பொது மாநாடு
“எனது சுவிசேஷத்தின் கொள்கைகள்”
ஏப்ரல் 2021 பொது மாநாடு


“எனது சுவிசேஷத்தின் கொள்கைகள்”

(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:12)

ஒரு சுவிசேஷக் கொள்கை என்பது ஒழுக்க சுயாதீனத்தின் நீதியான பிரயோகத்துக்கான கோட்பாட்டு அடிப்படையிலான வழிகாட்டுதலாகும்.

அக்டோபர் 1849ல் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பொது மாநாட்டில், பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் ஜான் டெய்லர், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக பிரான்ஸ் தேசத்தைத் திறக்க அழைக்கப்பட்டார். அவரது சேவையில் அந்த நாட்டில் முதல் அதிகாரப்பூர்வ சபை இதழைப் பிரசுரிப்பதும் அடங்கும். மூப்பர் டெய்லர் சபையைப்பற்றி அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக 1851ல் ஒரு கட்டுரையைத் தயாரித்து வெளியிட்டார். அந்த கட்டுரையின் முடிவில், மூப்பர் டெய்லர் பின்வரும் அத்தியாயத்தை நினைவு கூர்ந்தார்:

“சில ஆண்டுகளுக்கு முன்பு, நாவூவில், நான் கேள்விப்பட்ட வகையில் ஒரு பண்புள்ளவர், சட்டமன்ற உறுப்பினர், இவ்வளவு ஜனங்களை ஆளுகை செய்யவும், அத்தகைய சரியான ஒழுங்கைக் காக்கவும் அவருக்கு எவ்வாறு ஆற்றல் கிடைத்தது என்று ஜோசப் ஸ்மித்திடம் கேட்டார்; வேறு எங்கும் அதை அவர்களால் செய்ய இயலாது என்று அதே நேரத்தில் அவர் குறிப்பிட்டார். திரு ஸ்மித் அதைச் செய்வது மிகவும் எளிதானது என்று குறிப்பிட்டார். ‘எப்படி? எங்களுக்கு இது மிகவும் கடினம்.’ என்று பதிலளித்தார் அந்த கனவான். திரு. ஸ்மித் பதிலளித்தார், ‘நான் அவர்களுக்கு சரியான கொள்கைகளை கற்பிக்கிறேன், அவர்கள் தங்களை ஆளுகை செய்கிறார்கள்.’”1

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தில், கொள்கைகளின் முக்கிய பங்கை நான் வலியுறுத்துவதால் பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி திருத்துவார் என நான் ஜெபிக்கிறேன்.

கொள்கைகள்

“இந்த சபையின் மூப்பர்கள், ஆசாரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என் கொள்கைகளை, வேதாகமத்திலும் மார்மன் புஸ்தகத்திலும் உள்ள சுவிசேஷத்தை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு கற்பிப்பார்கள், அதில் சுவிசேஷத்தின் முழுமை உள்ளது” என்று கர்த்தர் வெளிப்படுத்தினார்.2 பிற்காலப் பரிசுத்தவான்கள் “கருத்திலும், கொள்கையிலும், கோட்பாட்டிலும், சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணத்தை, தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றிய எல்லா விஷயங்களிலும், நீங்கள் புரிந்துகொள்வதற்கு உகந்ததாக அறிவுறுத்த வேண்டும்” என அவர் அறிவுறுத்தினார்.3

சுருக்கமாகக் கூறப்பட்டால், ஒரு சுவிசேஷக் கொள்கை என்பது ஒழுக்க சுயாதீனத்தின் நீதியான பிரயோகத்துக்கான கோட்பாட்டு அடிப்படையிலான வழிகாட்டுதலாகும். கொள்கைகள் பரந்த சுவிசேஷ சத்தியங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் உடன்படிக்கை பாதையில் நாம் முன்னேறும்போது திசையையும் தரத்தையும் வழங்குகின்றன.

