தற்காலிகமானவை என்பதை நாம் அறிவோம், மேலும் எதிர்கால சந்தோஷமான திரும்பச் சேர்தலையும் மற்றும் உறவுகளையும் நாம் எதிர்பார்க்கிறோம். உயிர்த்தெழுதல் நமக்கு நம்பிக்கையையும், நாம் காத்திருக்கும்போது பொறுமையாக இருக்க பலத்தையும் அளிக்கிறது. எதிர்பாராதது என அழைக்கப்படும் மரணமும் கூட, நம்முடைய சொந்த மரணத்தை எதிர்கொள்ள தைரியம் மற்றும் கண்ணியத்துடன் நம்மை ஆயத்தப்படுத்துகிறது.

உயிர்த்தெழுதலின் இந்த விளைவுகள் அனைத்தும் “இயேசு கிறிஸ்து எனக்கு என்ன செய்திருக்கிறார்?” என்ற கேள்விக்கான முதல் பதிலின் ஒரு பகுதியாகும்.

II.

நம்மில் பெரும்பாலோருக்கு, நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கான வாய்ப்பு இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் முக்கிய காரணமாகும். ஆராதனையில், நாம் பயபக்தியுடன் பாடுகிறோம்:

அவரது விலைமதிப்பற்ற இரத்தத்தை அவர் இலவசமாக சிந்தினார்;

அவர் இலவசமாகத் தன் ஜீவனைக் கொடுத்தார்.

குற்றத்திற்காக பாவமில்லாத பலி,

ஒரு இறக்கும் உலகத்தை இரட்சிக்க.3

மனந்திரும்புகிற எல்லா மனிதர்களின் பாவங்களுக்கும் ஒரு பலியாக ஆக, நம்முடைய இரட்சகரும் மீட்பருமானவர் புரிந்துகொள்ள முடியாத துன்பத்தை சகித்தார். இந்த பாவநிவாரண பலியானது, தீமைக்கான இறுதி அளவிற்காக, முழு உலகத்தின் பாவங்களுக்கும், இறுதி நன்மையான, கறை இல்லாத தூய ஆட்டுக்குட்டியை வழங்கியது. நம்முடைய நித்திய பிதாவாகிய தேவனுடைய பிரசன்னத்தில் நாம் திரும்பவும் சேர்க்கப்படும்படிக்கு, நம்முடைய தனிப்பட்ட பாவங்களிலிருந்து நாம் ஒவ்வொருவரும் சுத்திகரிக்கப்படுவதற்கான கதவை அது திறந்தது. இந்த திறந்த கதவு தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் திறந்திருக்கிறது. ஆராதனையில், நாம் பாடுகிறோம்:

அவர் தெய்வீக சிம்மாசனத்திலிருந்து இறங்குவார் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்

என்னைப் போல கலகமும் பெருமையுமுள்ள ஒரு ஆத்மாவை மீட்க,

அவர் என்னைப் போன்றவர்களிடம் தனது மிகுந்த அன்பை கொடுக்கும்படியாக.4

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் அற்புதமான மற்றும் புரிந்துகொள்ள முடியாத தாக்கம், நம் ஒவ்வொருவருக்கும் தேவன் வைத்திருக்கும் அன்பை அடிப்படையாகக் கொண்டது. “ஒவ்வொரு மனுஷனின் ஆத்துமாவின் மதிப்பு, தேவனின் பார்வையில் பெரிதாயிருக்கிறது” என்ற அவரது பிரகடனத்தை இது உறுதி செய்கிறது.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10). வேதாகமத்தில் நமது பரலோக பிதாவின் அன்பை இந்த வார்த்தைகளில் விளக்கினார்: “தன் ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, தன் ஒரே பேறான குமாரனைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”(யோவான் 3:16). தற்கால வெளிப்பாட்டில் நம்முடைய மீட்பர் இயேசு கிறிஸ்து அவர் “தம்மை விசுவாசிக்கிறவர்கள் தேவனுடைய குமாரர்களாக ஆகும்படிக்கு அவர் தம்முடைய ஜீவனைக் கொடுக்கும்படிக்கு, உலகத்தில் அன்புகூர்ந்தார்,”( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 34:3).

“கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடாகிய,” மார்மன் புஸ்தகம் “பரிபூரணராகவும்” “கிறிஸ்துவில் பரிசுத்தப்படவும்” நாம் “தேவனை [நமது] முழு, ஊக்கத்தோடும், மனதோடும், பெலனோடும் நேசிக்க வேண்டும்” என்ற போதனையோடு முடிவதில் எந்த ஆச்சரியமுமுண்டா? (மரோனி 10:32-33). அன்பினால் தூண்டப்பட்ட அவரது திட்டம் அன்போடு பெறப்பட வேண்டும்.

III.

நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நமக்காக வேறு என்ன செய்திருக்கிறார்? தம்முடைய தீர்க்கதரிசிகளின் போதனைகள் மூலமாகவும், அவருடைய தனிப்பட்ட ஊழியத்தின் மூலமாகவும், இரட்சிப்பின் திட்டத்தை இயேசு நமக்குக் கற்பித்தார். இந்தத் திட்டத்தில் சிருஷ்டிப்பு, வாழ்க்கையின் நோக்கம், எதிர்ப்பின் அவசியம் மற்றும் சுயாதீன வரம் ஆகியவை அடங்கும். நாம் கீழ்ப்படிய வேண்டிய கட்டளைகளையும் உடன்படிக்கைகளையும், நம்முடைய பரலோக பெற்றோரிடம் நம்மை அழைத்துச் செல்ல நாம் அனுபவிக்க வேண்டிய நியமங்களையும் அவர் நமக்குக் கற்பித்தார்.

படம்
மலைப்பிரசங்கம்

அவருடைய போதனையை வேதாகமத்தில் வாசிக்கிறோம், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்”(யோவான் 8:12). தற்கால வெளிப்பாட்டில் நாம் வாசிக்கிறோம், “இதோ, நான் இயேசு கிறிஸ்து, இருளில் மறைக்க முடியாத ஒரு ஒளி” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:9). அவருடைய போதனைகளை நாம் பின்பற்றினால், அவர் இந்த வாழ்க்கையில் நம் பாதையை ஒளிரச் செய்கிறார், அடுத்த வாழ்க்கையில் நமது இலக்கை உறுதிப்படுத்துகிறார்.

அவர் நம்மை நேசிப்பதால், இந்த உலக விஷயங்களுக்குப் பதிலாக, அவரிடம் கவனம் செலுத்தும்படி அவர் நமக்கு சவால் விடுகிறார். ஜீவ அப்பம் குறித்த தனது மாபெரும் பிரசங்கத்தில், உலக விஷயங்களில்—பூமியில் வாழ்க்கையை தாங்கும், ஆனால் நித்திய ஜீவனை போஷிக்காத விஷயங்களால் அதிகம் ஈர்க்கப்படுபவர்களிடையே நாம் இருக்கக்கூடாது என்று இயேசு போதித்தார்.5 “என் பின்னே வா,” என இயேசு நம்மை மீண்டும் மீண்டும் அழைத்தார்.6

IV.

இறுதியாக, மார்மன் புஸ்தகம் அவருடைய பாவநிவர்த்தியின் ஒரு பகுதியாக, இயேசு கிறிஸ்து “ஜனங்களுடைய துன்பங்களையும் நோய்களையும் தம்மேல் ஏற்றுக் கொள்வார், என்ற வசனம் நிறைவேறும்படியாய் அவர் புறப்பட்டுப் போய் சகல வித துன்பங்களையும் உபத்திரவங்களையும் சோதனைகளையும் அனுபவிப்பார்”(ஆல்மா 7:11).

“எல்லா வகையான” இந்த உலகத்தின் சவால்களை நம் இரட்சகர் ஏன் அனுபவித்தார்? தம் ஜனத்தைக் கட்டியிருக்கிற மரணக் கட்டுக்களை அவிழ்க்கும்பொருட்டு, அவர்களது குறைகளை தம்மீது ஏற்றுக்கொள்வார், தம்முடைய ஜனங்களின் பெலவீனங்களுக்குத் தக்கதாய், அவர்களுக்கு மாம்சத்திற்கேற்ப, ஒத்தாசை புரிவதெப்படி [அதாவது நிவாரணம் அல்லது உதவி கொடுக்க] என்று தாம் அறிந்துகொள்ளும்படிக்கும் மாம்ச தன்மைக்கேற்ப தம் உருக்கமான இரக்கத்தினால் நிறைக்கப்படும்படிக்கும், அவர்களுடைய பெலவீனங்களைத் தம்மேல் ஏற்றுக்கொள்வார்”(ஆல்மா 7:12).