உதாரணமாக, விசுவாசத்தின் முதல் மூன்று கட்டுரைகள் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் கோட்பாட்டின் அடிப்படை அம்சங்களை அடையாளம் காண்கின்றன: முதலாம் விசுவாசப் பிரமாணத்தில் தேவத்துவத்தின் தன்மை, இரண்டாம் விசுவாசப் பிரமாணத்தில், ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியின் விளைவுகள்,மூன்றாவது விசுவாசப்பிரமாணத்தில் இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தி மூலம் ஆசீர்வாதம் சாத்தியமானது.4 நான்காவது விசுவாசப் பிரமாணத்தில் விசுவாசத்தின் முதல் கொள்கைகளை முன்வைக்கிறது, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கும் மனந்திரும்புவதற்கும் வழிகாட்டுதல்கள்— இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி நம் வாழ்வில் திறம்பட செயல்பட உதவும் முதல் ஆசாரியத்துவ நியமங்கள்.5

வழிகாட்டுதலின் கொள்கையின் மற்றொரு எடுத்துக்காட்டு ஞான வார்த்தை. இந்த அறிமுக வசனங்களை கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 89ல் கவனியுங்கள்:

“வாக்குறுதியுடன் ஒரு கொள்கையாக வழங்கப்பட்டதாவது, பலவீனமானவர்களின் திறன் மற்றும் அனைத்து பரிசுத்தவான்களிலும் பலவீனமானவர்கள், அல்லது பரிசுத்தவான்கள் என அழைக்கப்படுபவர்கள்.

“இதோ, மெய்யாகவே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்: கடைசி நாட்களில் சதி செய்யும் மனிதர்களின் இருதயங்களில் நிகழும் மற்றும் இருக்கும் தீமைகள் மற்றும் வடிவமைப்புகளின் விளைவாக, இந்த ஞான வார்த்தையை உங்களுக்குக் கொடுப்பதன் மூலம் நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்தேன், முன்னறிவிக்கிறேன்.”6

இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து வரும் உணர்த்தப்பட்ட அறிவுறுத்தல், சரீர மற்றும் ஆவிக்குரிய நல்வாழ்வுக்கான நீடித்த வழிகாட்டுதல்களை வழங்குகிறது, மேலும் கொள்கையில் நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆசீர்வாதங்களைத் தருவதாக சாட்சியளிக்கிறது.

கற்றல், புரிந்துகொள்ளுதல் மற்றும் சுவிசேஷ கொள்கைகள்படி வாழுதல் இரட்சகரின் மீதான நம் நம்பிக்கையை பலப்படுத்துகின்றன, அவர்மீது நம்முடைய அர்ப்பணிப்பை ஆழப்படுத்துகின்றன, மேலும் ஏராளமான ஆசீர்வாதங்களையும் ஆவிக்குரிய வரங்களையும் நம் வாழ்வில் அழைக்கின்றன. அநித்தியத்தின் வெவ்வேறு சூழ்நிலைகள், சவால்கள், முடிவுகள் மற்றும் அனுபவங்கள் வழியே நாம் செல்லும்போது நித்திய சத்தியத்தின் விலைமதிப்பற்ற முன்னோக்கை வழங்குவதன் மூலம் நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கும் சுயநல ஆசைகளுக்கும் அப்பால் பார்க்க நீதியின் கொள்கைகளும் நமக்கு உதவுகின்றன.

சரியான கோட்பாடுகளை கற்பிப்பதற்கான தற்கால எடுத்துக்காட்டுகள்

சரியான கொள்கைகளை கற்பிப்பது குறித்து தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் அறிக்கை ஒருவேளை அவர் அடிக்கடி மேற்கோள் காட்டிய போதனைகளில் ஒன்றாகும். இன்று கர்த்தரின் அதிகாரமளிக்கப்பட்ட ஊழியர்களின் அறிவிப்புகளில் இந்த உணர்த்தப்பட்ட வழிமுறையின் வல்லமையான எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

கவனச்சிதறல் இல்லாத கொள்கை

தலைவர் டாலின் எச். ஓக்ஸ், 1998 ஆம் ஆண்டில் பொது மாநாட்டில் திருவிருந்து ஆயத்தம் செய்தல் மற்றும் நிர்வகித்தலில் ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்களின் கடமைகளைப்பற்றி பேசினார். அவர் கவனச்சிதறல் கொள்கையை விவரித்தார், மேலும் ஆரோனிய ஆசாரியத்துவத்தை தரித்திருப்பவர் சபையின் எந்தவொரு உறுப்பினரையும் அவரது வழிபாட்டிலிருந்தும் உடன்படிக்கைகளை புதுப்பிப்பதிலிருந்தும் திசைதிருப்ப அவரது தோற்றத்திலோ அல்லது நடத்தையிலோ எதையும் விரும்புவதில்லை என்று சுட்டிக்காட்டினார். தலைவர் ஓக்ஸ் ஒழுங்குமுறை, தூய்மை, பயபக்தி மற்றும் கண்ணியம் தொடர்பான கொள்கைகளையும் வலியுறுத்தினார்.

சுவாரஸ்யமாக, தலைவர் ஓக்ஸ் இளைஞர்களுக்கு செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களின் நீண்ட பட்டியலை வழங்கவில்லை. மாறாக, இளைஞர்களும், அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்கள் சொந்த நிதானிப்பையும் உணர்த்துதலையும் பயன்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் கொள்கையை விளக்கினார்.

அவர் விளக்கினார், “நமது உலகளாவிய சபையின் பல்வேறு தொகுதிகள் மற்றும் கிளைகளில் உள்ள சூழ்நிலைகள் மிகவும் வித்தியாசமாக இருப்பதால், விரிவான விதிமுறைகளை நான் பரிந்துரைக்க மாட்டேன், ஒரு அமைப்பில் தேவைப்படுவதாகத் தோன்றும் ஒரு குறிப்பிட்ட விதி மற்றொரு அமைப்பில் பொருத்தமற்றதாக இருக்கலாம். மாறாக, கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு கொள்கையை நான் பரிந்துரைக்கிறேன். எல்லோரும் இந்த கொள்கையைப் புரிந்துகொண்டு அதற்கு இணங்க செயல்பட்டால், விதிகளுக்கு சிறிதளவே தேவை இருக்கும். தனிப்பட்ட நிகழ்வுகளில் விதிகள் அல்லது ஆலோசனை தேவைப்பட்டால், உள்ளூர் தலைவர்கள் கோட்பாடுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடைய கொள்கைகளுக்கும் இணங்க அவற்றை வழங்க முடியும்.”7

ஒரு அடையாளமாக ஓய்வுநாளின் கொள்கை

ஏப்ரல் 2015 பொது மாநாட்டில், தலைவர் ரசல் எம். நெல்சன் “ஓய்வுநாள் ஒரு மகிழ்ச்சி” என்று நமக்குக் கற்பித்தார்.8 ஓய்வுநாளை கனம்பண்ணுவது குறித்த அடிப்படைக் கொள்கையை அவர் தனிப்பட்ட முறையில் எவ்வாறு புரிந்து கொண்டார் என்பதையும் அவர் விளக்கினார்:

“நாம் எப்படி ஓய்வுநாளை பரிசுத்தப்படுத்துகிறோம்? நான் இளைஞைனாக இருந்த ஆண்டுகளில், செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல்களையும், ஓய்வுநாளில் செய்யக் கூடாத பட்டியலையும் தொகுத்த மற்றவர்கள் எழுதியவைகளைப் படித்தேன். வேதங்களிலிருந்து நான் கற்கும் வரை எனக்கும் என் பரலோக பிதாவுக்கும் இடையில் ஓய்வுநாளில் என் நடத்தை மற்றும் எனது அணுகுமுறை அடையாளம் ஆனது. அந்த புரிதலுடன், எனக்கு இனியும் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத பட்டியல்கள் தேவையில்லை. ஒரு செயல்பாடு ஓய்வுநாளுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதுபற்றி நான் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தபோது, நான் வெறுமனே என்னையே கேட்டுக்கொண்டேன், ‘தேவனுக்கு என்ன அடையாளத்தை கொடுக்க விரும்புகிறேன் ?’ அந்த கேள்வி ஓய்வு நாளைப்பற்றிய எனது தேர்ந்தெடுப்புகளை படிகத் தெளிவாக்கியது.”9

தலைவர் நெல்சனின் எளிமையான ஆனால் சக்திவாய்ந்த கேள்வி, ஒரு கொள்கையை வலியுறுத்துகிறது, ஓய்வுநாளைக் கனம் பண்ணுவது என்பதன் அர்த்தம் என்ன, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் எந்த நிச்சயமற்ற தன்மையையும் குறைக்கிறது. அவரது கேள்வி நமது மாறுபட்ட சூழ்நிலைகளில் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கக்கூடிய ஒரு வழிகாட்டுதலையும் தரத்தையும் சுருக்கமாகக் கூறுகிறது.