படம்
கெத்செமனேயில் கிறிஸ்து

நம்முடைய இரட்சகர் தம்முடைய சோதனையையும், நம் போராட்டங்களையும், மன வேதனையையும், நம்முடைய துன்பங்களையும் உணர்கிறார், அறிவார், ஏனென்றால் அவர் அனைத்தையும் அவருடைய பிராயச்சித்தத்தின் ஒரு பகுதியாக அவர் மனமுவந்து அனுபவித்தார். மற்ற வேதங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. புதிய ஏற்பாடு அறிவிக்கிறது, “ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.” (எபிரெயர் 2:18). ஏசாயா போதிக்கிறான், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10). எந்தவிதமான உலகப்பிரகார பலவீனங்களையும் அனுபவிக்கும் அனைவருமே, நம் இரட்சகர் அந்த மாதிரியான வேதனையையும் அனுபவித்ததை நினைவில் கொள்ள வேண்டும், மேலும் அவருடைய பிராயச்சித்தத்தின் மூலம் அதை தாங்குவதற்கான பலத்தை அவர் நம் ஒவ்வொருவருக்கும் அளிக்கிறார்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் இவை அனைத்தையும் நமது மூன்றாவது விசுவாசப் பிரமாணத்தில் சுருக்கமாகக் கூறினார்: “சுவிசேஷத்தின் நியாயப் பிரமாணங்களுக்கும், நியமங்களுக்கும், கீழ்ப்படிவதால், கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் மனித இனம் இரட்சிக்கப்படும் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்.”

“கிறிஸ்து எனக்காக என்ன செய்திருக்கிறார்?” அச்சகோதரி கேட்டாள். நாம் ஒவ்வொருவரும் நம் தெய்வீக இலக்கைத் தேடுவதற்குத் தேவையான பூலோக அனுபவத்தைப் பெற முடியும்படிக்கு, நம்முடைய பரலோக பிதாவின் திட்டத்தின் கீழ், அவர் “வானங்களையும் பூமியையும் படைத்தார்.” ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:9) பிதாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மரணத்தை வென்று நம் ஒவ்வொருவருக்கும் அழியாமையை உறுதிப்படுத்தியது. இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலி நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி, நம்முடைய பரலோக வீட்டிற்கு சுத்தமாக திரும்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அவருடைய கட்டளைகளும் உடன்படிக்கைகளும் நமக்கு வழியைக் காட்டுகின்றன, மேலும் அந்த இலக்கை அடைவதற்கு அவசியமான கட்டளைகளை நிறைவேற்ற அவருடைய ஆசாரியத்துவம் அதிகாரம் அளிக்கிறது. நம்முடைய இரட்சகர் நம்முடைய பூலோக துன்பங்களில் நம்மை பலப்படுத்துவது எப்படி என்று அவர் அறியும்படிக்கு அனைத்து உலகப்பிரகார வலிகளையும் பலவீனங்களையும் மனமுவந்து அனுபவித்தார்.

படம்
இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் நேசிப்பதால் இவை அனைத்தையும் செய்தார். எல்லாவற்றிற்கும் அன்புதான் தூண்டுதலாகும், அது ஆரம்பத்திலிருந்தே இருந்தது. தற்கால வெளிப்படுத்துதலில் தேவன் நமக்குச் சொல்லியிருக்கிறார், “அவர் ஆணையும் பெண்ணையும் தன் சாயலில் படைத்தார்… மேலும் அவர்கள் அவரை நேசிக்கவும் சேவை செய்யவும் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தார்”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:18–19).

நம்முடைய இரட்சகர் நம் ஒவ்வொருவருக்கும் செய்ததை நாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நாம் அனைவரும் அவரை நேசித்து சேவை செய்வோம் என்றும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவை அனைத்தைக் குறித்தும் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.