தேவன் ஜெயம்பெற சித்தமாயிருப்பதற்கான கொள்கை

ஆறு மாதங்களுக்கு முன்பு பொது மாநாட்டில், தலைவர் நெல்சன் அவர் இஸ்ரவேல் என்ற வார்த்தையின் பொருளைப்பற்றிய புதிய உள்ளுணர்வுக்கு வழிநடத்தப்பட்ட, தனது தனிப்பட்ட மகிழ்ச்சியை விவரித்தார். “இஸ்ரவேல் எனும் பெயரே தன் வாழ்க்கையில் தேவன் ஜெயம் கொள்ள சித்தமாயிருக்கிற ஒருவரைக் குறிப்பிடுகிறது, என கற்றபோது அவருடைய ஆத்துமா குலுக்கப்பட்டது என அவர் நம்மிடம் சொன்னார்.”10 தலைவர் நெல்சன் இந்த உள்ளுணர்விலிருந்து பெறப்பட்ட பல முக்கியமான தாக்கங்களை அடையாளம் கண்டார்.

தேவன் ஜெயங்கொள்ள அனுமதிக்க சித்தமாக இருப்பதைப்பற்றிய அவரது செய்தி, நாம் நம்மை ஆளுகை செய்வதைப்பற்றிய சரியான கொள்கைகளை கற்பிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு. ஓய்வுநாளை மகிழ்ச்சியாக்குதலைப்பற்றிய தனது செய்தியில் அவர் செய்ததைப் போலவே, தலைவர் நெல்சன் கொள்கை அடிப்படையிலான கேள்விகளை முன்வைத்தார், அவை நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டிகளாகவும் தரமாகவும் செயல்படுகின்றன.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவன் ஜெயங்கொள்ள அனுமதிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கு, தேவனாக இருக்க அனுமதிக்கிறீர்களா?

அவர் தொடர்கிறார்:

“அத்தகைய விருப்பம் உங்களை எவ்வாறு ஆசீர்வதிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் நித்திய இணையைத் தேடுகிறீர்களானால், “இஸ்ரவேலில்” இருப்பதற்கான உங்கள் விருப்பம் யாரோடு, எப்படி பழகுவீர்கள் என்பதைத் தீர்மானிக்க உதவும்.

“உடன்படிக்கைகளை மீறிய ஒரு இணையை நீங்கள் திருமணம் செய்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் தேவன் மேற்கொள்ள அனுமதிக்க உங்கள் விருப்பம் தேவனுடனான உங்கள் உடன்படிக்கைகள் அப்படியே இருக்க அனுமதிக்கும். உங்கள் நொறுங்கிய இருதயத்தை இரட்சகர் குணப்படுத்துவார். நீங்கள் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதை அறிய முற்படும்போது பரலோகம் திறக்கும். நீங்கள் அலையவோ ஆச்சரியப்படவோ தேவையில்லை.

“நீங்கள் சுவிசேஷத்தைப்பற்றியோ அல்லது சபையைப்பற்றியோ உண்மையான கேள்விகள் வைத்திருந்தால், தேவன் மேற்கொள்ள அனுமதிக்க நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும், உடன்படிக்கை பாதையில் உறுதியாக இருக்க உதவும் முழுமையான, நித்திய சத்தியங்களைக் கண்டுபிடித்து புரிந்துகொள்ள நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள்.

“நீங்கள் சோதனையை எதிர்கொள்ளும்போது, நீங்கள் சோர்வாக இருக்கும்போது அல்லது தனியாக உணரும்போது அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்போது கூட சோதனையானது வந்தாலும், தேவன் உங்கள் வாழ்க்கையில் மேற்கொள்ள அனுமதிக்கும்போது, உங்களை பலப்படுத்தும்படி அவரிடம் மன்றாடும்போது நீங்கள் பெறக்கூடிய தைரியத்தை கற்பனை செய்து பாருங்கள்.

“இஸ்ரவேலின் ஒரு பகுதியாக இருக்க, தேவன் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே உங்கள் மிகப்பெரிய விருப்பமாக இருக்கும்போது, பல முடிவுகள் எளிதாகின்றன. பல சிக்கல்கள் இல்லாமல் போகின்றன! உங்களை எப்படி அலங்கரிப்பது என்பது உங்களுக்குத் தெரியும். எதைப் பார்ப்பது, படிப்பது, உங்கள் நேரத்தை எங்கு செலவிடுவது, யாருடன் தொடர்பிலிருப்பது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் உண்மையிலேயே ஆக விரும்பும் அந்த விதமான நபரை நீங்கள் அறிவீர்கள்.”11

தேவன் ஜெயங்கொள்ள அனுமதிக்க சித்தமாக இருப்பது என்ற கொள்கையால் எத்தனை முக்கியமான முடிவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் செல்வாக்கு பெறலாம் என்பதைக் கவனியுங்கள்: பழகுதல் மற்றும் திருமணம், சுவிசேஷ கேள்விகள் மற்றும் அக்கறைகள், சோதனை, தனிப்பட்ட அலங்காரம், எதைப் பார்ப்பது மற்றும் வாசிப்பது, எங்கு நேரம் செலவிட வேண்டும், யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் மற்றும் பல, இன்னும் பல. தலைவர் நெல்சனின் உணர்த்தப்பட்ட கேள்விகள் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வழிகாட்டும் ஒரு எளிய கொள்கையை வலியுறுத்துகின்றன, மேலும் நம்மை நாமே ஆளுகை செய்ய சாத்தியமாக்குகிறது.

ஒரு மிகச் சிறிய சுக்கான்

ஜோசப் ஸ்மித் லிபர்ட்டி சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர் சபையாருக்கும் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதங்களை எழுதி அவர்களுக்கு நினைவுபடுத்தினார்: “ஒரு பெரிய கப்பல் ஒரு புயலின் போது, காற்று மற்றும் அலைகளுடன் பாதையை சரியாக வைத்திருப்பதன் மூலம், மிகச் சிறிய சுக்கானால் மிகவும் பயனடைகிறது.“12

படம்
கப்பலின் சுக்கான்

ஒரு “சுக்கான்” என்பது ஒரு சக்கரம் அல்லது டில்லர் மற்றும் ஒரு கப்பல் அல்லது படகில் உபயோகப்படுத்தப்படுதல் தொடர்புடைய உபகரணம். மேலும் “காற்று மற்றும் அலைகளுடன் பாதையை சரியாக வைத்திருப்பது” ஒரு கப்பலைத் திருப்புவதைக் குறிக்கிறது, இதனால் அது அதன் சமநிலையைப் பராமரிக்கிறது மற்றும் புயலின் போது கவிழாது.

படம்
புயலில் கப்பல் திரும்புதல்

சுவிசேஷ கொள்கைகள் எனக்கும் உங்களுக்கும் ஒரு கப்பலுக்கு ஒரு சுக்கான் போன்றவை. சரியான கொள்கைகள் நம் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், உறுதியான, திடமான, மற்றும் அசைக்க முடியாததாகவும் நிற்க உதவுகின்றன, எனவே நம்முடைய சமநிலையை இழந்து, இருள் மற்றும் குழப்பத்தின் சீறி வரும் புயல்களில் நாம் விழுவதில்லை.

கர்த்தருடைய அதிகாரம் பெற்ற ஊழியர்களிடமிருந்து நித்தியக் கொள்கைகளைப்பற்றி அறிய இந்த பொது மாநாட்டில் நாம் ஏராளமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது, அவர்கள் சாட்சியளித்த சத்தியங்களுக்கு ஏற்ப நம்மை நாமே ஆளுகை செய்வதே நமது தனிப்பட்ட பொறுப்பு.13

சாட்சி

தலைவர் எஸ்றா டாஃப்ட் பென்சன் போதித்தார், “அடுத்த ஆறு மாதங்களுக்கு, [ லியாஹோனா]வின் உங்கள் மாநாட்டு பதிப்பு உங்கள் தரமான பணிகளுக்கு அடுத்ததாக நிற்க வேண்டும், மேலும் அவை அடிக்கடி பார்க்கப்பட வேண்டும்.”14

என் ஆத்துமாவின் அனைத்து ஆற்றலுடனும், நீதியின் கொள்கைகளை கற்றுக்கொள்ளவும், வாழவும், நேசிக்கவும் நம் அனைவரையும் அழைக்கிறேன். உடன்படிக்கைப் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கும், “தேவனுடைய இரட்சிப்பைக் காண்பதற்கும், அவருடைய கரம் வெளிப்படுவதற்கும்” சுவிசேஷ சத்தியங்களால் மட்டுமே “நம்முடைய வல்லமைக்குள் உள்ள எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் செய்ய” உதவ முடியும்.15

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கோட்பாடும் கொள்கைகளும் நம் வாழ்வின் வழிநடத்துதலுக்கான அடித்தள ஆதாரங்கள் மற்றும் உலகம் மற்றும் நித்தியத்தில் நமது வாழ்க்கையில் நீடித்த மகிழ்ச்சிக்கான ஆதாரங்கள் என்பதை நான் அறிவேன். இந்த மகிமையான ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை, இந்த சத்தியங்கள் பாயும் நீரூற்றுதான் நம்முடைய உயிருள்ள இரட்சகர் என்பதை நான் மகிழ்ச்சியுடன் சாட்சியமளிக்கிறேன். அப்படியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. John Taylor, in Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 284.

  2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:12.

  3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:78.

  4. விசுவாசப் பிரமாணங்கள் 1:1–3 பார்க்கவும்.

  5. விசுவாசப் பிரமாணங்கள் 1:4 பார்க்கவும்.

  6. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:3-4.

  7. Dallin H. Oaks, “The Aaronic Priesthood and the Sacrament,” Liahona, Jan. 1999, 45–46.

  8. Russell M. Nelson, “The Sabbath Is a Delight,” Liahona, May 2015, 129–32 பார்க்கவும்.

  9. Russell M. Nelson, “The Sabbath Is a Delight,” 130; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது.

  10. Russell M. Nelson, “Let God Prevail,”Liahona, Nov. 2020, 92.

  11. Russell M. Nelson, “Let God Prevail,” 94.

  12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 123:16.

  13. தலைவர் ஹரால்ட் பி. லீ (1899-1973) மாநாட்டின் செய்திகள், “அடுத்த ஆறு மாதங்களில் அவர்களின் நடை மற்றும் பேச்சுக்கு வழிகாட்டியாக இருக்க” அனுமதிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். அவர் விளக்கினார், “இந்த நாளில் இந்த மக்களுக்கு வெளிப்படுத்த கர்த்தர், தகுதியானவை என கருதும் முக்கியமான விஷயங்கள் இவை” (in Conference Report, Apr. 1946, 68).

    தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் (1895-1985) பொது மாநாட்டு செய்திகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அவர் கூறினார், “சபையின் தரமான புத்தகங்களுக்கு வெளியே எந்தவொரு உரையும் அல்லது தொகுதியும் உங்கள் தனிப்பட்ட நூலக அலமாரிகளில் அத்தகைய முக்கிய இடத்தைப் பெறக்கூடாது, அவற்றின் சொல்லாட்சிக் கலை சிறப்பிற்காகவோ அல்லது வழங்குவதற்கான சொற்பொழிவுக்காகவோ அல்ல, மாறாக நித்திய ஜீவனுக்கான வழியைக் குறிக்கும் கருத்துகளுக்கு மட்டுமே” (In the World but Not of, Brigham Young University Speeches of the Year [May 14, 1968], 3).

    தலைர் தாமஸ் எஸ். மான்சன் (1927–2018) மாநாட்டு செய்திகளைப் படிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவர் கூறினார்: “இந்த பொது மாநாட்டின் போது நாம் கேள்விப்பட்டதை நீண்ட காலமாக நினைவில் கொள்வோமாக. வழங்கப்பட்ட செய்திகள் அடுத்த மாதத்தில் Ensign மற்றும் Liahona இதழ்களில் அச்சிடப்படும். அவற்றைப் படித்து அவற்றின் போதனைகளைப்பற்றி சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” (“Until We Meet Again,” Liahona, Nov. 2008, 106).

  14. Ezra Taft Benson, “Come unto Christ, and Be Perfected in Him,” Ensign, May 1988, 84.

  15. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 123:17.